விவாதம் தேவையில்லை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.திரு. பி. இராமசாமி ..
No need for discussio Bring it before the law. Urumi Parti President P. Ramasamy's

Date ; 07 March 2025 News By : Ganapathy
அண்மையில் இந்துப் பெருமக்கள் காவடிச் சடங்கு முறையைப் பற்றி இழிவாகப் பேசிய ஜம்ரி வினோத்திடம் விவாதிப்பதைவிட, அதனை சட்டத்தின் கையில் விட்டுவிடுவதே நல்லது என்று உருமி மேளத் தலைவர் திரு. பி. இராமசாமி மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தகுதியற்ற ஒரு வஞ்சகரிடம் இதுபோன்ற விவாதத்தைச் செய்ய வேண்டிய மற்றும் அவரது வெறுக்கத்தக்க பிரிவினை வாத கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை – தேவையுயில்லை. அதனை சட்டத்தின் கையிலேயே விட்டு விடுவோம் - சட்டமே பதில் சொல்லட்டும் என்று அவர் இன்று பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.
எனவே டத்தோஸ்ரீ எம். சரணவனன் அவர்களிடம் விவாதத்தை தடை செய்யுமாறும் கேட்டுக் கொண்ட அவர், ஜம்ரி என்ன சொல்கிறார் என்பதை விடுத்து, இதுபோன்ற பரப்புரயைத் தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார். ஜம்ரி போன்றவர்களுக்கு இந்து சமய அறிஞர் பெருமக்களும், ஆன்மீகவாதிகளுமே சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தெளிவுப் பெறுவார்கள் என்றார்.
இந்து மதத்திற்கென்று ஒரு நீண்ட மரபு உள்ளது. இம்மதம் எப்போது தோன்றியது என்ற காலவரையறை குறிப்பிடப்பட முடியாத வகையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்து மதம் நிலைத்திருக்கின்றது. எனவே, ஒரு தொன்மையான -நீண்ட மரபைப் கொண்டுள்ள நமது இந்து மதத்தை இவரைப் போன்றவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியத அவசியமில்லை; இந்து மதத்தை அசைக்கவும் முடியாது - இந்நாட்டில் இந்து மதம் பின்பற்றப்படுவதற்கு எந்தவித தடையும் இல்லை. எனவே, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்று திரு. பி. இராமசாமி அவர்கள் மேலும் அப்பத்திரிகை அறிக்கையில் கூறியுள்ளார்.
ThankS :FMT