காளான் சார்ந்த உணவுப் பொருட்ககளுக்கு இந்தியர்கள் இத்துறைக்குள் வரவேண்டும் பிரகாஷ் ராவ் அழைக்கின்றார்
"Mushroom-based food items in the food market" calls Minda Wangsa agroPrakash Rao
15 May 2023
" உணவுச் சந்தையில் காளானின் சார்ந்த உணவுப் பொருட்கள்" மிண்டா வங்சா ( Minda Wangsa Agro) பிரகாஷ் ராவ் அழைக்கின்றார்
திரு பிரகாஷ் ராவ்
ஞாலாஸ் அசகான் நிலத்தில் விவேக காளான் வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி இருக்கும் மிண்டா வங்சா ( Minda Wangsa Agro ) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பிரகாஷ் ராவ், இந்தியர்கள் இத்துறைக்குள் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்பொழுது இத்துறையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் மலாய் இளைஞர்கள் தம்முடன் இணைந்து செயல் படும் ஆர்வத்தைக் காட்டி வருவதாகவும் , இத்துறை நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்களிப்பைத் தரும்பெரும் வாய்ப்பைப் பெற்றிருப்பதாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.
நியூக்கிலியஸ் மலேசியா அமைப்பின் தலைமைப் பொறுப்பாளராக விளங்கும் அறிவுசார் அதிகாரி டாக்டர் அசஹார், காளான் விவேக வளர்புத்திட்டத்தின் தந்தாயாகக் கருதப் படுகிறார். இவர் மிண்டா வங்சா நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக இயங்கி வருகிறார்.
அன்மையில் இந்நிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட " உணவுச் சந்தையில் காளான் சார்ந்த உணவுப் பொருட்கள்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அசஹார் கலந்து கொண்டு , உணவுப் பொருட்களைச் சந்தை படுத்தும் வாய்ப்புகள் பெரிதாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
உள்நாட்டு, வெளிநாட்ட்டுச் சந்தைகளில் காளானின் தேவைகள் அதிகரித்து வருவதாகவும், அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் மிண்டா வங்சாவுடன் நியூக்லியஸ் மலேசியா இனைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடு தழுவிய அளவில் இளைஞர்களுக்குக் காளானின் வளர்ப்பை விவேக முறை தொழில்நுட்பத்தோடு எப்படி செயல்படுத்தும் முறையைக் கற்றுத் தரும் தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக அசஹார் தெரிவித்தார்.
வொல்வேரா எனும் பெயர் கொண்ட காளானை விவேக திட்டத்தின் வழி வளர்த்து விளைச்சலைப் பெற்ற பிறகு , அதனை உணவுத் தயாரிப்புத் தொழில்துறையில் சந்தைப்படுத்துதல் என்பதைப் பற்றிய
முறைகளை , தாம் சமத்துக் காட்டிய உணவில் காளானி முக்கியப் பயன்பாட்டை விளக்கினார் அதிகாரி.
பஸ்தா வகை உணவு, பர்கர், சென்விச் போன்ற உணவுகளில்
காளானின் பயன்பாடு உண்பவர்களுக்கு ருசியை வாரித் தரும்
அறிமுகத்தை தாமே சமைத்துக் காட்டி அசத்தினார் டாக்டர் அசஹரி.
இத்தொழில் முறை இளைஞர்களுக்கு ஆர்வத்தைக் கொடுத்திருப்பதால்
மலேசியா அளவில் உள்ள மலாய் அமைப்புகள் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தப் பிரகாஷ், மலாய் இளைஞர்களுக்கு இத்துறையைக் கற்றுத் தருவதற்குத் தம்மை அரசாங்கம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுப்பதாக பிரகாஷ் கூறினார்.
அன்று விவசாயத்தையும் நம் இந்திய சமூகத்தையும் பிரிக்க முடியாது. ஆனால் இன்று இரண்டுக்கும் இடைவெளி பல ஆயிரம் மைல் கல் உள்ளது.
வொல்வெரா காளான் வளர்ப்பு விவேக திட்டத்தில் இனைந்து , விவசாயத்தில் வெற்றி பெரும் சூட்சுமங்களைத் தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு சென்று வாழ்க்கையை புதிய பாதையில் பயணித்து வெற்றி பெற மிண்டா வங்சா அக்ரோ அழைக்கிறது என்கிறார் தொழில் முனைவர் பிரகாஷ் ராவ். தொடர்புக்கு : 019-2703716
MINDA WANGSA AGRO SDN BHD
www.myvelicham.com Genetarion Young News Portal