மஇகா எப்பொழுதும் அனைத்து இன சமயத்தவர்களுடன் சகோதரத்துவதுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது

MIC has always co-existed with people of all ethnicities and religions

மஇகா எப்பொழுதும் அனைத்து இன சமயத்தவர்களுடன் சகோதரத்துவதுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது
மஇகா எப்பொழுதும் அனைத்து இன சமயத்தவர்களுடன் சகோதரத்துவதுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது

Date : 21 March 2022 News By : Sammer 

இந்திய முஸ்லீம் சமய அன்பர்களுடன் நோன்புத் துறப்பு
மஇகா தலைமையகம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நாட்டில் மஇகா எப்பொழுதும் அனைத்து இன சமயத்தவர்களுடன் சகோதரத்துவதுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது. பல்லினங்கள் வாழும் இந்த மலேசிய நாட்டில், அவரவர்களுக்குரிய பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சமயத்தினரும் கொண்டாடும் பண்டிகைகளை மற்ற இனத்தவர்களும் நல்லிணக்கப் போக்குடன்  நோக்க வேண்டும். 

இந்தக் கருத்தினை மையமாக வைத்து, நேற்று இங்குள்ள மஇகாவின் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள, நேதாஜி மண்டபத்தில் மஇகாவில் பொறுப்பேற்றிருக்கும் முஸ்லீம் சமயத் கிளைத் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய சமூகத் தலைவர்களுடனான நோன்பு துறப்பு நிகழ்ச்சி மஇகா தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன்,  மதிப்பிற்குரிய டான்ஸ்ரீ ஹனிபா, மதிப்பிற்குரிய  டத்தோ வீரா ஷாகுல் தாவூத், மதிப்பிற்குரிய டத்தோ இப்ராஹிம் ஷா மற்றும், ஈமான் கட்சித் தலைவர மற்று இந்திய அமைப்புகளின் முஸ்லீம் சங்கத் தலைவர்களும், பொறுப்பாளர்களும் கலந்துச் சிறப்பித்தனர்.

www.myvelicham.com / face book / You tube /Tik Tok