மிஸ்டர் கிளின் தூய்மைவாதி துன் அப்துல்லா அகமட் படாவி.
Mr. Clean Former 5th Prime minister Tun Abdullah Ahmad Badawi.
Date :17 April 2025 News By :RMChandran
மலேசியாவின் ஐந்தாவது பிரதமரான துன் அப்துல்லா அகமட் படாவி, ( Tun Abdulah Ahmad Badavi) தனது 85 வயதில் மறைந்தார்.
முன்னாள் பிரதமரான துன் அப்துல்லா அகமட் பாடாவி அவர்களை (Pak Lah ) என அன்பாக அழைக்கப்பட்டவர்.
டாக்டர் மகாதீர் முகமது ( Dr. Mahathir Mohammad) தனது 22 ஆண்டுகால பதவிக்காலத்தை முடித்த பிறகு, 2003 ஆம் ஆண்டில் அப்துல்லா பிரதமரானார்.
கனிவான, மென்மையான பேச்சாளர் மற்றும் "மிஸ்டர் கிளீன்" என்ற நற்பெயரைக் கொண்ட அப்துல்லா, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனலை மகத்தான வெற்றிக்கு அழைத்துச் சென்றவர்,
அரசியலுக்கு வருவதற்கு முன் அரசு ஊழியராகவும் 1978 ஆம் ஆண்டு கப்பலா பத்தாஸ் (Kepala Batas ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ஹுசைன் ஒன் பிரதமராக இருந்தபோது, துணை கூட்டாட்சி பிரதேச அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். ஹுசைன் ஓன் பதவி விலகிய பிறகு, மகாதீரின் முதல் அமைச்சரவையில் அப்துல்லா பிரதமர் துறையில் அமைச்சரானார்
.
கல்வி,பாதுகாப்பு, வெளியுறவு, உள்துறை மற்றும் நிதித்துறை என பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார்.
அன்வார் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டு சீர்திருத்த இயக்கம் ( Refomasi) தொடங்கிய பிறகு 1999 ஆம் ஆண்டு மகாதீரின் மூன்றாவது துணைப் பிரதமரானார்.
31/10/ 2003 ஆம் நாள் மகாதீர் பதவி விலகியதும் துன் அப்துல்லா அமாட் படாவி பிரதமராக
பொறுப்பேற்றார். 219 நாடாளுமன்ற இடங்களில் 198 இடங்களில் மகத்தான வெற்றி பெற வழிவகுத்தார்.
அதேவேளை 2008 ஆம் ஆண்டு GE12 இல் மக்களவையில் 58 இடங்களை மட்டுமே வென்று பெரும்பான்மை இழந்ததால் அதற்கு பொறுப்பேற்று துன் அப்துல்லா அகமட் படாவி பதவி விலகினார்.
www.myvelicham.com Face Book /TIK TOK /You Tube / Intg / Google