கொரோனா அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை

0
207

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் 849 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் இத்தனை மரணங்கள் பதிவாவது ஸ்பெயினில் இதுவே முதல்முறை.

ஸ்பெயின் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயினில் 849 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பரவியதிலிருந்து ஒரு நாளில் இத்தனை மரணங்கள் பதிவாவது ஸ்பெயினில் இதுவே முதல்முறை.

ஸ்பெயினில் இப்போது வரை 8,189 பேர் பலியாகி உள்ளனர்.

ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில்தான் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.

பிரான்ஸ் குடும்ப வன்முறை

கொரோனாகாரணமாகப் பலர் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன.

பிரான்ஸில் ஒட்டுமொத்தாக 32 சதவீத அளவுக்கு குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாரிஸீல் 36 சதவீதம் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாலின சமத்துவத்திற்கான செயலாளர் தெரிவிக்கிறார்.

தரையிறங்கும் விமான நிறுவனங்கள்

சர்வதேச அளவில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் இது விமானச் சேவையிலும் தாக்கம் செலுத்தி உள்ளது. பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இவ்வாண்டு விமான நிறுவனங்கள் 252 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் எனச் சர்வதேச விமானச் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான சேவை நிறுவனம் மட்டும் அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலர் நிதியைக் கோரி உள்ளது.

நான்கில் மூவர்

சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் 164,610 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 3000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அங்குள்ள 50 மாகாணங்களில் 32 மாகாணங்கள் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது நான்கில் மூன்று அமெரிக்கர்கள் இப்போது வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பல மாகாண ஆளுநர்கள் தங்களிடம் போதுமான பரிசோதனை கருவிகள் இல்லை என ட்ரம்புடன் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.

சிரியாவின் நிலை?

ஐ.எஸ் அமைப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிரியாவில் முதல் கொரோனா மரணம் பதிவாகி உள்ளது.

மேலும் 9 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சிரியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

64 சதவீத மருத்துவமனைகள்தான் அங்கு முழு செயல்பாட்டில் இருப்பதாகவும், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்கள் போதுமான அளவில் அங்கு இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

போருக்குப் பின் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே பலம் பெயர்ந்து மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

இரவில் வெளியே வரத் தடை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பள்ளிவாசல்களில் ஒன்று கூட தடை என பல நடவடிக்கைகளை சிரியாவின்அல்பசர்ஆசாத அரசாங்கம் எடுத்துள்ளது.

ஆப்ரிக்காவின் நிலை?

காங்கோ குடியரசின் முன்னாள் அதிபர் ஜாக்ஜோஷாங்யோம்பி ஒபாங்கோ கொரோனாவைரஸ் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 81.

இவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருந்தது என இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1977 முதல் 1979 வரை அதிபர் பதவியிலிருந்தார்ஜாக்ஜோஷாங்யோம்பிஒபாங்கோ.

தான்சான்யா நாட்டில் முதல் கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. 49 வயதான தான்சானியர் பலியானதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Your Comments