மனிதவள அமைச்சின் கோல்ஃப் விளையாட்டில் இந்திய சமூகத்திற்கான திறன் பயிற்சி வேலை உத்தரவாத திட்டம்

Ministry of Manpower's Skill Training for Indian Society in Golf Job Guarantee Scheme

மனிதவள அமைச்சின் கோல்ஃப் விளையாட்டில் இந்திய சமூகத்திற்கான திறன் பயிற்சி வேலை உத்தரவாத திட்டம்

Date : 15 Feb 2025 News By:ManiVenthan 

கோல்ஃப் விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்கள் பங்கு பெறும் வகையில் இந்திய சமூகத்திற்கான திறன் பயிற்சி வேலை உத்தரவாத திட்டம் ஒன்றை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

மலேசிய கோல்ஃப் சங்கத்துடன் இணைந்து மனிதவள அமைச்சின் மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பு வாயிலாக  இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
மலேசியாவில் கோல்ஃப் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, உள்ளூர் தொழிலாளர்களின் சந்தைத் தன்மையை அதிகரிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா மலாக்கா அ பாமோஸா கோல்ஃப் ரிசார்ட்டில் நடந்தது, இதில்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பி. சண்முகம் மற்றும் மிசி, மலேசிய கோல்ஃப் சங்கம், ஏ.எம்.எஸ். கேடி அகாடமியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் பயிற்சி மட்டுமல்ல, பங்கேற்பாளர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்வதும் ஆகும். மேலும் உத்தரவாதமான வேலை வாய்ப்பையும் இது வழங்குகிறது. காப்பீட்டுத் பாதுகாப்பு  மற்றும் தொழில் மேம்பாடு போன்ற பலன்களுடன்  மலேசியாவில் கேடி தொழிலுக்கு ( கோல்ஃப் விளையாட்டு வீரரின் உதவியாளர் ) ஒரு புதிய தரத்தை அமைக்க முடியும்.

இந்த முயற்சிக்கு அரசாங்கத்திடமிருந்து மனித வள அமைச்சு ( கெசுமா )  முழு ஆதரவை பெற்றுள்ளது. திறன்கள் மற்றும் நிலையான வேலை வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆட்சிகுழு உறுப்பினர்  டத்தோ பி.சண்முகம் தெரிவித்தார்.

"இந்தப் பயிற்சியானது கேடித் தொழிலை தொழில் முறையாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும் இந்திய இளைஞர்கள் சிறந்த தரமான வேலைகளைப் பெறுவதற்கான வழிகளையும் இது அமைத்து தருகிறது.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதால், மலாக்காவுடன்  நாட்டின் பிற பகுதிகளில் உள்ள அதிகமான  இந்திய  இளைஞர்களை இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்

.

 கேடி அகாடமி 2029 ஆம் ஆண்டிற்குள் 2,300 கேடிகளைப் ( கோல்ஃப் விளையாட்டு உதவியாளர் ) பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு உள்ளூர் பணியாளர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதி செய்யவும், இந்தத் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் மலேசியாவில் கோல்ஃப் தொழிலை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்துடன் இந்த இந்த திட்டம் வரையப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

www.myvelicham.com Face book -Tik Tok - YOU TUBE MYVELICHAM TV