நிபோங் திபால் மக்காவ் சுவா மக்கள் 74 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்கள் ஏழைமக்கள்...

Nibong Thibal Makau Chua has lived there for 74 years and the poor...

நிபோங் திபால் மக்காவ் சுவா மக்கள் 74 ஆண்டுகளாக  அங்கு வசிப்பவர்கள் ஏழைமக்கள்...

News By : RM Chandran

 

25 Sept 2024 - மக்காவ் சுவா பகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் வசிப்பவர்கள் என்று கூறினார் தியாகராஜ் சங்கர நாராயணன்.

நிபோங் திபால் மக்காவ் சுவா,  பகுதியில் வசிக்கும் 23 பேருக்கு ஒரு வழக்கறிஞர் அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளது.

1952 ஆம் ஆண்டில், கம்போங் மக்காவ் சுவாவில் வசிப்பவர்கள், குறிப்பாக மலாயப் போரின் போது அவசரகால சூழலில், அதிகமான ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து அவர்களை அங்கிருந்து வேறு இடங்களில் குடிபெயர்வதற்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கப்பட்டன

.

 இந்த நடவடிக்கை பாதுகாப்பைக் கட்டுப்படுத்துவதையும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 18-9-2024 ஆம் நாளன்று குடியிருப்பாளர்கள் நிலத்தை காலி செய்யுமாறு நில உரிமையாளரின் வழக்கறிஞரிடமிருந்து கடிதத்தைப் பெற்றுள்ளனர்.

மக்காவ் சுவாவில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் 74 ஆண்டுகளாக  அங்கு வசிப்பவர்கள் இந்நாட்டின் மூத்த தலைமுறையை  ,நேர்மையானவர்கள்,
மற்றும் ஏழைகள் என்பதால், அவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு நில உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக்கூறினார் தியாகராஜ் சங்கர நாராயணன்.  துரதிர்ஷ்டவசமாக விண்ணப்பம் தோல்வியடைந்தது.

டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமுவுடன் எனது கலந்துரையாடலில் இருந்து, நில உரிமையாளரின் வாரிசுகளுக்கு நில உரிமையாளரிடமிருந்து குடியிருப்போருக்கு 20,000 வெள்ளி இழப்பீடு வழங்குமாறு அவர்  விவாதித்து வருவதாகக் கூறினார்.

ஆனால் இன்னும் இறுதி  பேச்சு வார்த்தை முடிவாக வில்லை. மக்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க  குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து  என்னால் இயன்றவரை அவர்களுக்கு உதவுவேன் என்று கூறினார்  என் மண் என் மக்கள் தியாகராஜ் சங்கர நாராயணன்.