கண்டும் காணமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு.

Overlooking Not acceptable Social activists are outraged.

கண்டும் காணமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு.
கண்டும் காணமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு.

Date : 17 Feb 2025 News By:RM Chandran

 அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சாலே, அந்த நபரின் மன்னிப்புக்குப் பிறகும், தனது இன உணர்வற்ற  (Sain bord) விளம்பர பலகை மூலம் சர்ச்சையைத் தூண்டிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஃபேஸ்புக் பதிவில், மற்றவர்களுக்கு பாடமாக செயல்பட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்மல் கூறியுள்ளார்.

“மற்றொரு இனத்தை அவமதிக்கும் நபர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும், மன்னிப்பு மட்டும் வழங்குவதன் மூலம் (தப்பிவிடக்கூடாது).

"இல்லையென்றால், புண்படுத்தும் வகையில் ஏதாவது சொல்லுதல் அல்லது செய்தல் மற்றும் மன்னிப்பு கேட்கும் இந்த கலாச்சாரம் தொடரும், இது போன்ற நபர்கள் பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதை இன்னும் எளிதாக்கும்" என்று மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அக்மால் சாலே  கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டு ,அமைச்சர் ஆரோன் அகோ டகாங், தனது செயலுக்காக அந்தக் கடைக்கார மலாய்க்காரர் அனைத்து மலேசியர்களிடம், குறிப்பாக இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளார்.

மக்காச்சோளத்தை விற்றவர் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததாக ஆரோன் சொன்னார்.

இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள், செல்வாக்கு செலுத்துபவர்கள், உள்ளூர்வாசிகள், தேசிய ஒருமைப்பாடு, ஒருங்கிணைப்புத் துறை அதிகாரிகள், காவல்துறையின் பிரதிநிதிகள் முன்னிலையில் சிப்பாங்கிலுள்ள ஒரு உணவகத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டதாகக் கூறினர்.

சிலாங்கூரிலுள்ள சிப்பாங்  வியாபாரியின் அடையாளம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு ஒரு இந்திய இளைஞர் தன்னார்வ  தொண்டு ,அமைப்பு (MKBBT)  கண்டம்  தெரிவித்து, காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

இதனிடையே , (DAP)  ஜசெக தேசியத் தலைவர்   லிம் குவான் எங், வேண்டுமென்றே இனவெறிச் செயல்களை தூண்டும் நபர்களை தண்டிக்க வேண்டும். இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 தீவிரவாத அரசியல்வாதிகள் அல்லது பொறுப்பற்ற நபர்கள் வெறுப்பு பேச்சு, ஆத்திரமூட்டும் செயல்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வெறுப்பு அல்லது நியாயமற்ற முறையில் நடத்துவதன் மூலம் மலேசியர்களை பிளவுபடுத்தும் வகையில் இன பாகுபாட்டை பரப்பும்,உருவாக்கும் இது போன்ற வாக்கியத்தை தவிர்க்க, தடுக்க இந்த சட்டம் அவசியம்  என்று கூறிய பாகான் நாடாளுமன்ற  உறுப்பினரான லிம்,

ஆரோக்கியமற்ற மற்றும் பகுத்தறிவற்ற இனவெறி உணர்வு சமூகத்தின் சில பிரிவினரை பாதித்துள்ளது என்பதை, நடைபாதை வியாபாரி சம்பந்தப்பட்ட சம்பவம் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சருமான  லிம் குவான் எங்  தெரிவித்தார்

.

 இத்தகைய இனவெறி உணர்வுகள், ஒரு தனிநபரால் மிகவும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகிறது.
 எந்த வெட்க உணர்வும் இல்லாமல், தீவிரவாத அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனமாக  இவற்றை கண்டும் காணாமல் இருப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது," என்று மக்கள் தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.