பாக்காத்தான் ஹரப்பான் கட்சியும் மக்களை ஏமாற்றலாமா? வழக்கறிஞர் கே.எஸ் பவானி வினவினார்.

Pakatan Harapan also deceive the people? Advocate K S Bhavani asked.

பாக்காத்தான் ஹரப்பான் கட்சியும் மக்களை ஏமாற்றலாமா? வழக்கறிஞர் கே.எஸ் பவானி வினவினார்.

Date :18 APRIL 2025 News BY :Rm Chandran

எதிர்க்கட்சியாக இருந்தபோது பாக்காத்தான் ஹரப்பான் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தும், ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என விரைவில் இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கும் பேராக் ஆயர் கூனிங் தொகுதி மக்கள் தங்களது மனக்குறையை தெரிவித்துள்ளனர் என்று வழக்கறிஞர் கே.எஸ். பவானி கூறியுள்ளார். 

ஊழலை அகற்றுவோம் என்று பறைசாற்றிய கட்சி இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. முன்னாள் பிரதமர் சப்ரி யாக்கோப் மீது இன்னும் விசாரணை நடந்து வருகிறதே தவிர, எந்தவித முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. 

பாக்காத்தான் ஹரப்பான் கட்சியானது, தேசிய முன்னணியின் இரும்புப் பிடியில் 66 ஆண்டுகள் இருந்தது. அந்த ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், ஆயர் கூனிங் மக்கள் மாற்றத்தைக் காண விரும்பினர். ஆனால் எந்த வாக்குறியும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது, மக்கள் தமது பக்கம் இருப்பதுடன், மூடா கட்சித் செயல்பாட்டுத்  தலைவி அமிரா (Amirah) மற்றும் உரிமை கட்சியின் பேராசிரியர் பி ராமசாமி ஆகியோர் தமக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருவதாகவும் இத்தொகுயின் வேட்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.எஸ் பவானி கூறியுள்ளார்.

Thanks The Sun 

www.myvelicham.com Face book / Tik Tok / You Tube / X / Linkedin / Google/