இந்திய முஸ்லிம்கள் அனைத்து மக்களிடமும் சகோரத்துவத்துடன் பழகி வருகிறார்கள் என்றார் பெலித்தா நசீர்.
Pelita Nazir said that Indian Muslims are fraternal to all people.
Date :07 Feb 2025 News By:RM Chandran
இந்திய முஸ்லிம்கள் அனைத்து மக்களிடமும் சகோரத்துவத்துடன் பழகி வருகிறார்கள் என்றார் பெலித்தா நசீர்.
பினாங்கு மாநிலத்தில் சூலியா ஸ்திரீட் என்றால் இந்திய முஸ்லிம் 1928 ஆம் ஆண்டுகள் நிறைந்து பகுதியாக இருந்தது.அப்போது எந்த வசதியும் இல்லாமலிருந்த காலத்தில் ஒரு கடிதம் அனுப்பினால்
15 நாடகள் கழித்துதான் போய் சேரும் அப்படி இருந்து வந்த முஸ்லிம்கள் இங்கு நாசிக்கண்டார் தொழில் சிறந்து விளங்கி வருவாதாகக் எம்.தமிமுன் அன்சாரி கூறினார்.
Persatuan Muslim Tanjong Pulau Pinang கொம்டார் அங்கத்தில் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் பெலித்தா சமூக நல புரவலருமான நசீர்,
இந்து முஸ்லிம்கள் அனைத்து மக்களோடும் சகோதரத்துவத்துடன் பழகி நட்புடன் உறவாடி வருகின்றனர்.
இந்து முஸ்லிம்களின் ஒற்றுமை பாராட்டும் வகையில் உள்ளன என்பதற்கு இங்கு வருகை புரிந்தவர்கள் முன்னுதாரணம் இருக்கிறார்கள் என்றார்.
நிகழ்ச்சிக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய கிளந்தான் மாநில இந்திய முஸ்லிம் வணிகர் ஹாஜி முகமட் சுல்தான், பினாங்கு மஇகா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் மற்றும் ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்ளுக்கும் முகமட் நசீர் மொஹிடின் நன்றி கூறினார்.