Categories
Perak சட்டமன்றம் மாநிலம்

பேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா?

பேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா?

பெட்டாலிங் ஜெயா, பி.கே.ஆர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மக்களவையில் நுழைவதற்காக, பேரா மாநிலத்திலுள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாரிசான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட்டு, தற்போது தம்மை சுயேட்சை எம்.பி-யாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவரது தொகுதியில் அன்வார் போட்டியிடக்கூடும் சாத்தியமிருக்கிறது என்று அத்தகவல் மேலும் கூறியது.
சம்பந்தப்பட்ட அந்த எம்.பி அண்மையில் டத்தோஸ்ரீ அன்வாரைச் சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்டு வென்ற  பாகான் செராய் எம்.பி டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி அஸ்மி, புக்கிட் கந்தாங் எம்.பி டத்தோ சைட் அபு ஹூசேன் ஆகிய இருவரும் தங்களை சுயேட்சை எம்.பி-களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Categories
Featured அரசியல் சட்டமன்றம்

சொன்னதைச் செய்யுங்கள்! ….   அனுவார்

சொன்னதைச் செய்யுங்கள்!…..   அனுவார்

    கோலாலம்பூர்நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமே ஒழியவெறுமனே உணர்ச்சிப்பூர்வ விவகாரங்களை எழுப்பி மக்களின் கவனத்தைத் திசை திருப்பக் கூடாது என அம்னோ பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என வெற்று வாக்குறுதிகளைத் தந்துவிட்டு தில்லாலங்கடி அரசியல் நடத்தக்கூடாது.

தேர்தல் கொள்கை அறிக்கை திருவாசகம் அல்ல என இப்போது பிதற்றக்கூடாது. மக்களை ஏமாற்றும் திட்டமிட்ட வேலையை புதிய அரசாங்கம் செய்து வருகிறது என அவர் சாடினார்!

Categories
Featured அரசியல் சட்டமன்றம்

பலாக்கோங் இடைத்தேர்தல்: சொந்தச் சின்னத்தில் மசீச போட்டி!

பலாக்கோங் இடைத்தேர்தல்: சொந்தச் சின்னத்தில் மசீச போட்டி!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- அடுத்து வரும் பலாக்கோங் இடைத்தேர்தலில் மசீச தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும் என்று அதன் தேசியத் தலைவர் லியோவ் தியோங் லாய் அறிவித்தார்.

இந்த முடிவு மசீச தன்னிச்சையாக எடுத்த முடிவு. தங்களின் இந்த முடிவு விரைவில் தேசிய முன்னணிக்கு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

இதன்வழி மசீச தேசிய முன்னணியை விட்டு வெளியேற திட்டமிட்டிருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்ட போது, அதற்கு சீனப் பழமொழி ஒன்றை அவர் பதிலாக அளித்தார். அதாவது, தேசிய முன்னணி இப்போது பெயரில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் பார்த்தால் அது செத்து விட்டது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு கட்சியும் தன்னை மறு அமைப்புச் செய்வதில் கவனம் செலுத்தும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நம்முடைய எதிர்காலத்தில் நமக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. பொதுவாகப் பார்த்தால் நாம் புதிய சகாப்தத்தில் காலடி வைக்கிறோம் என்று மசீச தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் லியோவ் தியோங் லாய் சொன்னார்.

Categories
Featured அரசியல் சட்டமன்றம்

ரிம.18 பில்லியன் GST பணம்; பக்காத்தான் செலவு செய்துவிட்டது! -நஜிப் புகார்

ரிம.18 பில்லியன் GST பணம்; பக்காத்தான் செலவு செய்துவிட்டது! -நஜிப் புகார்

கோலாலம்பூர், ஆகஸ்ட். 10- கிட்டத்தட்ட 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணம் தேசிய முன்னணியினால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கும் வேளையில், அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து பக்காத்தான் அரசாங்கம் செலவு செய்து விட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி வரியை ஜூன் மாதம் 1ஆம் தேதி அகற்ற பக்காத்தான் அரசு முடிவு செய்ததை அடுத்து அந்தப் பணத்தையெல்லம் எடுத்து சொந்தச் செலவுகளுக்கு அரசாங்கம் பயன்படுத்தி விட்டதாக நஜிப் குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக எஸ்எஸ்டி வரியும் இல்லாத நிலையில் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை. எனவே அந்த 18 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் சொந்தச் செலவு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதி என்பது வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை திருப்பிக் கொடுப்பதற்காக வைக்கப் பட்டிருந்த நிதியம். அதனை உடனடியாக திருப்பிக் கொடுப்பதில் சிரமம் நிலவிய வேளையில் அந்தப் பணத்தை பக்காத்தான் செலவு செய்து விட்டு பழியை மற்றவர்கள் மீது போடுகிறது என்று நஜிப் சொன்னார்.

Categories
Featured அரசியல் சட்டமன்றம்

ஸ்ரீ செத்தியா சட்டமனத்தில்  இடைத் தேர்தல் 

ஸ்ரீ செத்தியா சட்டமனத்தில்  இடைத் தேர்தல்

Categories
Featured Selangor சட்டமன்றம் மாநிலம்

இடைத்தேர்தல்: பிரசாரத்தில் இறங்கினார் நஜிப்….

இடைத்தேர்தல்: பிரசாரத்தில் இறங்கினார் நஜிப்

ஷா ஆலாம்,ஜூலை.25- சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலின் பிரசாரத்திற்கு உதவும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இன்று தேசிய முன்னணியின் சேவை மையத்தை வந்தடைந்தார்.

இன்று காலை மணி 8.40 அளவில் வருகை தந்த அவரை அம்னோ துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானும் சிலாங்கூர் அம்னோ பிரிவின் தொடர்புக்குழு துணைத் தலைவர் மாட் நசாரியும் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ லோக்மான் அடாமிற்கு ஆதரவாக நஜிப், சுங்கை கண்டிஸ் கிராமத்திலுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி, சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுஹாய்மி ஷாப்பி புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து
அந்த சட்டமன்றத் தொகுதி காலியானது.

அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஸாவாவி அகமட்டும், தேசிய முன்னணி சார்பில் லோக்மான் அடாமும், சுயேட்சை வேட்பாளராக கே.மூர்த்தியும் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

share face book myvelichamtv

Categories
Featured அரசியல் சட்டமன்றம்

பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…..முன்னணி சின்னத்தில் போட்டியிடாது

பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்….முன்னணி சின்னத்தில் போட்டியிடாது

கோலாலம்பூர் – நடைபெறவிருக்கும் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மசீச போட்டியிடும் என்பதை அறிவித்துள்ள மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், ஆனால், தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிடாமல் மசீசவின் சொந்த சின்னத்தில் போட்டியிட ஆலோசித்து வருகிறது என அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அம்னோ துணைத் தலைவரான முகமட் ஹசான், தேசிய முன்னணி சின்னத்தை விட மசீச சின்னத்தின் மூலம் போட்டியிடுவதால் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என மசீச கருதினால் அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி, புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சின்னத்திலேயே போட்டியிட அம்னோ முடிவு செய்தது.

மசீச சொந்த சினத்தில் போட்டியிட்டால் அதன்மூலம் சீனர்களிடையே அதன் செல்வாக்கை எடுத்துக் காட்டும் களமாக பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் அமையும்.

Categories
Uncategorized அரசியல் சட்டமன்றம்

“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா?” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி

“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா?” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை துணிச்சலுடன்  வலியுறுத்தி வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் ஜோ லோவை உதாரணம் காட்டி துன் மகாதீருக்கு சில கேள்விகள் எழுப்பியுள்ளார்.

“சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் காட்டப்படும் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணியாது” என்ற தொனியில் மகாதீர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு எதிராக இராமசாமி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?” என மகாதீரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள இராமசாமி “அவ்வாறு ஜோ லோ இந்தியாவில் இருந்தால் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும் என்றுதானே மலேசியாவும் எதிர்பார்க்கும்?” என கேள்விக் கணை தொடுத்துள்ளார்.

தற்போது மக்காவ் தீவில் இருப்பதாக நம்பப்படும் ஜோ லோ வேறொரு நாட்டின் அனைத்துலகக் கடப்பிதழைப் பயன்படுத்தி அங்கு தஞ்சம் அடைந்திருக்கின்றார் என நம்பப்படுகிறது. இந்நிலையில் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அவரை மீண்டும் மலேசியா கொண்டு வந்து விசாரிக்க மலேசியக் காவல் துறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

“ஜமால் முகமட் யூனுசை எப்படிக் கொண்டு வந்தீர்கள்?”

அண்மையில் இந்தோனிசிய காவல் துறையினர் மலேசியாவிலிருந்து தப்பிச் சென்ற சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யூனுசை கைது செய்து மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிய சம்பவத்தையும் இராமசாமி உதாரணமாகக் காட்டியுள்ளார்.

“நாட்டின் சட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். பிரதமர் தனது கருத்துகளைக் கூறலாம். ஆனால், சாகிர் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்யட்டும்” எனவும் இராமசாமி வலியுறுத்தினார்.

இராமசாமி மலேசியா கினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

“சாகிர் நாயக்கை நாம் மீண்டும் சிறைக்கு அனுப்பப் போவதில்லை. மாறாக, நீதிமன்ற வழக்கைச் சந்திக்கத்தான் இந்தியாவுக்கு அனுப்பவிருக்கிறோம். பிரதமருக்கு யாரும் நெருக்குதல் தரவில்லை. ஆனால் சாகிர் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையானக் குற்றச்சாட்டுகளை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். 2016-இல் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலிலும் சாகிர் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இந்திய நீதிமன்றங்கள் வலிமை வாய்ந்தவை. சாகிருக்கு நியாயமான நீதியை அவர்கள் வழங்குவார்கள்” என்றும் இராமசாமி கூறியிருக்கிறார்.

Categories
சட்டமன்றம் பொது செய்திகள்

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களாலே தொழில் சங்கங்கள் அமைப்பதற்கான பின்னடைவு….. சிவநேசன்

 அமலில் உள்ள சட்டங்கள் தொழிலாளர் நலனுக்கு எதிராகவே இருப்பதால் தொழிலாளர் சங்கங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது என பேரா மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

இன்று நாட்டிலுள்ள பல தேசிய தொழில் சங்கங்கள் நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், தேசிய தொழில் சங்க அமைப்பு, தேசிய டெலிகோம் பணியாளர் சங்கம், தேசிய குமாஸ்தா சங்கம், தேசிய ஆசிரியர் சங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின்னர் ‘அலையன்ஸ்’ ஆட்சி, பின்னர் தேசிய முன்னணி ஆட்சியின்போது தேசிய தொழில் சங்கங்கள் அமைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

தொழில் சங்கங்கள் அமைப்பதற்கு பதிலாக நிறுவனத்திற்குள்ளாகவே தொழில் சங்கங்கள் அமைக்கப்பட்டன. நிறுவன நிர்வாகத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொழிலாளர்களைக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டன.

தேசிய தொழில் சங்கங்கள் அமைத்தால் அது தொழிலாளர் பலத்தை வலுவாக்கும் என்ற நிலையில் தேசியமுன்னணி அரசாங்கம் அதை அமலாக்கம் செய்ய விடவில்லை.

50 ஆண்டுகளுக்கு பின்னர் 2014ஆம் ஆண்டு மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம், பகுதி வாரியாக (Regional) தொழில் சங்கங்கள் அமைக்க அனுமதித்தார்.

ஆனால் நாட்டிலுள்ள நிறுவனங்களில் தொழில் சங்கங்கள் அமைக்க அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் 51 விழுக்காட்டினரின் ஆதரவை பெற்றால் மட்டுமே தொழில் சங்க அமைக்க முடியும் என சட்டம் சொல்கிறது.

இன்றைய சூழலில் பல தொழில் நிறுவனங்களில் அந்நிய தொழிலாளர்களே அதிகமாக பணியாற்றுகின்றனர். உதாரணத்திற்கு 200 உள்நாட்டவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 300 வெளிநாட்டவர்கள் வேலை செய்வதால் தொழில் சங்கம் அமைப்பதற்கான ஆதரவை பெற முடியாத சூழல் உள்ளது.

பெரும்பாலும் அந்நியத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிய வரும்போது தொழில் சங்கங்களில் உறுப்பினராக சேரக்கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலையில் சேர்கின்றனர். ஆனால் தொழிலாளர் சட்டத்தில் அந்நிய நாட்டவர்கள் அங்கத்தினராக சேர முடியாது என கூறப்படவில்லை.

நாட்டிலுள்ள 14 மில்லியம் தொழிலாளர்களில் 1.4 மில்லியன் தொழிலாளர்களே தொழில் சங்கங்களில் உறுப்பினராக உள்ளது. எஞ்சிய 85 விழுக்காட்டினர் தொழில் சங்கங்களில் உறுப்பினராக இணையாமல் உள்ளனர்.

ஆகவே,  தொழில் சங்கங்கள் அமைக்கப்படாமல் தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்படும் வகையிலே கடந்த கால ஆட்சி அமைந்திருந்தது என சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.

நாட்டிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தொழில் சங்கங்கள் அமைக்க நடப்பு அரசாங்கம் முனைய வேண்டும் என பிஎஸ்எம் கட்சி முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது தொழிலாளர் வழக்கறிஞருமான் சிவநேசன் இவ்வாறு தெர்வித்தார்.

Categories
Penang சட்டமன்றம்

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

“சாகிரை நாடு கடத்துவதில் தாமதம் ஏன்? இரகசிய உடன்பாடா?” – இராமசாமி கேள்வி

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் மத்திய அரசாங்கம் ஏன் இன்னும் தாமதமான – மாறுபாடான போக்கைக் கொண்டிருக்கிறது, இதற்குப் பின்னணியில் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்கிறதா? என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி (படம்)கேள்வி எழுப்பியுள்ளார்.

“சாகிர் நாயக் நாட்டிற்குள் ஏதாவது குற்றம் இழைக்க வேண்டும். அதற்குப் பின்னரே நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் காத்துக் கொண்டிருக்கிறதா? சீனாவின் உய்குர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை எப்படி சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டவுடன் உடனடியாக அனுப்பினீர்கள்? சீனாவின் ஒரு தொலைபேசி மூலமான கோரிக்கை கிடைத்ததுமே அனுப்பினீர்களே? இலங்கைத் தீவிரவாதிகள் என தமிழ் அகதிகள் சிலரை உடனடியாக விசாரணை ஏதுமின்றி எப்படி இலங்கைக்கு அனுப்பினீர்கள்? “ என அடுக்கடுக்கான கேள்விகளை இராமசாமி எழுப்பியிருக்கிறார்.

 

 

“இதுபோன்ற நாடு கடத்தும் விண்ணப்பம் கிடைத்தவுடன் அந்த விண்ணப்பத்தின் உள்ளடக்கத்தைத்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சாகிர் நாயக் நமது நாட்டில் குற்றம் செய்தாரா இல்லையா எனப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது” என்றும் சுட்டிக் காட்டிய இராமசாமி, இதுபோன்ற விவகாரங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நடைமுறை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

சாகிர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள இந்திய அரசாங்கம், பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கிறது என்பதால், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் சாகிர் விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும் என்றும் இராமசாமி வலியுறுத்தினார்.

மலேசியாகினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இராமசாமி இந்த விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

“ஒரு நாட்டில் குற்றமாகப் பார்க்கப்படுவது மற்றொரு நாட்டிலும் அதே போன்று பார்க்கப்பட வேண்டும். சாகிர் விவகாரத்தில் மலேசியாவின் முடிவை அகில உலகமுமே நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவும் மலேசியாவும் இரகசிய உடன்பாடு எதனையும் கொண்டிருக்கிறதா?” என்றும் இராமசாமி மேலும் கேள்வி எழுப்பினார்.