சாலையில் எண்ணெய் கசிவு. கட்டுப்பாட்டை இழந்த காரில் பயணித்த 8 மாத கர்ப்பிணி தாய்,சேய்,2 வயது மகள் பலி.

Oil leakage on the road. Eight-month pregnant mother, baby and two-year-old daughter killed in car crash

சாலையில் எண்ணெய் கசிவு. கட்டுப்பாட்டை இழந்த காரில் பயணித்த 8 மாத கர்ப்பிணி தாய்,சேய்,2 வயது மகள் பலி.

 

ஈப்போ, ஏப் -4 News By : Rajen 

பேராக் போலிஸ் துறை சென்ற ஞாயிற்றுக்கிழமை 
ஏறக்குறைய மாலை 5 மணிக்கும் 6.45  மணிக்கும் இடையில் ஈப்போ தெரோவோங் மேனோரா 264 கிலோ மீட்டர் தெற்கு திசை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை திறந்துள்ளதோடு இல்லாமல் மோதி தள்ளி தலைமறைவாகிய
மற்றொரு காரின் ஓட்டுனரை அடையாளம் காணப்படவிருப்பதாக பேராக் போலிஸ் தலைவர் டத்தோ நோர் இஷாம் நோர்டின் சொன்னார்.

2 வயது நைரா ஃபாலிசா அப்துல் ராமான் தனது தந்தை இயக்கி வந்த காரிலிருந்து வெளியே வீசப்பட்டு மரணமடைய அவரின் 25 வயது தாய் நூர் பத்திஹா பட்ருல் ஹிசாம் என்பவர் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மரணமடைய உடன் 8 மாத சிசுவும் பலியானார்.

காரை இயக்கி வந்த 29 வயது கணவர் பலத்த காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.

இந்த விபத்தை பார்த்த வாகன மோட்டிகள் யாரும்
உதவி செய்யாமல் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட
செயலுக்கு அவர் வருத்தப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

www.myvelicham.com Face book