பிகேஆர் தேசிய துணைத் தலைவர் போட்டிக்கு ஆர். இரமணன் போட்டியிடுவதாக அறிவிப்பு

PKR to contest for national vice-president R. Ramanan announces candidature

பிகேஆர் தேசிய துணைத் தலைவர் போட்டிக்கு ஆர். இரமணன் போட்டியிடுவதாக அறிவிப்பு

Date : 24 March 2025 News by: Punithai Chandran 

பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் இந்த முறை தாம் போட்டியிடப் போவதாக சுங்கை பூலோவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். ரமணன் ஓர் அறிக்கையில் அறிவித்திருக்கிறார்.  

நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் தாம் கலந்துக் கொண்டதுடன், இதுகுறித்து பிகேஆர் தலைவர் பிரதமர் அன்வார் இப்ராஹிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் ஆர். இரமணன் கூறினார். கட்சியின் தலைமைத்துவம் முதல் அனைத்து மட்டங்களில் கட்சியை வலுப்படுத்துவதே தமது குறிக்கோள் என்று அவர் தமது முகநூல் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார். 

இந்த நமது போராட்ட உணர்வு என்பது, மலேசிய மதானி ஆட்சியின் திட்டங்களுக்கு ஏற்ப அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்கு தொடர்ந்து வித்திட்டு கட்சி வலுப்படுத்துவதே ஆகும் என்றார்

கடந்த 2022ஆம் ஆண்டில் கட்சியில் நான்கு உதவித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் வரும் கட்சித் தேர்தலில் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்று உறுதிப்படுத்துள்ள வேளையில், இம்முறை மேலும் இருவர் இப்போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகின்றனர் 

மத்திய மற்றும் மாநில நிலைகளில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஏற்ரல் 11 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும். தலைமைத்துவப் பதவிகளுக்கான தேர்தல் மே 24ஆம் தேதி அன்று நடைபெறும்.

www.myvelicham.com /face book /you tube/tik tok