மை ஹீரோ டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி

My hero is Datuk Dr. Subathira Devi

மை ஹீரோ டத்தோ டாக்டர்   சுபத்திரா தேவி
மை ஹீரோ டத்தோ டாக்டர்   சுபத்திரா தேவி

NewsBy ; RM Chandran

மாண்புமிகு டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி குட்டன்,  குடும்பத்தில் மூத்தப்பெண் பிள்ளையாவார். கல்வியிலும் புறப்பாட நடவடிக்கையிலும் இளவயதிலேயே அதிக  ஈடுபாடு கொண்டவர்.

அதன் தாக்கம் மனதிலே வேரூன்றி நின்றதால் தனது 32 ஆவது வயதில் தமது சமூகச்சேவையை தொடர முன் வந்ததாக கூறினார்.

சிப்பாங் ஒற்றுமை இலாகாவின் கீழ் இயங்கும் ருக்குன் தேத்தாங்கா இயக்கத்தின் மூலம் அவரது சமூகச்சேவை ஆரம்பமானது.


அதன் பிறகு,  இந்தியா இளைஞர் மன்றம் வழி இந்தியா இளைஞர்களுக்கு பெண்களுக்கு பல பயிற்சிகள் வழங்கினார். குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்களுக்கு சுய காலில் நிற்கும் கைத்தொழிலை கற்றுக்கொடுத்து
அவர்களது வாழ்வில் ஓர் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தினார்.

இந்திய இளைஞர் மன்றம் (MIYC) 'சேவை ஸ்ரீ ரத்னா' விருது வழங்கி
ஸ்ரீமதி சுபத்திரா தேவி அவர்களை கௌரவித்தது.

அதனைத்தொடர்ந்து மலேசிய மணி மன்றத்தில் இணைந்து சேவை
ஆற்றினார் அவரது சேவையை பாராட்டி 'தங்கப் பெண் ' விருது வழங்கி சிறபிக்கப்பட்டது. மலேசியா திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் (OUM) தமது இளங்கலை  கல்வியை தொடர்ந்தார்.

ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் தனக்கு  ஏற்பட்ட   அனுபவமே இந்த
கருணை இல்லத்தை தொடங்க காரணமாக இருந்தது என்பதை தெரிவித்தார்.

அங்கு சரிவர பராமரிப்பு இல்லாமல் அவர்கள் படும் துன்பங்களை கண்டு
தனிமையில் வேதனையடைந்தார். அப்போதே இப்படியொரு கருணை
இல்லத்தை சொந்த முயற்சியில்  தமது கணவர் ( நினைவில் வாழும் டாக்டர் வேலாயுதம்)  உதவியுடன் 2002 ஆம் ஆண்டு ஆதரவற்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஓர் கருணை இல்லத்தை தொடங்க வேண்டுமென நினைத்தவர்,
 
'சமூக நல சுபத்திரா காப்பகம்' என்று தமது பெயரில் அதனை உருவாக்கினார்.

தமது கணவரின் அன்பும் உதவியும் இந்த இல்லத்திற்கு அப்போது மிகவும் உறுதுணையாக இருந்தது . என்றும் டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி தெரிவித்தார்.

ஆண்டு தோறும் நடைபெறும் பரவாசி மாநாடு செல்வதற்கு   சுபத்திரா தேவிக்கு   வாய்ப்பு கிடைத்தது.

புதுடில்லி சென்று , அன்றைய இந்தியா குடியரசு தலைவர் மாண்புமிகு டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது
அவரின் பாராட்டையும் பெற்றார்.

அதன் பிறகு, சிலாங்கூர் மாநில ஒற்றுமைத்துறை இலாகாவின் பரிந்துரை வாயிலாக திருமதி சுபத்திரா தேவி அவர்களுக்கு சிலங்கூர் மாநில சுல்தான் அவர்களால்  பிஜேகே (PJK )பட்டம்  2007 ஆம் ஆண்டும், பகாங்  மாநில சுல்தான் அவர்களால்  டத்தோ பட்டம் (DIMP) 2016- ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி, சிப்பாங் சிறார் நீதிமன்றதில் சிறார் சீர்திருத்த மன்ற ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
கணவர் டாக்டர் வேலாயுதம் மறைவிற்கு பின், தனியொரு பெண்ணாக நின்று  மீண்டும் தமது மேல்கல்வியை  தொடர்ந்தார் டாக்டர் சுபத்திரா தேவி.

அமெரிக்கா பல்கலைக்கழகம் ( 2018 ) தேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம்
 ( 2023 ) போன்ற சமூகவியல் பல்கலைக்கழங்கள் மூலம்  பட்டப்படிப்பை தொடர்ந்து டாக்டர் பட்டமும் பெற்றார்.

சிலாங்கூர் மாநில ஒற்றுமைத்துறை இலாகாவில் நடுநிலையாளராகவும்
பணியாற்றி வருவதோடு  சுபத்திரா கருணை இல்லத்தையும் வழி நடத்திக்கொண்டு  வருகிறார்.

'கடவுள்   உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன்
அருளை பாடுவோம்

'

டாக்டர் டத்தோ சுபத்திரா தேவியின் கருணை உள்ளத்தை வலியுத்தும்
பாடல் அவரின் சேவைக்கு கட்டியம் அமைக்கிறது.
தமது மகள் ஆஸ்திரேலியாவில்  படித்தது வருவதாகவும் டென்னிஸ் பயிற்சியாளராகவும் இருப்பதாக கூறினார்

மேலும் அவர், தமது 'சுபத்திரா  கருணை' இல்லம் கீழக்கண்ட முகவரியில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Pertubuhan Rumah Kebajikan Subadhra,
No 7, Jalan beringin 10, Sepang Putra,
Sungai Pelek, Sepang, Selangor.


கடந்த 2023 ஆண்டு மலேசிய சீனர் வணிகர் சங்கமும் ,தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சும் இணைந்து அவர்களுக்கு என் கதாநாயகன் (மை ஹீரோ) விருது வழங்கி கௌரவித்தது.


மேலும் பல விருதுகளை பெற 'மை இணையத்தளம்'
டத்தோ டாக்டர் சுபத்திரா தேவி அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி
வரவேற்கின்றது.

செய்தியாளர், ஆர்.எம் சந்திரன்.