இந்து இடுகாட்டின் அவல நிலை பாரிட் இந்திய இளைஞர் கண்டனம்
Parit Buntar Indian youth condemns plight of Hindu cemetery
Date : 27 Feb 2025 News by; Rajen Ipoh
புற நகர் பேராக் ஆற்றோரம் அமைய பெற்ற பாரிட் பட்டணம் அருகாமையில் அமைந்திருக்கும் இந்து இடுகாட்டின் அவல நிலை நேரில் பார்த்து சகிக்காத பாரிட் இந்திய இளைஞர் அணியினர் கண்டனம் எழுப்பினர்
கொட்டகை விழுந்து நான்கு மாதங்கள் கடந்தும்
அதனை புதுப்பிக்க தவறிவிட்டது பொறுப்பற்ற செயல்
என சீரி பாய்ந்தனர்
கொட்டகை மீண்டும் எழுப்ப வேண்டும் கடமையை அதனை பராமறிக்கும் இங்குள்ள ஆலய நிர்வாகம் காலம் தாழ்த்தாது உரிய மாற்று வேலையில் இறங்க கேட்டு கொண்டனர்.
இளைஞர் அணியை பிரதி நிதித்து பேசிய பேராக் முன்னாள் காற்ப்பந்து வீரர் நாகராஜா முத்து பேசுகையில், இடு காட்டில் புதர்கள் மண்டி கிடக்க பிரேதம் அடக்கம் அல்லது தகனம் செய்ய வருபவர்களை ஊர்வன சீண்டி பார்க்க வாய்ப்பு இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்தார்.
அடையாள பலகை பொறுத்த கூட நிதி
இல்லாமல் இருப்பது வேதனை தருகிறது என்றார்.
more news face book /www.myvelicham.com