36 வகையான பயிற்சிகளும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தில் இருந்து வருவதாக மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ்
MIC Kedah state president S K Suresh said that all the 36 types of training are from AIIMS
Date :13 April 2025 News By : ANBARASAN SG PETANI
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்றால் மருத்துவத்துறை சார்ந்தது மட்டும்தான் என்ற சிந்தனை பெரும்பாலோரிடம் பரவலான கருத்தாக இருந்து வருகிறது.ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இன்னும் 36 வகையான பயிற்சிகளும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தில் இருந்து வருவதாக மஇகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.கே.சுரேஸ் தெரிவித்தார்.
மஇகா கெடா மாநிலம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தோடு இணைந்து கல்வி யாத்திரை எனும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வில் படிவம் 4,படிவம் 5 மற்றும் படிவம் 6 என கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து இடைநிலப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள்12 மாவட்டங்களில் இருந்து கலந்துக் கொண்டனர்.
.
பொதுவாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் எந்த மாதிரியான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன குறித்தும் அதற்கான சலுகைகள் இங்கு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஒரு அறிவிப்பு நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
இந்த கல்வி யாத்திரை நிகழ்வில் மூன்று இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் பங்கு பெற்றிருந்தனர்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் வசதிகள் குறித்தும் இந்த நிகழ்வில் தெளிவான விளக்கம் தரப்பட்டது.
இங்கு கல்வி பயில்வதற்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் பெறக்கூடிய வருமானத்தை குறித்தும் கல்விக் கடனுடதவி எம்.ஐ.டி மூலமாகவும் அரசாங்கம் மூலமாகவும் பெறமுடியும் என்றார் சுரேஸ்
.
இது மஇகா கெடா மாநில ஏற்பாடாக இருந்தாலும் தேசிய மஇகா மற்றும் அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆதரவோடும் எம்.ஐ.டி.ஆதரவோடு இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இன்னும் இது குறித்து ஆலோசனையோ அல்லது உதவிகள் தேவைப்பட்டால் தம்மிடம் தொடர்புக் கொல்ளுமாறு சுரேஸ் பலத்த கைத்தட்டுதலுக்கிடையே பேசினார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இதுவரை 8ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது என மஇகா உச்சமன்ற உறுப்பினர் எல்.சிவசுப்பிரமணியம் தமது உரையில் குறிப்பிட்டார்.
நமது மஇகா தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தின் வேந்தருமான டத்தோ டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் முக்கிய நோக்கமே குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளும் பட்டதாரியாகவிட என்பதுதான்
.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்தில் பயின்றால் தேசியத் தலைவரின் உபகாரச் சம்பள்ம் கிடைக்கும்,கடனுதவி கிடைக்கும்,ஆதலால் உங்கள் தேர்வு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்க்ழமாக இருக்க வேண்டும்என்றார்.
இதுவரை எம்.ஐ.டி இருநூற்று இருபது மில்லியன் கடனுதவி நமது இந்திய மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறிய அவர் அடுத்த மாதம் ஏய்ம்ஸ்ட் கல்லூரி பெட்டாலிங் ஜெயாவில்திறக்கவிருப்பதாக கூறினார்.
---செய்தி அன்பரசன்
www.myvelicham.com / Face book / Linkendin / Tik Tok / You Tube / Google