500 தன்னார்வ தொண்டர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்ற மனிதவள அமைச்சின் மடானி முன்னெடுப்பு திட்டம்
Ministry of Manpower's Madani Initiative Program successfully held with 500 volunteers
Date :13 Feb 2025 News By : Maniventhan
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சின் மடானி முன்னெடுப்பு திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடந்தாண்டு பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் பினாங்கு பாலதண்டாயுதபானி ஆலயத்திலும் வெற்றிகரமாக இத்திட்டம் நடைபெற்றதை அடுத்து இவ்வாண்டும் பத்துமலையிலும், பினாங்கிலும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கெசுமா மடானி திட்டத்தின் மூலம் தைப்பூசத்திற்கு வருபவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க மலேசிய மனிதவள அமைச்சு மேற்கொண்ட முயற்சி சிறந்த பலனை தந்துள்ளது. மேலும் பினாங்கு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஆண்டின் வெற்றியின் அடிப்படையில், மனிதவள அமைச்சு இவ்வாண்டில் அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளின் திட்டங்களோடு மக்களுக்கான கூடுதல் சேவைகளையும், அது தொடர்பான பல கண்காட்சிகளையும் நடத்தியது.
இம்முறை பொதுமக்களுக்கான ஓய்வு கூடங்கள் தைப்பூசத்தன்று பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும், பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திலும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை செயல்படுத்தப்பட்டது. பத்துமலையில் 700 பேர்கள் ஓய்வெடுக்கக்கூடிய கூடராமும், பினாங்கில் 500 பேர்கள் ஓய்வெடுக்கக்கூடிய கூடாரமும் அமைக்கப்பட்டிருந்தது.
தைப்பூச திருவிழாவை சுமூகமாக நடப்பதை உறுதிசெய்ய அயராத பணியில் ஈடுபட்டிருந்த அரச மலேசிய காவல் துறையினர், குப்பைகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள், நகராண்மைக் கழக அதிகாரிகள், முன்கள பணியாளர்களுக்கும் சிறப்பு ஓய்வு அறைகளை ஒதுக்கப்பட்டன.
இம்முறை பத்துமலையில் 300 தன்னார்வ தொண்டர்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவுவதற்காக பினாங்கில் 200 தன்னார்வலர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்களுக்காக சமூக பாதுகாப்பு அமைப்பான சொக்சோ பொதுமக்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை சேவையை வழங்கியது. அதோடு
வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்களையும் வழங்கியது
மேலும் ( misi ) எனப்படும் மலேசிய இந்திய திறன் மேம்பாட்டுத் துறை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நிலைகளுக்கான தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் திவேட் கல்விக்கான பதிவுகளோடு உணவு & பானங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தைப்பூசத்திற்கு வருபவர்களுக்கு தொடர்ந்து பயனளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வையும் இம்முறை பத்துமலை தைப்பூசதிலும் , பினாங்கு தைப்பூசத்திலும் மனிதவள அமைச்சு மேற்கொண்டதாக அமைச்சு தெரிவித்தது.