Categories
பொது செய்திகள்

இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாத வரை திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது …மோகன் ஷான்

இந்து பக்தர்களுக்காக சடங்கு, திருமண சம்பிரதாயங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் வீடியோ மாநாட்டில் செய்ய முடியாது என சங்க மலேசியா தலைவர் மோகன் ஷான் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோகன் கூறினார் ஒரு வீடியோ மாநாட்டில் திருமணத்தை அனுமதித்த இஸ்லாத்திற்கு மாறாக, இந்து பக்தர்கள் ஒரு பழக்க வழக்கமான திருமணங்களை நேரில் செய்ய வேண்டும்.

“உண்மையில் இந்து பக்தர்களுக்காக திருமணத்தை பதிவு செய்வது தேசிய பதிவுத் துறையிடம் (JKN) செய்யப்பட வேண்டும். இது ஒரு கடப்பாடு. JKN இல் பதிவு செய்யும்போது அதை ஆன்லைனில் செய்யலாம்.

“ஆனால், இந்து மதத்தின் பழக்க வழக்கங்கள் மற்றும் கோட்பாடுகளால், ஆன்லைனில் செய்ய முடியாத விஷயங்கள் உள்ளன. திருமண பதிவு, JKN ல் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாத வரை, திருமணம் என்பது அதிகாரப்பூர்வமான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது ”

Categories
பொது செய்திகள்

இ-ஹெய்லிங் சேவை பரிசோதனை கிளினிக்கில் …..சப்ரி யாக்கோப்


இ-ஹெய்லிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள், தனது ஊழியர்கள் ஒவ்வொருவரும் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்வதை உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். உணவு விநியோகிப்பவர் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதிச்செய்ய இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இ-ஹெய்லிங் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு, உத்தரவிடவிருக்கின்றது. அதோடு, துரித உணவகங்களுக்கு, உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு உத்தரவிடவிருக்கின்றது. அதே வேளையில், துரித உணவகங்களின் மோட்டார் சைக்கில் ஓட்டுனர்கள் உட்பட நடப்பில் இருக்கும் இ-ஹெய்லிங் சேவை வழங்கும் 41-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படலாம். இந்த இ-ஹெய்லிங் சேவை இல்லாத புறநகர் மற்றும் சிறு நகரங்களில், உணவக உரிமையாளர்கள் இதர நிறுவனங்களின் உணவு அனுப்பும் சேவையைப் பயன்படுத்தலாம் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.

Categories
English News பொது செய்திகள்

Simpanan KWSP merupakan simpanan …Dr.Albert Jay Raj

Perdana Menteri telah membuat pengumuman bahawa berikutuan dengan krisis COVID-19, rakyat boleh membuat pengeluaran dari akaun 2 KWSP untuk menampung keperluan harian.

Saya selaku Presiden GHBM menyatakan pendirian kami menentang skim ini. Simpanan KWSP merupakan simpanan yang boleh digunakan apabila kita tidak mampu berkerja ataupun mencapai usia persaraan. Mengikut analisis pakar kewangan, kebanyakan pesara menghabiskan wang dari KWSP dalam masa kurang daripada setahun. Ini adalah kerana kebanyakan pesara terpaksa menanggung perbelanjaan anak mereka yang masih belajar, melangsaikan hutang-hutang dan perbelanjaan keperluan harian.

Ia adalah tidak praktikal untuk mengeluarkan wang dari akaun ke-2 KWSP dalam situasi sebegini, jika duit dalam akaun -2 berkurangan apabila mereka mencecah usia persaraan mereka tidak dapat menampung keperluan harian mereka.

Oleh itu saya memohon kerajaan supaya menimbang semula perkara ini. Saya percaya terdapat banyak skim yang boleh dilaksanakan bagi membantu rakyat menghadapi situasi sebegini.

Categories
Featured பொது செய்திகள்

படிக்கட்டுகளில் வர்ணம்; பத்துமலை புராதன பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

படிக்கட்டுகளில் வர்ணம்; பத்துமலை புராதன பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.29- பத்துமலைத் திருத்தலத்தின் படிக்கட்டுகளுக்கும் மற்ற சிற்பங்களுக்கும் வர்ணம் பூசியிருப்பது பல தரப்புக்களிடமிருந்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் அந்தத் திருத்தலம் யுனஸ்கோவின் புராதன சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

2005-ஆம் ஆண்டு தேசிய புராதனச் சின்னங்கள் சட்டத்தின் 40-வது பிரிவின்படி தேசிய புராதனத் துறையின் அனுமதியின்றி மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டதால் பத்துமலைக் கோயில் தனது புராதன அடையாளத்தை இழந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாரம்பரிய சின்னம் என்ற அடிப்படையில் ஒரு கட்டடடத்தின் அல்லத்து ஆலயத்தின் புராதன அடையாளங்கள் பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக தேசிய புராதனத் துறை தெரிவித்திருப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஸ் தெரிவித்தார்.

இதனிடையே, பத்துமலைத் திருத்தலத்தின் திருக்குட நன்னீராட்டு விழாவிற்காகவே இந்த திருப்பணிகள் செய்யப்பட்டதாக தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கூறியுள்ளார்.

கோயிலில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் செலயாங் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின் பேரிலே மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். புதிதாக எந்தக் கட்டடமும் பத்துமலை வளாகத்தில் எழுப்பப்படாததால்தான் சாயம் பூசுவதற்கு அனுமதி கோரவில்லை என நடஜாரா விளக்கமளித்துள்ளார்.

அதே சமயம், கோயிலை மறுசீரமைப்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் எந்த அனுமதியும் அளிக்கப்பட்டதற்கான பதிவுகள் தங்களிடம் இல்லையென செலாயாங் நகராண்மைக் கழக துணை இயக்குநர் அகமட் பாவ்ஸி இஷாக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் பத்துமலை ஆலய நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்டறிந்த பின்னர் பத்துமலைத் திருத்தலம் புராதன சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்குவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என தேசிய புராதனத் துறை கூறியுள்ளது.

Categories
பொது செய்திகள்

பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு!….பெரு.அ. தமிழ்மணி அனுதாபம்!

பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு!  பெரு.அ. தமிழ்மணி  அனுதாபம்!

 

எனது நீண்ட நெடிய நண்பர் எம். துரைராஜூ காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று காலை அவரின் மரணச்செய்தியை அவரின் பிள்ளைகள்தெரிவித்தனர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் அவர் ஆற்றிய பணி மகத்தானதாகும்! பத்திரிகை உலகின்

பிதாமகன் என்றழைக்கப்படும் நண்பர் துரைராஜூ அவர்களின் மரணச்செய்து பேரிடியாக அமைந்தது. தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்குமகத்தானது. அரசு இதழான உதயத்தின் மூலமாக தோட்டப்புற எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் படைப்புகளை வெளியிட்ட பெருமை அவரையே சாரும்! அதேவேளை நிறைய செய்தியாளர்களை பத்திரிகைத்துறைக்கு திருப்பிவிட்ட பெருமைக்குரிய பேராசானாகும். பத்திரிகைகளில் அளவிட்டு அவர் எழுதிய தலையங்கங்கள் வாசகர்களை வெகுவாக ஈர்த்தது.

சிங்கையில் 1955 ல் தொடங்கிய அவரின்பத்திரிகைப்பணி யானது, பின்னர் தமிழ்நேசனின் ஆசிரியராக பணியாற்றிய கே சி.அருணின் பாராட்டுக்கும் பெருமைக்குமுரியதாகவும் அமைந்தது.அதேவேளை மலேசிய வானொலி- தொலைக்காட்சியில் அவரின் பணி மகத்தானதாகும்.

அவர்அரசுத்துறையில் ஓய்வுக்கொள்ளும் வரை “உதயம்” இதழின் ஆசிரியராகவே பணியாற்றினார். குறிப்பாக மலேசியத்தமிழ சிறுகதைத்துறையை கட்டமைத்த பெருமை அவரையே சாரும்! சிறுகதைக்கு அவர் நாடெங்கும் நடத்திய கருத்தரங்கு வழி புதிய எழுத்தாளர்களை உருவெடுக்க வைத்த பங்கு மகத்தானதாகும். அதேவேளை மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்தும் அதன் படைப்பாளர்களின் வளர்ச்சி குறித்தும் இவர் கொண்ட கவனயீர்ப்பினால்தான் எழுத்தாளர் சங்கத்திற்கென “இலக்கியப்பரிசு” வாரியமும் உருவெடுத்தது.

அதேவேளை இவர் தலைவராகயிருந்த காலத்தில்தான் நாடெங்கும் நூல்நிலையங்கள் அமைக்கும் பணியும தொடங்கியது. சிறந்த இலக்கியப்படைப்பாளியான அய்யா எம். துரைராஜூ மறைவு இலக்கிய உலகிற்கும் பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும் என்று முன்னாள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்தபத்திரிகையாளரும், திசைகள் மின்னியல் அலைபேசி தொலைக்காட்சியின் நிறுவனருமான எழுத்தாண்மை ஏந்தல்

பெரு.அ. தமிழ்மணி வெளியிட்ட இரங்கற்

செய்தியில் மேற்கண்ட

  • வாறு குறிப்பிட்டுள்ளார்.
Categories
Featured பொது செய்திகள்

பத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவு அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும்.   டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன்.

அபத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவு அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும்.   டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன்.

சீர்மிகு தமிழ்த்தாயின் பெருமைக்குறிய மைந்தர்களில் ஒருவர். சீரிய தமிழ்ப்பணி ஆற்றி தமிழ் அறிந்த தமிழர்கள் மத்தியில் ஏறுபோல் பீடுநடை போட்டவர். உதயத்தின் வழி தமிழ் இதயங்களைத் தொட்டவர். காலஞ்சென்ற  மலாயா பல்கலைக்கழக டாக்டர் தண்டாயுததின் இனிய தோழர். சிறந்த  நாவலராகவும் விளங்கிய அவர், இந்த காவலனுக்கும் அன்புத்தோழர்

.

1982ல் மலாயா பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் தலைவராக நான் இருந்தபோது, பேரவைச் செயலாளராக இருந்த எனது  அருமைத் தோழர் வீ.லோகநாதனின் மூலமாக அரும்பிய நட்பு, இன்றுவரை இனிய மணம் வீசி மகிழ்ச்சி தந்தது. அந்த இனிய மணம் என்றும் நிலைத்திருக்கும். “உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்ற குறளுக்கு ஏற்ப இருந்தது.. எங்கள் தமிழுறவு.  அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும்.

அன்னாரின் அன்பை என்றும் மறவா டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன். பினாங்கு போலீஸ் கமிஷ்னர்.

Categories
Kelantan பொது செய்திகள்

முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை

முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை

காதல் திருமணம், கொலை, கைது,

பரிதாபாத்: முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
விவாகரத்து

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் நேரு காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(22). இவரது வீடருகே வசித்து வந்த ருக்சார் என்ற முஸ்லிம் பெண் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ராஜஸ்தான் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். ருக்சார் தனது பெயரை ருக்மணி என மாற்றி கொண்டு, இந்து மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தார்.

அவர், கர்ப்பமானதை தொடர்ந்து , இருவரும் எட்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சஞ்சயை முஸ்லிமாக மதம் மாற வலியுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சஞ்சய் மனைவியை அழைத்து கொண்டு வேறு பகுதியில் குடியேறினார். இந்த பிரச்னைகள் காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சஞ்சயிடமிருந்து வலுக்கட்டாயமாக ருக்சாரை, குடும்பத்தினர் விவகாரத்து செய்து வைத்தனர். காதல் மனைவியை மறக்க முடியாமல், சஞ்சய் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டார்.

கைது

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ருக்சரின் சகோதரர் சலீம், சஞ்சயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து பேச வேண்டும், பிரச்னையை தீர்க்க வேண்டும் எனக்கூறி, அழைத்துள்ளார். இதனை நம்பி, மறுநாள் சொந்த ஊர் வந்த சஞ்சயை, சலீம் அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால், அவரின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தநிலையில், கடந்த 21ம் தேதி சஞ்சயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக ருக்சரின் தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

Categories
Featured பொது செய்திகள்

ஜோ லோ விமானம்: பார்க்கிங் கட்டணம் ரிம35 லட்சம்

ஜோ லோ விமானம்: பார்க்கிங் கட்டணம் ரிம35 லட்சம்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.24- சிங்கப்பூரில் இருக்கும் தொழிலதிபர் ஜோ லோவின் ‘போம்பார்டியர் குளோபல் 5000’ ஜெட் விமானத்தை மலேசியாவுக்கு கொண்டு வருவதற்கு 35 லட்சம் ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து அந்த விமானம் செலெத்தார் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்விமானத்தை மலேசியாவுக்கு அனுப்ப வேண்டுமானால், கடந்த 18 மாதங்களாக அவ்விமானத்தை தங்களின் இடத்தில் நிறுத்தி வைத்ததற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என செலெத்தார் விமான நிலையம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மலேசிய அரசாங்கம் அந்த ஆடம்பர விமானத்தை திரும்ப பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்ட பிறகு, செலெத்தார் விமான நிலையம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Featured பொது செய்திகள்

காப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம்….பேராசைக்கார தமிழன்

   காப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம்….பேராசைக்கார தமிழன்

உலகின் பல பகுதிகளிலும் மண்ணின் வளங்களை சுரண்டிகொளுக்கும் இவர்களின் அதிகாரப் போட்டியில் மீளமுடியாதவாறு உலகின் பல தேசிய இனங்களின் வாழ்க்கை திட்டமிட்டு கட்டியமைக்கப்படுகின்றது அதில் தமிழ்த் தேசிய  இனமும் ஒன்று !!!

ஒருவரும் வேண்டாம் என்று விலகவும் முடியவில்லை ஒருவர் வேண்டும் என்று ஒருவரோடு நெருங்கிப் பழகவும் முடியவில்லை !!!!

எமது இனத்தின் விடுதலையோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்தில் வாழும் அனைத்து இன மக்களின் விடுதலைக்கும் சுகத்திரத்திற்கும் இந்த வல்லாதிக்க காப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம் ??????

சுயசார்புடன் இருந்தால் மட்டுமே நாம் மீள முடியும் ஆடம்பரமாக வாழவேண்டும் என்றால் இவர்களின் (காப்ரேட்களின்) அடிமையாகத்தான் வாழமுடியும் !!!!

முடிந்தவரை சுயசார்பு வாழ்வின் அடிப்படையான நிலங்களில் உங்கள் முதலீட்டை பெருக்குங்கள் வேளாண் பண்ணைகளை உருவாக்கி உணவு உற்பத்தியையும் பெருக்குங்கள் பண்ணை நிலப் பகுதியிலேயே உங்கள் குடியிருப்பையும் அமையுங்கள் கூட்டுக் குடும்பமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் !!!

சுய சார்புடன் வாழ்ந்தால் மட்டுமே நம்மால் சுயமாக செயல்படவும் சிந்திக்கவும் முடியும் இதுதான் அடிப்படை !!!

பல நாடுகளில் சுயசார்பு வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தம் அற்ற வீடுகளை  திட்டமிட்டே உலக காப்ரேட்கள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றது அதற்கு உலக காப்ரேட் வங்கிகளும் கடன் என்ற பெயரில் ஒவ்வொருவரையும் அடிமைபடுத்திவைத்துள்ளது …….

அது மட்டும் அல்லாது கண்டிபாக ஒருவர் பணம் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு ஆடம்பர வாழ்வியலையும் திட்டமிட்டு காப்ரேட் ஊடகங்கள் முலம் பரப்பிவருகின்றது!!

!

கார் வேண்டும், பங்களா வீடு வேண்டும், LED தொலைக்காட்சி வேண்டும், அப்பிள் கைபேசி வேண்டும், இப்படி இன்னும் பல ஒவ்வொரு மனிதர்களின் ஆசைக்கு குறைவேயில்லை …….

இப்படி இருக்கும் வரை உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனிதன் அடிமைதான் ஒவ்வொருவரின் ஆசையே இந்த காப்ரேட் வல்லாதிக்கங்களின் வளச்சுரண்டலுக்கும் அதிகரப்போட்டிக்கும் காரணம் என்பதை எப்பொழுது இந்த மனித இனம் உணரப்போகின்றதோ தெரியவில்லையே ??????????

பேராசை நிலையில் இருந்து மனிதன் என்று அமைதியான நின்மதியான உன்னதமான இயற்கையோடு ஒன்றிய வாழ்வை நோக்கி பயணிக்கின்றானோ அன்றுதான் இந்த பூமியில்  அமைதியும் நின்மதியும் பிறக்கும் !!!!

மனிதனின் பேராசையால் மனிதனே மனிதம் இழந்து மிருகமாகின்றான் இன்று……

அன்று மிருகங்களை வேட்டையாடி கொன்று தின்ற மனிதன் இன்று வளச்சுரண்டலுக்காக சக மனிதர்களையே வேட்டையாடுகின்றான் இதற்கு பெயர் வளர்ச்சியாம் இந்த காப்ரேட் கைபொம்மை அரசுகள் கூறுகின்றது!!!

உலகம் அமைதி பெறட்டும் , பூமி செழித்து  பசுமையகட்டும், ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கைமேல் காதல் வரட்டும்!!!

மண்ணும், மலைகளும், காடுகளும், நீர் நிலைகளும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் இயல்பாக நின்மதியாக வாழமுடியும்…..

ஆனால் மண்ணையும் மலைகளையும் காடுகளையும் நீர் நிலைகளையும் அழித்து உருவாக்கப்படும் போலியான வளச்சி என்ற பசப்பு வார்த்தை வித்தை காட்டிவரும் வல்லாதிக்க காப்ரேட்களின் அதிகாரப்போட்டி வளச்சுரண்டல்களுக்கு  முடிவுகட்டப்போவது யார்?????

ஒவ்வொரு இனங்களின் மீட்சியும் வேண்டும் அதனால் இந்த தமிழ் இனத்திற்கு உலகம் தழுவிய பார்வையும் வேண்டும் !!!

தொழில் நுட்பம் தேவைதான் ஆனால் அவை இந்த பூமியை அழிவிற்கு கொண்டுசெல்லக் கூடாது அல்லவா ……

நாசாவின் காப்ரேட் கைக்கூலி விஞ்ஞானிகள்  செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கின்றது என்பான் சனிக் கிரகத்தில் நீர் இருக்கின்றது என்பான் உன்னால் அங்கு சென்று நீர் எடுத்துவர முடியுமா இல்லை அந்த கிரகங்கள் தான் உனக்கு பக்கத்தில் இருக்கின்றதா ?????

பூமியின் பசுமையை, நீர் வளங்களை, மலைகளை, மண்ணின் வளத்தை கெடுக்கும் திட்டங்களை உலகில் எங்குமே செயல்படாது பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இயற்கையை நேசிக்கும் மனிதர்களின் கட்டாய கடமை சிந்திப்போம் செயல்படுவோம் வாருங்கள் !!!

வல்லாதிக்க காப்ரேட் வளச்சுரண்டல் அதிகாரப் போட்டியில் சிக்கித்தவிக்கும் பூமித்தாயின் விடுதலைக்காய் குரல்கொடு மனிதமே!!!

இயற்கையை நேசிக்கும் ஒரு பேராசைக்கார தமிழன்

 

(தமிழ் தமிழர்கள் என்று இதுவரை பதிவிட்டு வந்த நான் இன்று மொழிகள் , மதங்கள் கடந்து இந்த பதிவை எழுதியிருக்கின்றேன் காரணம் இந்த வல்லாதிக்க காப்ரேட்களால் பாதிக்கப்பட்டதும் பாதிக்கபட்டுக்கொண்டு இருப்பதும் தமிழர்கள் போல் பல தேசிய இனங்களின் வாழ்வும் அத்தோடு இந்த பூமியின் இயல்பான நிலையும் ஒன்று! சாவது நாம் சாதிக்கட்டும் இயற்கை!

Categories
பொது செய்திகள்

கருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா? என்ன சொல்கிறார்கள் ஜென் இளைஞர்கள்

கருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா? என்ன சொல்கிறார்கள் ஜென்  இளைஞர்கள்

  • உங்களிடம் உள்ள சமூக நீதி தொடர்பான பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருணாநிதி இவ்வாறாக பதில் அளித்தார், “இன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகின்ற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.
கருணாநிதி

அந்த நம்பிக்கையை பொய்க்கவிட மாட்டோம் என்கிறார்கள் திராவிட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட ஜென் z இளைஞர்கள்.

தமிழக சமூக அரசியலை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும் தேர்தல் அரசியலையெல்லாம் தாண்டி கடந்த ஒரு தசாப்தமாக எப்போதும் இல்லாத அளவுக்கு ஓராண்டாக திராவிட சித்தாந்தம், சமூக நீதி குறித்தெல்லாம் அதிகம் உரையாடப்படுகிறது. அது தொடர்பான கூட்டங்களும், பயிற்சி பட்டறைகளும் அதிகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சமூக ஊடகத்திலும் இது குறித்த காத்திரமான உரையாடல்களை இளைஞர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தத்துவநோக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அணுகுபவர்களிடம், அவரின் சமூக பங்களிப்பு பற்றி பேசினோம். அவர்கள் அனைவரும் கருணாநிதியை நேசிக்க காரணமாக சொல்வது, அவரின் மக்கள் நலத் திட்டங்களில் இயல்பாக இருந்த சமூக நீதி கொள்கைகளைதான்.

‘சமூக நீதிக் கொள்கை’

மென்பொறியாளர் ஜெயன் நாதன், “கருணாநிதி கொண்டுவந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு மேற்படிப்பு இலவசம் என்பது மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ அரசு நலத் திட்டமாக தெரியலாம். ஆனால், அதற்குள் ஆழமாக சமூக நீதி கொள்கை இருக்கிறது. சமூக நீதியின் மீது பிடிப்பு கொண்டவரால்தான் இப்படியாக யோசித்திருக்க முடியும்.” என்கிறார்.

ஜெயன் நாதன் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பயிற்சி பட்டறைகளிலும் திராவிடம் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து வருபவர்.

சிங்கப்பூரில் இப்போது வசிக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ராஜராஜனும் இது போன்ற கருத்தைதான் முன்வைக்கிறார்.

அவர், “நான் பள்ளி பயிலும் போது நான் பயணிக்க இலவச பஸ் பாஸ் தந்தவர் கருணாநிதி. இதை மேம்போக்காக பார்த்தால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், தொலை கிராமங்களில் இருந்து புறப்பட்டு வந்த இளைஞர்களிடம் பேசி பாருங்கள். பொது புத்தியில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்றும், தங்கள் வாழ்வை எப்படி மாற்றியது என்றும் விளக்குவார்கள்” என்கிறார்.

தனியுடமை உச்சத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் பெண்களுக்கான சொத்து உரிமையை உறுதிபடுத்தியதை கருணாநிதியின் முக்கியமான நகர்வாக பார்ப்பதாக கூறுகிறார் ராஜராஜன்.

‘வெளியே பயணித்து பாருங்கள்’

மருத்துவரான யாழினி, “தமிழகத்திற்கு வெளியே கொஞ்சம் பயணித்து பாருங்கள் கலைஞர் நமக்கெல்லாம் என்ன செய்தார் என்று தெரியும். மற்ற மாநிலங்களைவிட நாம் எந்தளவுக்கு முற்போக்காக இருக்கிறோம் என்று புரியும்” என்கிறார்.

கருணாநிதி

“நான் மருத்துவர் என் துறையிலிருந்து அவரை அணுகும் போது ஒன்று தெளிவாக புரிகிறது, அவர் வகுத்த சுகாதார கொள்கைகள் நிச்சயம் வாக்கு அரசியலுக்கானது அல்ல. மக்கள் மீதும் அக்கறையும், கொள்கை பிடிப்பும் உள்ள ஒருவரால்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். பத்து கி.மீ-க்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமங்கள் தோறும் துணை சுகாதார நிலையம், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் என இப்படியான உள்கட்டமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதனை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு மகத்தானது” என்று விவரிக்கிறார் யாழினி.

‘உலகமயமாக்கல்`

அதே நேரம் கருணாநிதியின் ஆட்சி எந்த தவறும் நேராத உன்னத ஆட்சி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் அவர்கள்.

“எந்த பிழையும் இல்லாத அரசு என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதற்கு கலைஞரின் ஆட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், அவரது கொள்கை கொள்கை முடிவுகளை, திட்டங்களை விமர்சிப்பவர்கள். அது எதுமாதிரியான சூழலில் தீட்டப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பதையும் பகுத்து புரிந்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயன் நாதன்.

இது குறித்து மேலும் அவர், “உலகமயமாக்கலுக்குப் பின் முன்னுரிமைகளாக நாம் கருதுவது அனைத்தும் மாறியது. உலக சூழல் மாற்றமடைந்தது. இதன் காரணமாக புது புது எதிர்பாராத சிக்கல்கலும் முளைத்தன. இப்படியான சூழலில் ஒருவர் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார், எது மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் கருணாநிதி, உலகமயமாக்கலை சரியாக புரிந்து, அணுகி இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.” என்று விவரிக்கிறார் ஜெயன் நாதன்.