PAS எதிர்கட்சித் தலைவர் மன்னிப்பு கேட்டார்.
Penang PAS opposition leader Mohd Fawzi has apologised to Yusof Rayar over allegations of racism.

Date : 25 April 2025 News By:Punithai Perumal
இனவெறி குற்றச்சாட்டுத் தொடர்பாக பினாங்கு பாஸ் எதிர்க்கட்சித் தலைவர் முகமட் பவ்சி யூசோப் ராயரிடம் மன்னிப்புக் கோரினார்.
, கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் மீது தெரிவித்த கருத்துக்களுக்காக முறையான மன்னிப்புக் கேட்டுள்ளார்.
PAS கட்சியைச் சேர்ந்த Mohammed Fauzi தனது மன்னிப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் அமர்வில், நீதிபதி ஹேல்பி கானி முன் வாசித்தார். ராயர் இனவெறியர், திமிர்பிடித்தவர், பொறுப்பற்றவர் என்று கூறியது தவறு என்பதை ஒப்புக் கொண்டார். ஜுன் 2, 2023 ஆம் நாள் சோலோக் சுங்கை பினாங்கில் ஏற்பட்ட தீ விபத்துக் குறித்து தம்மைச் சந்தித்த பல நபர்கள் சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் தாம் அறிக்கை வெளியிடப்பட்டதாக முகமட் பவ்சி ஒப்புக் கொண்டார்
.
அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த பலரிடமிருந்து வாய்மொழி தகவல்களை கேட்டதினால், நான் இந்த தவறு செய்து விட்டேன். இந்தச் சம்பவம் தொடர்பான வாய்மொழி தகவல்கள் செல்லுபடியாகும் என்று நான் குடியிருப்பாளர்களிடமும் பொது மக்களிடமும் சரிபார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பினாங்கு பாஸ் தலைவருமான முகமட் பவ்சி, இந்த விவகாரத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்றும், இதனைத் தவிர்ப்பதற்கும், நாட்டின் மேம்பாடு மற்றும் பினாங்கு மாநில மக்களின் நலன் போன்ற, மிக முக்கியக்கியப் பணிகளில் கவனம் செலுத்துவதற்கும், மாண்புமிகு ஆர்.எஸ்.என் ராயரிடம், இந்தப் பகிரங்க மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன் என்றார்.
Thanks FMT : www.myvelicham.com