மஇகா தொகுதி இளைஞர் தலைவர்கள்  சேவையாற்ற வேண்டும் ரூபராஜ்

MIC youth leaders should serve: Rubaraj

மஇகா தொகுதி இளைஞர் தலைவர்கள்  சேவையாற்ற வேண்டும் ரூபராஜ்
மஇகா தொகுதி இளைஞர் தலைவர்கள்  சேவையாற்ற வேண்டும் ரூபராஜ்

Date :04 March 2025 News By: Ganapathy 

எதிர்கால நலனைக் கருதி  மஇகா தொகுதி இளைஞர் தலைவர்கள்  சேவையாற்ற வேண்டும் ரூபராஜ் கூறினார்    
 இளைஞர் பகுதியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பினாங்கு மாநில இளைஞர் பகுதி, தொகுதி அளவில், அனைத்து தொகுதி இளைஞர் பகுதி உறுப்பினர்களை சந்திக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறது.

அக்கூட்டத்தின் தொடராக, புக்கிட் பெண்டேரா தொகுதி இளைஞர் பகுதி இளைஞர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது.

  

தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் திரு. தினேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திரு. ரூபராஜ் இந்திய இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு, அவர்களின் தேவைகள், இலட்சியங்களை உணர்ந்து சேவையாற்றிட வேண்டும் என்றும், அவர்களுக்கு வழிகாட்டயாக இளைஞர் பகுதியினர் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

 

இக்கூட்டத்திற்கு வருகை புரிந்து ஆதரவு வழங்கிய புக்கிட் பெண்டேரா தொகுதித் தலைவரும், பினாங்கு மாநில இளைஞர் பகுதித் துணைத் தலைவருமான திரு. கேசவன் மற்றும் தொகுதித் துணைத் தலைவரும், மாநில துணைச் செயலாளருமான திரு. ஹை கியாட் பாலா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர். 

www.myvelicham.com Face book Myvelicham.com Tik Tok Myvelichamnews X: myvelichamtv1. advt call me 014-3933002