எந்த தில்லுமுல்லும் இல்லை! வழக்கை சந்திக்கத் தயார்! – முரளி கண்ணன்!
No rigging! Ready to face the lawsuit! – Murali Kannan!
Date 29 Dec 2024 / News By - Murali Kanna
MK Asia Production Entertainment நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அழகு ராணி போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
நாட்டில் MK Asia Production Entertainment நிறுவனத்திற்கு என்று ஒரு நல்ல பெயரும் மரியாதையும் இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற அழகு ராணி போட்டியில் மிகப்பெரிய தில்லுமுல்லுகள் இடம் பெற்றதாக பெண்மணி முன் வைத்த குற்றச்சாட்டு பெரும் வேதனையை அளிக்கிறது என்று MK Asia Production Entertainment நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி முரளி கண்ணன் தெரிவித்தார்
.
அழகு ராணி போட்டியில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்தும் அதற்கு அவர்கள் தகுதியானவர்களான என்பது குறித்தும் போட்டியாளர்களுடன் முறையான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
மேலும் அவர்களுக்கு அழகும் ராணி போட்டியில் பங்கேற்பதற்குரிய பயிற்சிகளும் வழங்கப்படும். திறமைகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அழகு ராணி போட்டியில் குமாரி பிரிவில் திருமதியை இணைந்து கொண்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். குமாரி பிரிவில் இருந்த ஒருவருக்கு திருமணம் ஆனதால் அவரை தொடர்ந்து குமாரி பிரிவில் நிலைத்திருக்க இவர் உட்பட அனைத்து போட்டியாளர்களும் அனுமதி வழங்கினர்
ஆனால் தோற்ற பிறகு இன்று எங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அள்ளி வீசுகிறார்கள். மூகநூலில் எங்களை பற்றி மிகவும் மோசமான விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதை கண்டு நாங்கள் பயப்படவில்லை. நீங்கள் மீது அவர்கள் வழக்கு தொடுத்தால் அதையும் சந்திக்கத் தயார்- என்று முரளி கண்ணன் தெரிவித்தார்.