முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை

0
215

முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை

காதல் திருமணம், கொலை, கைது,

பரிதாபாத்: முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
விவாகரத்து

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் நேரு காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(22). இவரது வீடருகே வசித்து வந்த ருக்சார் என்ற முஸ்லிம் பெண் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ராஜஸ்தான் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். ருக்சார் தனது பெயரை ருக்மணி என மாற்றி கொண்டு, இந்து மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தார்.

அவர், கர்ப்பமானதை தொடர்ந்து , இருவரும் எட்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சஞ்சயை முஸ்லிமாக மதம் மாற வலியுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சஞ்சய் மனைவியை அழைத்து கொண்டு வேறு பகுதியில் குடியேறினார். இந்த பிரச்னைகள் காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சஞ்சயிடமிருந்து வலுக்கட்டாயமாக ருக்சாரை, குடும்பத்தினர் விவகாரத்து செய்து வைத்தனர். காதல் மனைவியை மறக்க முடியாமல், சஞ்சய் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டார்.

கைது

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ருக்சரின் சகோதரர் சலீம், சஞ்சயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து பேச வேண்டும், பிரச்னையை தீர்க்க வேண்டும் எனக்கூறி, அழைத்துள்ளார். இதனை நம்பி, மறுநாள் சொந்த ஊர் வந்த சஞ்சயை, சலீம் அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால், அவரின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தநிலையில், கடந்த 21ம் தேதி சஞ்சயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக ருக்சரின் தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

Your Comments