Categories
Featured அரசியல் நாடாளுமன்றம்

ஒரு நாள் நாடாடுமன்றத்தை Pakataan Harappaan நிராகரிக்குமா?

ஒரு நாள் நாடாடுமன்றத்தை Pakataan Harappaan நிராகரிக்குமா? மலேசியாவில் 14 வது பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்ற பாக்காதான் அரப்பான் கூட்டணி மகாதீரை பிரதமராகக்கொண்டு ஆட்சி அமைத்தது. மக்கள், வாக்காளர்கள் என பாக்காத்தான் அரப்பான் வழி போட்டியிட்டு வெற்றிபெற்ற மகாதீர் பாக்காத்தான் பெர்சத்து கூட்டணி பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யததாலும் PKR ஆரில் இருந்து அனுபவித்த Azmin அக்ஷ்மின், Zuraida ஜுரைடா அணியினர் கட்சி தாவல் காரணமாகவும் பாக்காதான் அரசு 22 மாதத்தில் மேகமே வீழ்ந்தது போல் மலேசியாவில் அரசியல் பேரலை மக்களை கருங்கடலில் தள்ளியது.

இதில் நாட்டின் மன்னர் தலையிட்டு Tan Seri Mohiddin முகிடினுக்கு அதிக நாடாளுமன்ற ஆதரவு இருப்பதாக அறிவித்து ஒரு சிறிய கட்சியின் தலைவர் ஆதரவின்றி முகிடின் நடப்பு பிரதமரானர். பிரதமராகி ஒரே மாதத்திக் கோரோனோ உலகை உழுக்கியது போல மலேசியாவையும் கதவடைக்க செய்தது வேறு பக்கம் இருக்க… வரும் 18/5 ல் நாடாளுமன்றம் ஒரு நாளுக்கு நடக்க இதற்கு இன்னும் யார் எதிர்கட்சி தலைவர் என்று தெரியாத குழப்பம் உண்டு.

முன்பு பாக்காத்தான் அரப்பான் ஆட்சியில் பாரிசான் நேசனல் அமிடி நீதி மன்றத்தில் பல கோடிகள் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலும் எதிர்கட்சி தலைவராக இருந்தார். இது வரை இடைக்கால ஆளுமை கட்சியான பெரியிக்காத்தான் கட்சிக்கு பாரிசான் நேசனல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியை காட்டாமல் அமைச்சர் பதவிகளை மட்டும் அனுபவித்து ஏன்? ஏகோபித்தும் வருகிறது.

மன்னர் புதிய பிரதமை நியமித்தது போல புதிய எதிர்கட்சி தலைவரையும் நியமத்தால் சிக்கல் தீர்ந்தது. மாறாக வரும் 18/5 ல் எதிர்கட்சி இலாமலே நாடாளுமன்றம் கூடினால் நாடாளுமன்ற முடிவுகள் செல்லுபடியாகுமா ? சட்டத்தின் உச்சியில் கட்டப்பட்ட கருப்பு துணி மெல்ல கிழியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் டி ஏ பி என்றா முன்னாள் ஆண்ட கட்சி உறுப்புக்கட்சி 10 நாள் நாடாளுமன்றம் மன்றம் கூட வேண்டும் என்கிறது. கோரோனோ காரணமாக புதிய பிரதமர ஏறக்குறைய 300 பில்லியனை அதிரடி நிவாரண நிதியாக அறிவித்து மக்கள் மேன்மைக்கும் மனித வளத்துக்கும் கொடுத்தது போதுமே ..10 நாள் கூடுதல் நாடாளுமன்றத்தில் டி ஏ பி ஏதும் நிதியுதவி கொடுக்க கேற்கிறதோ என மக்கள் ஆவலாய் உள்ளோம்.

Categories
Featured Selangor அரசியல் நாடாளுமன்றம் மாநிலம்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர்…. நஜிப் துன் ரசாக்


குடியுரிமை இல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ குற்றஞ்சாட்டினார்.இந்நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.ஆனால், தற்போது குடியுரிமை இல்லாழ இந்தியர்கள் 3.853 மட்டுமே என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அஸிஸ் ஜமான், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.இது குறித்து கருத்துரைத்துள்ள டத்தோஸ்ரீ நஜிப், இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ‘பொய்யையே’ கூறி வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.குடியுரிமை அல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சியினர் குறை கூறிய போதிலும், அதை மறுத்த தேசிய முன்னணி அரசாங்கம் குடியுரிமை அல்லாத இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தது என டத்தோஸ்ரீ நஜிப் சொன்னார்
Categories
Featured நாடாளுமன்றம்

BR1M கட்டம் கட்டமாக குறைக்கப்படும்; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்- மகாதீர்

BR1M கட்டம் கட்டமாக குறைக்கப்படும்; வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்- மகாதீர்

கோலாலம்பூர்,ஆகஸ்ட்.25- BR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையை அரசாங்கம் போக போக குறைக்கும் என பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

BR1M முழுமையாக அகற்றப்படுவதற்கு முன்னதாக அந்த உதவித் தொகை வழங்கப்படுவது கட்டம் கட்டமாக குறைக்கப்படும் என ‘தெ மலேசியன் இன்சைட்’ செய்திக்கு வழங்கிய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் மேலும் பலவீனம் ஆவார்களே தவிர அவர்கள் சுயமாக செயல்பட முயற்சிக்க மாட்டார்கள். அதனால், தமது தலைமையிலான அரசாங்கம் பிறர் தயவின்றி சுயக்காலில் வாழும் மக்களை உருவாக்கும் என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்பார்த்து வாழும்படியான இத்தகை உதவித் தொகைத் திட்டங்களை நிறுத்திவிட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் நீண்ட கால பலனைக் கொடுக்கும் என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய BR1M இனி மலேசிய வாழ்க்கைச் செலவின உதவித் தொகையாக அழைக்கப்படும் என கூறப்பட்டது. எனினும். அது குறித்து எந்த அறிவிப்பையும் அரசாங்கம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
Featured நாடாளுமன்றம்

உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம்! –கோபிந்த் சிங்

உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம்! –கோபிந்த் சிங்

கோலாலம்பூர், ஆக.21- நாட்டின் கலைத் துறை மேம்பாடு காண வேண்டிய அவசியத்தை உணர்ந்து, தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சு உள்ளூர் கலைஞர்களின் கலைக்கு முக்கியத்துவம் வழங்கும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் அறிவித்தார்.

உள்ளூர் கலைஞர்கள் தங்களின் திறன்களை வெளிக் கொணரும் வகையிலும், அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், அவ்வமைச்சு, அவர்களுக்குத் தேவையான அணுகுமுறைகளை கண்டறியவுள்ளதாக அவர் தெரிவித்துக் கொண்டார்.

“உள்ளூர் கலைஞர்களின் திறன்களை வெளிப்படுத்த நாங்கள் முயற்சி செய்யவிருக்கின்றோம். மலேசியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அவர்களின் திறன்கள் பாராட்டப் பட வேண்டும் என்பதை வழிவகுக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்க நாங்கள் முயற்சி செய்யவிருக்கின்றோம்” என்றார் அவர்.

“நான் பல (கலைஞர்கள்) சங்கங்களை சந்தித்து விட்டேன். உள்ளூர் கலைஞர்களின் திறன்களை வெளிக் கொணர, தேவையான அரங்கங்கள் தங்களுக்கு அமைத்துத் தரப்படவில்லை என்று அந்த கலைஞர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

“மலேசிய எண்ணத்தை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு உண்டு” என்று இசை.மை என்ற நிகழ்ச்சியை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர், கோபிந்த் சிங் அவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையில், மின்னல் எப்ஃ.எம் அலைவரிசையில் தொடங்கப் பட்டுள்ள இந்த இசை.மை (ISAI.my) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக, மலேசிய கலைஞர்களின் திறன்களும், மலேசிய கலைத்துறையும் மேம்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Categories
Featured நாடாளுமன்றம்

இந்தியர்களின் மேம்பாட்டுக்கு வெள்ளி 400 கோடி ஒதுக்கீடு….

இந்தியர்களின் மேம்பாட்டுக்கு வெள்ளி 400 கோடி ஒதுக்கீடு
கோலாலம்பூர்: இந்தியர்களின் சமூக பொருளாதாரத்தைப் படிப்படியாக மேம்படுத்துவதற்காக, வரும் 10 ஆண்டு காலத்துக்கு வெள்ளி 400 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
குறைந்த வருமானம் உடைய இந்தியக் குடும்பங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அந்நிதி பயன்படுத்தப்படும் என அவர் கூறினார்.
ஐபிஎப் கட்சித் தலைவர் டத்தோ சம்பந்தன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இத்தகவலை வெளியிட்டார்!
Categories
Featured Sabah நாடாளுமன்றம் மாநிலம்

சபா, மூசா அமான் செப்டம்பர் 11-க்குள் பதவி உறுதி மொழி எடுக்க வேண்டும்

சபா, மூசா அமான் செப்டம்பர் 11-க்குள் பதவி உறுதி மொழி எடுக்க வேண்டும்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரவோடு இரவாக சபா முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின், நாட்டைவிட்டு வெளியேறிய டான்ஸ்ரீ மூசா அமான், வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். இல்லையேல் அவர் தனது சட்டமன்றத் தொகுதியை காலி செய்தாக வேண்டும்.
மாநில முதலாவது சட்டமன்றக் கூட்டம் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மாநில அரசியலமைப்புச் சட்டப்படி பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநில சபாநாயகரர் டத்தோ சைட் அபாஸ் சைட் அலி   கூறியிருக்கிறார்.
தேர்தலுக்கு பிறகு மிகக் குறைந்த பெரும்பான்மையோடு மூசா அமான் மே 10-ஆம் தேதி முதல் அமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும் மாநில பாரிசான் நேஷனல் கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து, அவர் முதல் அமைச்சர் தகுதியை இழந்தார்.
அவருக்குப் பதிலாகப் பெரும்பான்மையை நிரூபித்த சபா வரிசான் கட்சித் தலைவர் சபி அப்டால் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இதனையடுத்து திடீரென தலைமறைவான மூசா அமான், மே 17-ஆம் தேதி சபாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

Categories
Featured அரசியல் நாடாளுமன்றம்

மக்கள் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தரவேண்டும்!

மக்கள் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தரவேண்டும்!.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர்

.

       தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மக்கள் பக்காத்தான் ஹராப்பான் அரசுக்குப் போதிய அவகாசம் தர வேண்டும்.

            துவக்கத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட, பாரிசான் நேஷனல் அரசாங்கம் படு மோசமான சூழ்நிலையை, பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்!

Categories
Featured Selangor நாடாளுமன்றம் மாநிலம்

3407 இந்தியர்களுக்குக் குடியுரிமை!

3407 இந்தியர்களுக்குக் குடியுரிமை

!

நாட்டில் குடியுரிமை கிடைக்காமல் சிவப்பு நிற அடையாள அட்டை வைத்துக்கொண்டு தத்தளித்து வந்த 3407 இந்தியர்களுக்கு, நீல நிற அடையாள அட்டை வழங்கப்படும் என்கிற இனிப்பான செய்தியை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் 14-வது பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ரக்யாட் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார்.
60 வயதுக்கும் மேற்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்ற இந்தியர்கள் நீல நிற அடையாள அட்டை பெறுவதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து வேதனைப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்புச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இத்தகவலைத் தெரிவித்தார்!
– பெர்னாமா

Categories
Featured Johor Bahru நாடாளுமன்றம் மாநிலம்

மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு தொடங்க வேண்டும் …..ராம் கர்பால் சிங்

மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு தொடங்க வேண்டும்…..ராம் கர்பால் சிங்

ஜோர்ஜ் டவுன், மே.28- மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் கொலை வழக்கு குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று புதிய அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் காவல் துறைக்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

கொலைச் செய்யப்பட்ட அல்தான் துயா வழக்கில் பல சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால், அவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் கூடிய விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று புக்கிட் கெலுகூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் அறிவுறுத்தினார்.

“அந்த வழக்கை மீண்டும் தொடர்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அது குறித்து புதிய புகார்கள் ஏதும் கொடுக்கப் படவில்லை என்றும் ஃபுஸி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அது தொடர்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், இவ்வழக்கு மீண்டும் தொடங்கப் பட வேண்டும்” என்று ராம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு, அல்தான் துயா துப்பாக்கியால் சுடப் பட்டு, அதன் பின்னர் அவரின் உடல், ஷா ஆலாமிலுள்ள காட்டுப் பகுதியில் வெடிகுண்டு கொண்டு வெடிக்கப் பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

அந்தக் கொலை வழக்கில் குற்றவாளி என்று அடையாளம் காணப்பட்ட இரு போலீஸ்காரர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்விரு போலீசாருக்கும் உதவினார் என்று சந்தேகிக்கப் பட்ட அப்துல் ரசாக் பகிண்டாவை நீதிமன்றம் விடுவித்தது.

இவர், முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் மிக நெருக்கமான ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்ததைத் தொடர்ந்து, அல்தான் துயா கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று அந்த மாடல் அழகியின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில், அந்த வழக்கு மீண்டும் தொடங்கப் படுவதை ஃபுஸி ஹரூண் உறுதிப் படுத்த வேண்டும் என்று ராம் கர்ப்பால் அறிவுறுத்தினார்.

Categories
Featured அரசியல் நாடாளுமன்றம்

கேமரன் மலையில்  வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன் வேற்றி….

 

 

கேமரன் மலையில்  வேட்பாளர் டத்தோ சிவராஜ் சந்திரன் வேற்றி