பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை, புத்தகப்பை, பள்ளி உபகரணங்கள், பள்ளிக்கட்டணம், இலவசம்

Nibong Tebal SJKT School uniforms school bags school equipment's school fees free of cost to school students Sponsor by Sree Vikneswaran

பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை, புத்தகப்பை, பள்ளி உபகரணங்கள், பள்ளிக்கட்டணம், இலவசம்

News By ;Dato Lee Nibong Tebal  10 Dec 2024 

திரான்ஸ்கிரியான் தோட்டத்தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாக டத்தோ BK.லீ  கூறினார்

.


நிபோங் திபால் தோட்டத்தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம், திரான்ஸ்கிரியான் தோட்டத்தமிழ்ப்பள்ளியில் படிக்கின்ற, பாலர் பள்ளி முதல் ஆறாம் ஆண்டு   வரைக்குமான  (2025-2026) பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை, புத்தகப்பை, பள்ளி உபகரணங்கள், பள்ளிக்கட்டணம்,  ஆகியவற்றுடன் பள்ளிக்குத்
தேவையான தளவாடப் பொருட்களும் இலவசமாக 
வழங்கப்படுவதாக திரான்ஸ்கிரியான் தோட்டத்
தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் டத்தோ BK.லீ தெரிவித்தார். 

இந்த உதவிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக இளம் தொழிலதிபர் ஸ்ரீ விக்னேஸ்வரன் (அ) விக்கி அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதை டத்தோ லீ குறிப்பிட்டார். 


இதன் வழி பெற்றோர்களின் சுமையை குறைக்க  முடியும்.
ஏழ்மைக் காரணமாக  எந்தவொரு மாணவரும் கல்வியில் பின் தங்கி விடக்கூடாது என்று கூறிய டத்தோ லீ, இந்த முயற்சியின்  முக்கிய நோக்கம் பொருளாதாரச் சிக்கல் ஏதுமின்றி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கல்வி கற்பதோடு தன்னையும் தன் குடும்பத்தையும்  மேம்படுத்திக்கொள்ள   முடியும்.


இவ்வேளையில் திரான்ஸ்கிரியான் தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கார்த்தி மாரி அவர்களுக்கும், ஆக்கரமான ஆலோசனைகளையும்  தூர நோக்கு திட்டங்களையும் வழங்கிய பள்ளி மேலாளர் வாரியம், பெ.ஆ.சங்கம் ஆகியவற்றின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிறைவை அளிப்பதாகவும்

ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையிலான தொடர்புகள் நமது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்  நன்மை பயக்கும் வகையில் அமைவதாகவும் டத்தோ BK. லீ தெரிவித்தார்.