தேசிய மொழி - ஆங்கில மொழிகளை வலுப்படுத்த வேண்டுமென்று மக்கள் குரலெழுப்புகின்றனர்.

National Language - To strengthen English Languages People are clamouring for it.

தேசிய மொழி - ஆங்கில மொழிகளை வலுப்படுத்த  வேண்டுமென்று மக்கள் குரலெழுப்புகின்றனர்.

Date :24 April 2025 News By : RM Chandran 

ஆசியான் மொழிகளைத் தேர்வுப் பாடங்களாக அறிமுகப்படுத்தும் திட்டத்துடன், பள்ளிகளில் தற்போது வழங்கப்படும், எந்தவொரு மொழிகளையும் ஒதுக்கி வைக்கப்படாது என  கல்வியமைச்சு  உறுதியளித்துள்ளது. .

வெளிநாட்டு மொழிகள் நீண்ட காலமாக பள்ளிகளில் தேர்வுப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டு வருவதால், இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக உள்ளடாக்க வேண்டாமென்று கல்வியமைச்சர் Fadhlina Sidek  கூறினார்.

“ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் பல்வேறு மொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. எனவே, எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் ஒதுக்கி வைப்பது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை.

 

“உண்மையில், தாய்மொழிப் பள்ளிகளில், தேசிய மொழியான பஹாசா மலேசியாவுடன், தமிழ் மற்றும்  மாண்டரின் ஏற்கனவே முக்கிய மொழிகளாக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளன" என்று எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளை காஜாங் தேசிய இடைநிலை கான்வென்ட் பள்ளியில் வெளிட்டப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். 

ஆசியான் நாடுகளுக்கிடையே,  ஆழமான புரிதலை ஊக்குவிப்பதற்காக தாய், கெமர் மற்றும் வியட்நாமிய ஆகிய மொழிகளை உள்ளடக்கிய, தேர்வு மொழி சலுகைகளை கல்வியமைச்சு பள்ளிகளில் விரிவுபடுத்துவதாக அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் குறித்து, கலவையான எதிர்வினைகளை தெரிவித்திருந்தாலும்,  சிலர் முதலில் பஹாசா மலேசியா மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களின் தேர்ச்சியை வலுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்படும் அதேவேளையில், "தேசிய வகை பள்ளிகளில் மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட  வேண்டுமென்றும பரிந்துரை செய்துள்ளர்".
நன்றி. FMT

www.myvelicham.com