தாய் முனைவர் , மகள் மருத்துவர் இருவரும் ஒரே நேரத்தில் பட்டம் பெற்று சாதனை

Mother Doctor, Daughter Doctor Both graduated at the same time

தாய் முனைவர் , மகள் மருத்துவர் இருவரும் ஒரே நேரத்தில் பட்டம் பெற்று சாதனை
தாய் முனைவர் , மகள் மருத்துவர் இருவரும் ஒரே நேரத்தில் பட்டம் பெற்று சாதனை

Date : 21 Jan 2025 News By: Maniventhan Banting 

மணிவேந்தன் பந்திங் ஜன 21,

கல்வியில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.  இச்சாதனைக்கு சொந்தக்காரர்களாக தாய் விமலா மணியம், மகள் மனிஷா தங்கராஜா ஆகியோர் திகழ்கின்றனர்.

 

மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவ மாணவர்களுக்கு பொது உயர்கல்வி போதிக்கும் ஆசிரியர் விமலா மணியம் உயர் கல்வித் துறையில் முனைவர் பட்டம் வேளையில் அவரது மகள் மனிஷா தங்கராஜா தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் மருத்து துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்ட பிறகு ஜூக்ரா தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பிறகு உப்சி பல்கலைகழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சுங்கை மங்கீஸ் இடைநிலைப்பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றிய விமலா மணியம் மலாயா பல்கலைக்கழகத்தில் அறிவியல் கணினித் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு  தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியை தொடர்ந்து கொண்டே மலாயா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஆசிரியர் விமலா மணியத்தின் புதல்வி பந்திங் மெதட்டிஸ் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட பிறகு தனது இடைநிலைக்கல்வியை பந்திங் மெதட்டிஸ் இடைநிலைப்பள்ளியில் முடித்த பிறகு தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தில் தற்போது மருத்துவ துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

கல்வியில் தமது சாதனைக்கும் தமது மகள் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதற்கும் தமது குடும்பத்தாரின் ஒத்துழைப்பு பெரும் துணை புரிந்ததாகவும் குறிப்பாக தமது கணவர் தங்கராஜா இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் இவ்வேளையில் தமது கணவருக்கும் தமது குடும்பத்தினருக்கும் ஆசிரியர் விமலா மணியம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர் விமலா மணியத்தின் மற்றொரு புதல்வி கார்த்திகா தங்கராஜா சபா பல்கலைக்கழகத்தில் மருத்து துறையில் பட்டம் பெற்று தற்போது ஜோகூர் சுல்தான் அமினா மருத்துமனையில் மருத்துவராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகது.