இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய 1.6 பில்லியன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது..
More than ever before A whopping 1.6 billion in drugs Captured . . .

போர்ட் கிள்ளான் மார்ச் 21 News By: Punithaperumal
கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் 1.06 பில்லியன் மதிப்புள்ள மெத்தம்பேட்டமைனை என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதை அடுத்து, மலேசிய இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநடர் டிசிபி மாட் ஜானி முகமட் ஷல்லாஹுன் கூறுகையில், துறைமுகத்தில் உள்ள கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட 33,200 கிலோ கிராம் எடையுள்ள இந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்குள்ள அதிகாரிகள் இரு கொள்கலன்களில் இருந்த போதைப் பொருள் 166 டிரம்களை கண்டு பிடித்தனர்.
இந்த ஏற்றுமதிக்கு பொறுப்பான சிண்டிகேட் அல்லது சர்வதேச அமைப்பை அடையாளங் காணுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் புக்கிட் அமான் கூட்டு ஒத்துழைப்புடன் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் அப்பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.