Categories
சுகாதாரம்

உங்களுக்கு வயசாகக் கூடாதா..?- நட்ஸ், வயதாவதை தாமதப்படுத்தலாம் அதிசயங்களைச் செய்கின்றன.

வயதாவது இயற்கையானது. எந்தவொரு மனிதனும் அதை தடுக்க முடியாது என்றாலும், நீங்கள் அதன் தொடக்கத்தைத் தாமதப்படுத்தலாம், மேலும் அறிகுறிகளைக் குறைவாகக் காணலாம். நாற்பதுகளில் உள்ளவர்கள் ஆரோக்கியமான, சீரான உணவைப் பின்பற்றுவது கட்டாயமாகும். ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த உணவைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம், சருமத்தை மெருகேற்றலாம் மற்றும் ஒட்டுமொத்த உடலையும் இயற்கையாக பாதிக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், இலவச தீவிர செயல்பாட்டைத் தடுக்க உதவுகின்றன. இந்த தீவிர செயல்பாடுகள், உடலில் நிகழும் வேதியியல் செயல்முறைகளின் இயற்கையான துணை தயாரிப்புகளாகும். இந்த இணைக்கப்படாத எலக்ட்ரான்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கின்றன, இது நமது சருமம் தொய்வு பெறவும் மற்றும் சுருக்கமாகவும் மாற்றக்கூடும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏராளமாக உள்ளன; உதாரணமாக, கீரை, புளுபெர்ரி மற்றும் மிளகு. இந்த உணவுகள் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுகளால் வளப்படுத்தப்படுகின்றன. அவை உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகின்றன. காய்கறிகளிலும் பழங்களிலும் நம் உணவை வளமாக்கும் ஆனால்,  பல அத்தியாவசிய உணவுகளை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். உதாரணமாக, நட்ஸ், வயதாவதை தாமதப்படுத்தலாம் அதிசயங்களைச் செய்கின்றன.

பாதாமின் வேறு சில நன்மைகள் இங்கே:

 • பாதாம் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை இதயத்திற்கு நல்லது.

 • ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் மூளையைக் கூர்மைப்படுத்த உதவுகின்றன.

 • பாதாமுக்கும் தூக்கத்தைத் தூண்டும் திறன் உள்ளது. உங்கள் ஒழுங்கற்ற தூக்க முறையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் பாதாம் சேர்த்துக் கொள்ளலாம்.

 • அவை இரத்தத்தில் சர்க்கரை அளவையும் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகின்றன.

 • பாதாம் பருப்பில் உள்ள நார்ச்சத்து எடை இழப்பையும் ஊக்குவிக்கும்.

எனவே பாதாம் வயதான அறிகுறிகளை மட்டும் தாமதப்படுத்தாது, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பதால், உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.


பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதுஒமேகா 3 பல கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிரம்பியுள்ளது

Categories
Featured சுகாதாரம்

கொரோனா அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் 849 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் இத்தனை மரணங்கள் பதிவாவது ஸ்பெயினில் இதுவே முதல்முறை.

ஸ்பெயின் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் 849 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் இத்தனை மரணங்கள் பதிவாவது ஸ்பெயினில் இதுவே முதல்முறை.

ஸ்பெயினில் இப்போது வரை 8,189 பேர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில்தான் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.

பிரான்ஸ் குடும்ப வன்முறை

கொரோனாகாரணமாகப் பலர் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸில் ஒட்டுமொத்தாக 32 சதவீத அளவுக்கு குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாரிஸீல் 36 சதவீதம் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாலின சமத்துவத்திற்கான செயலாளர் தெரிவிக்கிறார்.

தரையிறங்கும் விமான நிறுவனங்கள்

சர்வதேச அளவில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் இது விமானச் சேவையிலும் தாக்கம் செலுத்தி உள்ளது. பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாண்டு விமான நிறுவனங்கள் 252 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் எனச் சர்வதேச விமானச் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான சேவை நிறுவனம் மட்டும் அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலர் நிதியைக் கோரி உள்ளது.

நான்கில் மூவர்

சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 164,610 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 3000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அங்குள்ள 50 மாகாணங்களில் 32 மாகாணங்கள் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது நான்கில் மூன்று அமெரிக்கர்கள் இப்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பல மாகாண ஆளுநர்கள் தங்களிடம் போதுமான பரிசோதனை கருவிகள் இல்லை என ட்ரம்புடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.

சிரியாவின் நிலை?

ஐ.எஸ் அமைப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவாகி உள்ளது.

மேலும் 9 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சிரியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

64 சதவீத மருத்துவமனைகள்தான் அங்கு முழு செயல்பாட்டில் இருப்பதாகவும், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்கள் போதுமான அளவில் அங்கு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

போருக்குப் பின் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே பலம் பெயர்ந்து மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

இரவில் வெளியே வரத் தடை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பள்ளிவாசல்களில் ஒன்று கூட தடை என பல நடவடிக்கைகளை சிரியாவின்அல்பசர்ஆசாத அரசாங்கம் எடுத்துள்ளது.

ஆப்ரிக்காவின் நிலை?

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் ஜாக்ஜோஷாங்யோம்பி ஒபாங்கோ கொரோனாவைரஸ் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 81.

இவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருந்தது என இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1977 முதல் 1979 வரை அதிபர் பதவியிலிருந்தார்ஜாக்ஜோஷாங்யோம்பிஒபாங்கோ.

தான்சான்யா நாட்டில் முதல் கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. 49 வயதான தான்சானியர் பலியானதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
சுகாதாரம்

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரை முந்துகிறதா மலேசியா? – 238 பேருக்கு பாதிப்பு

Categories
சுகாதாரம்

50,000-க்கும் அதிகமான ‘HFMD’ நோய் சம்பவங்கள் பதிவாகின

50,000-க்கும் அதிகமான ‘HFMD’ நோய் சம்பவங்கள் பதிவாகின

கோலாலம்பூர், ஆகஸ்ட்.16- இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை நாட்டில் 51,147 HFMD எனப்படும் கை, கால், வாய், புண் நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி அகமட் தெரிவித்தார். அதிலும் சரவாக்கில் 6,209 சம்பவங்கள் பதிவாகி அம்மாநிலம் முன்னிலையில் இருக்கிறது என்றார் அவர்.

சரவாக் தலைநகர் கூச்சிங்கில் மட்டும் 1,387 சம்பவங்கள் பதிவாகின. அச்சம்பவங்களில், ஒரு 27 மாத குழந்தை உயிரிழந்தது.

இரண்டுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவானால், சம்பந்தப்பட்ட சிறார் பராமரிப்பு மையமோ பாலர் பள்ளியோ மூடப்படும். ஆகக் கடைசி சம்பவம் கண்டறியப்படும் வரையில், அந்த குறிப்பிட்ட சிறார் பராமரிப்பு மையம் அல்லது பாலர் பள்ளி 10 நாட்களுக்கு மூடப்படும்.

கை, கால், வாய், புண் நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேகமாகத் தொற்றக் கூடியது. மூக்கிலிருந்து சிந்தும் நீர், எச்சில் போன்றவற்றலிருந்து பரவும். நோயுள்ளவர் தும்மும் போதும் இருமும் போதும் தெறிக்கும் துளிகள் மூலமே முக்கியமாகப் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சுகாதாரம்

உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள்…

உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள்.

உடல் பருமன் பிரச்சனையுடன் போராடுவதற்கு அசாத்திய மனோதிடம் தேவை என்பது நம்மில் பலரின் கருத்து. ஆனால் மருத்துவ ஆய்வுகள் வேறு மாதிரியாக கூறுகின்றன. உங்கள் உடல் எடையை பாதிக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

இருவர்

1) குடல் நுண்ணுயிரிகள்

கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். இதில் ஒருவர் மற்றொருவரை விட கூடுதலாக 41 கிலோ எடை கொண்டவர். பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இவ்விருவரின் உடல் எடையை கடந்த 25 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறார். பிரிட்டனில் இரட்டையர்கள் குறித்து நடந்து வரும் ஆய்வின் கீழ் அவர் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விருவரின் எடை வித்தியாசத்திற்கு அவரவர் குடலில் உள்ள மைக்ரோபுகள் எனப்படும் நுண்ணுயிரிகளே காரணம் என்கிறார் ஸ்பெக்டர்.

ஒவ்வொரு முறை நீங்கள் உண்ணும்போதும் உங்களுக்காக மட்டும் உண்பதில்லை. உங்கள் குடலினுள் உள்ள பல லட்சம் கோடி நுண்ணுயிரிகளுக்கும் நீங்கள் உணவளிக்கிறீர்கள் என்கிறார் ஸ்பெக்டர்.

இரட்டையர் இருவரின் மலத்திலிருந்து மிகச்சிறிதளவு மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் இருவரில் ஒல்லியாக இருக்க கூடிய கில்லியனின் குடலில் பல விதமான நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் ஜாக்கியின் குடலில் சில வகை நுண்ணுயிரிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

இதே போன்ற நிலை 5 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது

குடல் நுண்ணுயிரிபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

பல்வகையான ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அதிகரிக்கும்போது குடலில் பல்வகை நுண்ணுயிரிகளின் அளவும் அதிகரிக்கும்.

பிரிட்டானியர்கள் தற்போது தாங்கள் உண்ணும் நார்ச் சத்து உணவில் பாதியை மட்டுமே உண்ண வேண்டும் என எச்சரிக்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர்.

நார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள்

முழு தானியங்கள்

பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை சார்ந்த பழங்கள்

ப்ரக்கோலி, கேரட் போன்ற காய்கறிகள்

பீன்ஸ்

பருப்பு வகைகள்

பாதாம் போன்ற கொட்டை வகைகள்

2) ஜீன் லாட்டரி

சிலர் விடாமுயற்சியுடன் தினந்தோறும் உடற் பயிற்சிகளை செய்துவந்தாலும் அவர்கள் உடல் பருமன் குறைவதில்லை. ஆனால் சிலர் மிக குறைவான உடற்பயிற்சியிலேயே பருமனை கட்டுக்குள் வைக்கின்றனர்.

நமது உடல் எடை என்பதில் 40 – 70% வரை நமது மரபணு சார்ந்து தீர்மானிக்கப்படுவது என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். உண்மையில் உடல் பருமன் என்பதை லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த சமாச்சாரமாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் சதாஃப் ஃபரூக்கி.

உடல் எடையை முடிவு செய்வதில் மரபணுக்களே பெரும் பங்கு வகிக்கின்றன என தெளிவாக தெரிந்துவிட்டது என்கிறார் ஃபரூக்கி. குறிப்பிட்ட சில மரபணுக்களில் நேரும் பிழைகளே உடல் பருமனுக்கு காரணமாகின்றன என்கிறார் அவர்.

ஒருவர் எவ்வளவு என்கிறார்…எவ்வகை உணவை விரும்பி உண்கின்றார் என்பதையெல்லாம் அவரவர் மரபணுக்களே முடிவு செய்கின்றன. உண்ட உணவின் சத்துகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும். மரபணுக்களே முடிவு செய்கின்றன. இரவில் உணவு உண்பது தாமதமானால் உடல் பருமன் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார் மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன். இரவில் உடல் உழைப்பு குறைவு என்ற பொதுவான கருத்து இருந்தாலும் அது உண்மையல்ல என்கிறார் பிரவுன். உடலுக்குள் உள்ள உயிரியல் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

இரவை விட பகல் நேரத்தில்தான் உணவின் சத்துகளை சிறப்பாக கையாளும் வகையில் நமது உடல் அமைப்பு இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் பிரவுன்.

ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் பிழையுள்ள MC4R மரபணுவை கொண்டிருக்கின்றன. இந்த மரபணுதான் பசி உணர்வு…உணவு உண்ணும் அளவு உள்ளிட்டவற்றை மூளை வழியாக கட்டுப்படுத்துகின்றன.

எனவே இந்த மரபணுவில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிக பசி ஏற்படுவதுடன் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளையும் உண்ணத் தூண்டுகிறது.

மரபணு பிரச்னையை பொறுத்தவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் ஃபரூக்கி. ஆனால் உணவுக்கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலம் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என அறிய இது உதவும் என்கிறார் ஃபரூக்கி.

3) என்ன நேரம் இது…

காலை உணவை அரசன் போல உண்ணுங்கள்…மதிய உணவை ஒரு முதலாளி போல உண்ணுங்கள்…இரவு உணவை ஒரு பரம ஏழை போல் உண்ணுங்கள் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற அர்த்தம் இதற்கு இல்லை.

உடல் பருமன் பிரச்னை நிபுணரான மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன், ஒவ்வொரு நாள் இரவும் நாம் தாமதமாக உண்ணும்போது உடல்பருமனுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரவில் நம் செயல்பாடுகள் குறைவென்பதுதான் இதற்கு காரணம் என பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் நமது உடலுக்குள் இயங்கிவரும் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

“இரவு நேரத்தை விட பகல் நேரத்தி்ல் நமது உடலுக்கு உணவின் சத்துக்களை கிரகிக்கும் திறன் அதிகம்” என்கிறார் பிரவுன்.

பிரெட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதன் காரணமாகத்தான் பணி நேரம் மாறிக்கொண்டே இருப்பவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்த சிரமப்பட வேண்டியுள்ளது என்கிறார் பிரவுன்.

இரவு நேரங்களில் ஜீரணத்திறன் குறைவாக இருப்பதால் கொழுப்பு சத்து மிக்க உணவுகளை மாலை 7 மணிக்கு முன் உண்பது நல்லது. இது உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு உதவும் என்கிறார் மருத்துவர் பிரவுன்.

கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இரவு உணவு நேரம் மாலை ஐந்து மணியிலிருந்து மாலை ஏழு மணிக்கு மெல்ல மாறிவிட்டது…அதனால் உடல் பருமன் பிரச்னையும் அதிகரித்துவிட்டது என்கிறார் பிரவுன்.

தற்கால பணி நேரங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை உடல் பருமன் பிரச்னை அதிகரிக்க காரணமாகின்றன.

காலை உணவை தவிர்ப்பது அல்லது டோஸ்ட் போன்று மிக குறைவாக உட்கொள்வது என்பது கூடவேகூடாது என்கிறார் பிரவுன்.

இதற்கு பதில் புரதம் நிறைந்த சிறிது கொழுப்பும் கொண்ட உணவுகள் அதாவது முட்டை கொண்ட முழு தானிய டோஸ்ட் என்பது சரியான, வெகுநேரத்திற்கு தாங்க கூடிய உணவாக இருக்கும் என்கிறார் பிரவுன். இதே போல மதிய உணவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இரவு உணவு குறைவாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் பிரவுன்.

4) உங்கள் மூளையை தந்திரமாக பயன்படுத்துங்கள்…

பிரிட்டன் மக்கள் தாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் அக்கறை குறைவானவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் சத்து கிரகிக்கும் திறன் 30-50% குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மனித நடத்தைகள் குறித்து ஆராயும் அறிவியல் நிபுணர் ஹ்யூகோ ஹார்ப்பர் இதற்கு ஒரு யோசனை தருகிறார். கலோரிகளை கணக்கிட்டுக்கொண்டு இருப்பதற்கு பதில் உணவு உண்ணும் முறையை மாற்ற சில ஆலோசனைகளை இவர் தருகிறார்.

உணவுக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதியை விட ஆர்வத்தை தூண்டக்கூடிய உணவுகளை பார்வைக்கு அப்பால் வைப்பது பலன் தரும் என்கிறார் ஹார்ப்பர்.

நாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது ஆரோக்கிய கேட்டை தருகின்ற உணவுகளை சமையலறையிலிருந்து தூக்கிப் போட்டுவிட்டு நலம் தரும் உணவுகளை…பழ வகைகளை வைக்கலாம் என்கிறார் ஹார்ப்பர். டிவி பார்த்துக்கொண்டு முழு பாக்கெட் பிஸ்கெட்டை சாப்பிடுவதற்கு பதில் எவ்வளவு சாப்பிடவேண்டும் என திட்டமிட்டு அவ்வளவு பிஸ்கெட்டுகளை சாப்பிடுவதே சரியாக இருக்கும் என்று ஆரோசனை கூறுகிறார் ஹார்ப்பர்.

விரும்பிய எல்லா உணவுகளையும் விழுங்கிக்கொண்டே இருப்பதற்கு பதில் அதில் எது குறைந்த கலோரி கொண்டது என பார்த்து உண்பது சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

சர்க்கரை அளவு குறைந்த, ஆரோக்கியம் காக்கும் நோக்கிலான மென்பானங்கள் தற்போது சந்தைகளுக்கு வந்துள்ளன… அவற்றை அருந்துவதும் சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

உண்ணும் உணவின் அளவையும் சற்றே குறைத்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

5) ஹார்மோன்கள்

உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காண தற்போது அறுவை சிகிச்சைகளும் நடக்கின்றன. இவை இரைப்பையின் அளவை மட்டும் குறைப்பதில்லை. அவை உற்பத்தி செய்யும் ஹார்மோனின் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் எவ்வளவு உண்ண விரும்புகிறோம் என்பதை நமது ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன. இது _Bariatric அறுவை சிகிச்சை மூலம் தெரியவந்தது. இந்த அறுவை சிகிச்சைதான் உடல் பருமன் பிரச்னைக்கு இருப்பதிலேயே சிறந்த தீர்வாக உள்ளது.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

இது வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. வயிற்றின் அளவை 90% வரை குறைக்க வேண்டியிருப்பதால் இது பெரிய அறுவை சிகிச்சை ஆகும். ஆனால் இதிலும் சில தடைக்கற்கள் உள்ளன. BMI எனப்படும் உடல் பருமன் – உயரம் விகிதாச்சாரம் குறைந்தது 35க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அறிவை சிகிச்சை செய்யக்கூடியதாகும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், Baeiatric அறுவை சிகிச்சைக்குப்பின் குடலில் தோன்றும் பசி உணர்வை குறைக்கும் ஹார்மோன்களை வைத்து புதிய அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 3 விதமான ஹார்மோன்களின் கலவையை நோயாளிகளுக்கு ஊசி மூலம் தினசரி ஒரு முறை வீதம் வீதம் 4 வாரங்களுக்கு போட்டு வருகின்றனர்.

இந்த ஊசியை கேட்டுக்கொண்டவர்களுக்கு குறைவான பசி ஏற்படுவதாக கூறுகின்றனர்…இதனால் அவர்கள் 28 நாட்களில் 2 முதல் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டனர் என்கிறார் மருத்துவர் ட்ரிஸியா டான்.

இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுவிட்டால் நோயாளிகள் ஆரோக்கியமான எடை அளவை தொடும் வரை அதை தர மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Categories
சுகாதாரம் பொது செய்திகள்

கருக்கலைப்பு: சட்டப்பூர்வமாக்க மறுத்தது அர்ஜென்டினா நாடாளுமன்றம்

கருக்கலைப்பு: சட்டப்பூர்வமாக்க மறுத்தது அர்ஜென்டினா நாடாளுமன்றம்
 • அர்ஜென்டினா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை நிராகரித்துள்ளது.
கரு

தொடர்ச்சியாக நடத்த விவாதத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். 31 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தத் தோல்வியால், அந்நாட்டுச் சட்டங்களின்படி இந்த மசோதாவை இன்னும் ஓராண்டுக்கு நாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது.

ல் வல்லுறவால் உண்டான கரு மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஆகிய இரு சூழல்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அர்ஜென்டினாவில் அனுமதிக்கப்படுகிறது.

வாக்கெடுப்பு நடந்தபோது இருதரப்புக்கும் ஆதரவானவர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

abortion
மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பதற்றம் நிலவியது.

கருக்கலைப்புக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கள் ஆதரவைத் தெரிவிக்க பச்சை நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்த கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் மசோதா நிராகரிக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டனர்.

கருக்கலைப்பு மசோதாவின் பின்னணி என்ன?

ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்ஜென்டினாவில், கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் இந்தச் சட்ட மசோதா நிறைவேற வேண்டும் என பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

Argentina abortion
கருக்கலைப்புக்கு ஆதரவானவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

கருக்கலைப்பை எதிர்க்கும் அதிபர் மௌரீசியோ மாக்ரி நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததும் இந்த விவகாரம் சூடு பிடித்தது. நாடாளுமன்றத்தின் கீழவையான காங்கிரசில் இந்த மசோதா மிகச் சில வாக்குகள் வித்தியாசத்தில் சமீபத்தில் வெற்றி பெற்றது.

கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட 43 பெண்கள் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளனர்.

“இது சட்டப்பூர்வமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வார்கள்,” என்று கருக்கலைப்பை ஆதரித்து பிரசாரம் செய்யும் வழக்கறிஞர் சாப்ரினா கிரோபா கூறுகிறார்.

Argentina abortion
 கருக்கலைப்பை எதிர்ப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், கருக்கலைப்பை எதிர்க்கும் கேமிலா டூரா என்பவர் கருக்கலைப்பை சட்டவிரோதமாக்குவதன் மூலம் அத்தகைய மரணங்களைத் தடுக்க முடியும் என்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருகுவே மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகள் மட்டுமே கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியுள்ளன.

Categories
Featured சுகாதாரம்

நீரிழிவு நோய் : ஆசியாவில் மலேசியாவிற்கு முதலிடம்!

நீரிழிவு நோய் : ஆசியாவில் மலேசியாவிற்கு முதலிடம்!

கூச்சிங்,ஜூலை.25- ஆசியாவில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மலேசியாவில் தான் உள்ளனர் என தேசிய நீரிழிவு கழகத்தின் (NADI) தலைவர் டத்தோ டாக்டர் முஸ்தாபா எம்போங் தெரிவித்தார்

நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட 2.5 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலானவருக்கு தங்களுக்கு அந்நோய் இருப்பதே தெரிவதில்லை என தேசிய நீரிழிவு கழகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றார் அவர்.

பெரும்பாலான நேரங்களில் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, குருட்டுத்தன்மை ஆகியவை ஏற்பட்டால் மட்டுமே ஒருவருக்கு இரண்டாவது வகை நீரிழிவு இருப்பது தெரிய வருகிறது என நேற்று நடைபெற்ற 10-ஆவது நீரிழிவு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் முஸ்தாபா செய்தியாளர்களிடம் பேசினார்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் ‘சைலன்ட் கில்லர்’ எனப்படும் நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறைகள் அடையாளம் காணப்படும். இதில் சுமார் 200 மருத்துவ பயிற்சியாளர்களும் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஐரோப்பா,ஆசியா போன்ற நாடுகளிலிருந்து 11 நீரிழிவு நோய் நிபுணர்களும் கலந்துக் கொள்வர்.

Categories
Featured சுகாதாரம்

ஒற்றைத் தலைவலி வருவது எதனால்?…

ஒற்றைத் தலைவலி வருவது எதனால்?

ஒரு நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பியபோதுதான் மைக்ரேன் தலைவலியை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இருந்த லேசான வலி பின்னர் மண்டையை பிளக்க தொடங்கியது. கண் பார்வைகூட மங்கலாகிவிட்டது.

ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி பார்வையை மங்கச் செய்யும். மிகுந்த வலி ஏற்படும்

படுக்கையறை விளக்குகூட வலி தருவதாக மாறிவிட்டது. பின்னர் வாந்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வலியை எண்ணற்ற முறை உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியாமல் வேலையையே விட்டுவிட்டேன்.

மைக்ரேன் தாக்குதலை சமாளிப்பதும் ஒரு தலைவலி ஆகவே இருந்தது. சாதாரண தலைவலியை ஒன்று அல்லது இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மூலம் சமாளிக்க முடியும். ஆனால மைக்ரேன் தலைவலி மிகக் கடுமையானது.

இவ்வகை தலைவலிக்கு உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஹார்மோன் பிரச்சனை அல்லது மூளையின் அசாதாரண செயல்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 1990 முதல்2016 வரை ஒவ்வொரு ஆண்டும் மக்களின் ஆரோக்கியம் குறித்து 195 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. மக்களை அதிகமாக பாதிக்கும் இரண்டாவது பெரிய பிரச்சனையாக தொடர்ந்து மைக்ரேன் திகழ்வது இதில் தெரிய வந்தது. இது உலகின் முன்னணி மருத்துவ ஆய்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மைக்ரேன் காரணமாக ஆண்டுக்கு இரண்டரை கோடி நாட்கள் பிரிட்டனில் மட்டும் மருத்துவ விடுப்பாக எடுக்கப்படுகிறது. உடல் அளவிலும் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரேனுக்கு மற்ற நோய்களுடன் ஒப்பீட்டளவில் குறைவான தொகையே ஆய்வுக்கு ஒதுக்கப்படுகிறது.

தலைவலி

மைக்ரேன் பிரச்னை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. 15 ஆண்களில் ஒருவரும் 5 பெண்களில் ஒருவரும் மைக்ரேனால் பாதிக்கப்படுகிறார். இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து 2018ம் ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும் குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் NHE1 அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHE1 அளவு போதுமான அளவு இல்லாவிட்டால் வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். பாலியல் ஹார்மோன் அளவில் ஏற்படக்கூடிய பெரும் ஏற்றத்தாழ்வுகள் NHE1ல் அளவில் மாறுபாட்டை ஏற்படுத்துகின்றன எனவும் இதுவே பெண்களை மைக்ரேன் அதிகம் பாதிக்க காரணம் என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் எமிலி கேலோவே.

மற்ற உடல் நல பிரச்னைகளை விட மைக்ரேன் குறைவாகவே ஆராயப்பட்டிருக்கிறது. அதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவும் குறைவு. பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இப்பிரச்னைக்கு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஐரோப்பாவில் மற்ற எந்த நரம்பியல் பிரச்னை தொடர்பான ஆய்வுகளை விடவும் மைக்ரேன் ஆய்வுக்கு குறைவான பணமே ஒதுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 15% மக்கள் மைக்ரேனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு 2017ல் 2.2 கோடி டாலர் மட்டுமே ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. மைக்ரேனுடன் ஒப்பிடுகையில் பாதி பேரை மட்டுமே பாதிக்கும் ஆஸ்துமாவுக்கு இதை விட 13 மடங்கு(28.6 கோடி டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. 3ல் 2 பங்கு பேரை பாதிக்கும் சர்க்கரை நோய்க்கு 50 மடங்கு தொகை ஒதுக்கப்படுகிறது. (1,100 கோடி டாலர்). ஆனால் ஆஸ்துமாவும் சர்க்கரை நோயும் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரேனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும் ஆண்களை மையமாக வைத்தே இதற்கான ஆய்வுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மைக்ரேன் பாதிக்கப்பட்ட பெண்கள் நிபுணர்களால் புறக்கணிக்கபடுவது தெரியவருகிறது.

தலைவலி

தலை வரலாறு

மனித குலத்தை பாதித்து வரும் பழமையான பாதிப்புகளில் மைக்ரேனும் ஒன்று. 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான எகிப்தியர் எழுத்துப்படிவங்களில் மைக்ரேன் போன்றதொரு தலைவலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்ரேனுடன் தொடர்புள்ள பார்வை மங்கல் குறித்தும் வாந்தி குறித்தும் ஹிப்போக்ரட்டஸ் கூறியுள்ளார்.

ஆனால் மைக்ரேனை முதன்முதலில் கண்டுபிடித்தவர் என்ற பெயர் கிரேக்க மருத்துவர் ஏரிட்டஸ் ஆஃப் கப்படோசியாவுக்கே உண்டு. ஒரு புறம் மட்டும் வலிக்கும் தலைவலியை 2ம் நூற்றாண்டில் இவர் கண்டறிந்தார். உண்மையில் மைக்ரேன் என்ற வார்த்தையே ஹெமிக்ரேனியா என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் உருவானது.

ஹெமிக்ரேனியா என்றால் பாதி மண்டை ஓடு என பொருள். இப்பிரச்னைக்கு இடைக்காலங்களில் பல சிகிச்சைகள் உண்டு. முன் மண்டையில் துளையிட்டு அதில் பூண்டுப்பல் இரண்டையும் சேர்த்து திணித்தால் மைக்ரேன் நீங்கும் என்பது ஒரு நம்பிக்கை.

மைக்ரேன் ஏன் வருகிறது, என்ன சிகிச்சை என்பது குறித்து வரலாற்று காலங்களில் நிறைய மூட நம்பிக்கைகள் இருந்தன. மண்டையில் துளையிடுவது மூலம் அதனுள் உள்ள தீய சக்தியை வெளியேற்றி மைக்ரேனுக்கு தீர்வு காண முடியும் என்ற கொடூர நம்பிக்கை இருந்தது.

தலைவலி

மைக்ரேனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவது 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மைக்ரேன் ஏற்பட மன நிலையே காரணம் என நம்பினர் அப்போதைய மருத்துவர்கள். கடினமான பணி, அடிக்கடி பாலூட்டுவது, ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் மனம் பலவீனமடைந்து மைக்ரேன் வருவதாக அவர்கள். நம்பினர்.

நவீன கால வசதிகளால் புத்திசாலி உயர் தட்டு மக்களுக்கு ஏற்படும் உடல் கோளாறே மைக்ரேன் என நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது என்கிறார் ஜோன்னா கெம்ப்னர். இவர் ரட்கர்ஸ் பல்கலைகலகழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஆவார்.

மைக்ரேன் நோயாளிகளில் ஆண்,பெண் இடையே உள்ள தனித்துவமிக்க வித்தியாசங்கள் குறித்து கண்டறிந்துள்ளார் அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஹரால்டு ஜி வால்ஃப். நவீன கால தலைவலி மருந்தியலின் தந்தை என இவர் அறியப்படிகிறார்.

இவரைப் பொறுத்தவரை ஆண்கள் இலக்கு சார்ந்தவர்கள்… வெற்றிகரமானவர்கள்… களைப்படையும் போது மட்டும் இவர்களுக்கு மைக்ரேன் வரும்.

தலைவலி

பெண்கள் தங்களுக்கான பொறுப்புகளை ஏற்பதில் திறனற்று இருப்பதால் மைக்ரேன் வருவதாக கருதுகிறார் வால்ஃப். குறிப்பாக பாலுறவு என வரும்போது இவ்வாறு நிகழ்கிறது என்கிறார் அவர். தன்னிடம் வரும் பெண் நோயாளிகள் பாலுறவு என்பதை அர்த்தமுள்ள திருமணக் கடமை என கருதுவதாக தெரிவிக்கிறார் வால்ஃப். சில சமயங்களில் மட்டும் பாலுறவை விரும்பத்தகாதது ஆக இத்தகைய பெண்கள் கருதுகின்றனர் என்கிறார் அவர்.

20 ம் நூற்றாண்டு இறுதியில் மைக்ரேன் என்பது இல்லத்தரசிகளின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்டது என்கிறார் கெம்ப்னர். சில தகவல் களஞ்சியங்களில் மைக்ரேன் என்பதை வாழ்க்கைத் துணை என்றே கூறுமளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

மனதுதான் காரணம்…

தலைவலி பிரச்னைக்கும் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது. இதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

மைக்ரேனுக்கும் bipolar disorder எனப்படும் இரு துருவ மனச்சோர்வுக்கும் ஆழமான தொடர்புகள் இருப்பதை 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மைக்ரேன் உள்ளவர்களுக்கு பதட்டம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

மன அழுத்த பிரச்னை இருப்பவர்களுக்கு மைக்ரேன் வாய்ப்புகள் மும்மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மைக்ரேனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆறு பேரிலும் ஒருவருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்திலாவது தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளனர்.

தலைவலிபொதுவான மக்களில் பத்தில் ஒருவர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருப்பதாக கூறியுள்ளனர்

ஆனால் இது சாதாரணமான ஒன்றா என்பது பெரிய கேள்வி என்கிறார் நரம்பியல் பேராசிரியர் மெசூத் ஆஷினா. இவர் டேனிஷ் தலைவலி மையத்தின் ஒரு பிரிவான மைக்ரேன் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும் உள்ளார்.

நீங்கள் மைக்ரேனால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனுடன் மற்ற நோய்களும் சேர்ந்துகொள்ளும் என்கிறார் ஆஷினா.

மைக்ரேனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி குடும்ப வாழ்க்கையிலும் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தி பதட்ட மன நிலை அதிகப்படுத்துவதில் ஆச்சரியமில்லை என்கிறார் எஸ்மி ஃபுல்லர் தாம்ஸன். இவர் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் மைக்ரேன் – தற்கொலை இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து வருகிறார்.

தலைவலி

உலக மக்கள் தொகையில் கணிசமானோரை மைக்ரேன் பாதித்துள்ள நிலையில் அது குறித்த புரிதலும் ஆய்வுகளும் குறைவாகவே உள்ளன. நரம்பியல் துறையிலும் சமூகத்திலும் பலர் மைக்ரேனை ஆபத்தற்ற நோயாகவே பார்க்கின்றனர்.

இது ஒன்றும் பார்க்கின்சன் நோயல்ல…புற்று நோயல்ல என அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார் பேராசிரியர் ஆஷினா.

ஆனால் தனி நபர் அளவிலும் சமூக அளவிலும் அது ஏற்படுத்தும் விளைவுகள் தீவிரமானவை என்கிறார் ஆஷினா. சில நிபுணர்கள் இதை உண்மையான நரம்பியல் பிரச்னையாகவே பார்ப்பதில்லை என்கிறார் மால் ஸ்டார்லிங். இவர் அரிசோனாவின் ஸ்காட்ஸ்டேலில் உள்ள மாயோ கிளினிக்கில் நரம்பியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றுகிறார்.

மைக்ரேன் குறித்த குறைத்த மதிப்பிடப்பட்ட கண்ணோட்டத்தால் தலைவலி சிகிச்சை நிபுணர்கள் தங்கள் தொழிலை அங்கீகாரம் கொண்ட ஒன்றாக மாற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கான நிதியுதவி ஆடம்பரமானதல்ல…அத்தியாவசியமானது என பிறரை ஒப்புக்கொள்ள வைக்க போராட வேண்டியுள்ளது.

தலைவலி

பொதுவான நிலை…

நரம்பியல் புறநோயாளிகளில் தலைவலி என்பது பொதுவாக காணக்கூடிய விஷயமாக உள்ளது. ஆனால் நரம்பியல் நிபுணர்கள் இப்பிரச்னையை பற்றி குறைவாகவே உணர்ந்துள்ளார்கள். இது ஒரு எலக்ட்ரீஷியனுக்கு மின்சார பல்பு பற்றி தெரியாதது போல் உள்ளது.

மைக்ரேன் நோயாளிகளுக்கு நல்வாய்ப்பாக ஒரு சிகிச்சை முறை பலன் தரும் போல் தெரிகிறது. எரிநுவாப் என்ற ஊசி மருந்தை மாதம் ஒரு போட்டுக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர். (இதே போன்ற ஒரு மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடந்த மே மாதம் அனுமதி தந்திருந்தது).

இந்த புதுமையான மருந்து மைக்ரேன் நோயாளிகளுக்கு என்றே உருவாக்கப்பட்டது என்கிறார் ஸ்டார்லிங். வலியை குறைக்க கூடிய இம்மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்.

தலைவலி

பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் இம்மருந்து நல்ல பலனளிப்பதாக அதை பயன்படுத்தி வரும் ஒரு நபர் கூறுகிறார். எனினும் இம்மருந்து களைப்புணர்வை மிகுதியாக ஏற்படுத்துவதுடன் திடீரென நிறுத்தினால் மாரடைப்புக்கும் இது காரணமாகிவிட வாய்ப்புள்ளது. மைக்ரேனுக்கு ஏற்கனவே மின்சாரம் மற்றும் காந்தம் மூலம் சிகிச்சை தருவதும் நடைமுறையில் உள்ளது. கையடக்க கருவி மூலம் மூளைக்குள் காந்த கதிர்வீச்சை செலுத்தினால் அது நரம்புகளை மின்னதிர்வுக்கு உட்படுத்தி வலியை குறைக்கும். இந்த வரிசையில் தற்போது வேறு பல மருந்துகளும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஆறு மாதம் பீட்டா பிளாக்கர்ஸை எடுத்துக்கொண்ட நிலையில் இந்த காலத்தில் மைக்ரேன் இல்லாமல் இருந்துள்ளேன். மருந்தே இல்லாமல் மைக்ரேனை தடுக்க வேண்டும் என்பது என் அடுத்த லட்சியம்.

ஆனால் அண்மையில் மீண்டும் மைக்ரேன் தாக்குதலுக்கு ஆளானேன். இதற்கிடையில் மாரடைப்புக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு பறந்தேன். ஆனால் நல்ல வேளையாக அது தவறான அறிகுறி என தெரியவந்தது. ஆனால் அந்நிகழ்வு என் அகக் கண்ணை திறந்தது என்றே கூற வேண்டும்.

உடலின் முக்கிய உறுப்புகளை மைக்ரேன் சிகிச்சை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அந்த விழிப்புணர்வு. அந்த நிலை மருத்துவ வானில் தொடுவான நிலையில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

www.myvelichamtv.com

Categories
சுகாதாரம்

புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்’ – ஆராய்ச்சி முடிவுகள்

‘புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்’ – ஆராய்ச்சி முடிவுகள்

 • தேயிலை

தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான “குவாண்டம் துகள்கள்” (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து “குவாண்டம் துகள்”களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழுவினர்SWANSEA UNIVERSITY
இக்கண்டுபிடிப்பின் முக்கிய ஆய்வுக் குழுவினர்- (இடது புறம் இருந்து வலது புறம்) முனைவர் கேத்ரின் டி காஸ்ட்ரோ, முனைவர் மாத்யூ டேவிஸ், முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.

இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

“தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்” என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.

“தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்” என முனைவர் சுதாகர் கூறுகிறார்.

மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழு
இந்திய ஆய்வுக் குழுவில் முக்கிய பங்காற்றியவர்கள், முனைவர் மைதிலி ஞானமங்கை பாலசுப்ரமணியம் (இடம் இருந்து மூன்றாவது), மற்றும் கவிதா சிவாஜி (இடம் இருந்து நான்காவது)

இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.

தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.

வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.

புற்று நோய்SWANSEA UNIVERSITY

ஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.

ஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.

 • மிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் “குவாண்டம் துகள் தொழிற்சாலை”யினை நிறுவுவது.
 • ஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.
புற்று நோய்SWANSEA UNIVERSITY

மேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Categories
சுகாதாரம்

‘புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்’ – ஆராய்ச்சி முடிவுகள்

‘புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்’ – ஆராய்ச்சி முடிவுகள்

தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான “குவாண்டம் துகள்கள்” (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து “குவாண்டம் துகள்”களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழுவினர்           SWANSEA UNIVERSITY
 இக்கண்டுபிடிப்பின் முக்கிய ஆய்வுக் குழுவினர்- (இடது புறம் இருந்து வலது புறம்) முனைவர் கேத்ரின் டி காஸ்ட்ரோ, முனைவர் மாத்யூ டேவிஸ், முனைவர் சுதாகர் பிச்சைமுத்து.

இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

“தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்” என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.

“தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்” என முனைவர் சுதாகர் கூறுகிறார்.

மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.

ஆய்வுக் குழு
 இந்திய ஆய்வுக் குழுவில் முக்கிய பங்காற்றியவர்கள், முனைவர் மைதிலி ஞானமங்கை பாலசுப்ரமணியம் (இடம் இருந்து மூன்றாவது), மற்றும் கவிதா சிவாஜி (இடம் இருந்து நான்காவது)

இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.

தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.

வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.

புற்று நோய்                  SWANSEA UNIVERSITY

ஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.

ஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.

 • மிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் “குவாண்டம் துகள் தொழிற்சாலை”யினை நிறுவுவது.
 • ஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.
புற்று நோய்              SWANSEA UNIVERSITY

மேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்