தடுமாறும் நமது நாட்டு அரசியல்..பொண் ரங்கன்

0
191

தடுமாறும் நமது நாட்டு அரசியல்.

இரண்டாம் தவணை பிரதமராகும் முன் முதல் தவணை பிரதமாராக இருந்த மகாதீர் அம்னோவின் அடுத்த தலைவரான படாவிக்கி வழி விட்டு விலகினார்.

பிறகு

1.2015-ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய பிரதமர் நஜிப்பை துன் மகாதீர் கடுமையாக எதிர்த்தார். காரணம் மகாதீரின் தனியார் பல பதவிகளை நஜீப் புடுங்கினார்.

2.2016-ஆம் ஆண்டு தொடங்கி நஜிப்பை பதவி விட்டு விலகச் சொல்லி மகாதீர் உரக்க குரல் கொடுத்தார்.மலேசியா முழுக்க அரசியல் ஆட்டம் தொடங்கியது அல்லது கொடுத்தார்.

  1. துன் மகாதீரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், 2016-ஆம் ஆண்டு நஜிப் ஒருவேளை பதவி விட்டு விலகி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

o அப்போது துணை பிரதமராக இருந்த முகைதீன் பிரதமராக வந்திருப்பார்.

o MCA, MIC, சரவாக் கட்சிகள் எல்லாம் ஆளும் கட்சியாக இருந்திருக்கும்.

o அன்வார் எதிர்கட்சியாக இருந்திருப்பார்.

o துன் மகாதீர் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்திருப்பார்.

  1. இப்போது என்ன நடந்திருக்கு. பல கலர்களை கொண்ட மகாதீரர் தன் மஞ்சல் நிற மந்திரக்கோளை கையில் எடுத்தார்.

மகாதீர் தன் அரசியல் பலி வாங்கல் காயை நகர்த்த 2018 ம் ஆண்டு 14 வது பொ. தேர்தலுக்கு அன்வார் மகாதீர் அல்லது பாக்காத்தான் ராக்யாட் அரப்பானாக புதுக்காதல் மலர்ந்தது.

கட்சியின் அஃதர்ம காதலுக்கு “ப்ரசிடன்சியில்” சான்றிதல் எழுதப்பட்டது. இரண்டு சட்டமற்ற் அனுகுண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாம்.

பி கே ஆர், டி ஏ பி அமனா, பெர்சத்து, சில சபாக்கள் , சில சரவாக்கள் கட்சிகள் பாக்தான் ராயாட்டுடன் இணைந்து பாக்காத்தான் அரப்பான் தமிழில் “நம்பிக்கை கூட்டணி” பாரிசானை வீழ்த்த பரம எதிரிகளான அன்வார் சிறையிலும் மகாதீர் புத்தரா மாளிகையிலும் “பீக்ஷ்புல்”சாடை காட்டி அரசியல் கல்யாணமும் நடந்தது.

பழைய மணமகன் கட்டை விரலைக் காட்ட துணை மணமகள் சுண்டு விரலை நீட்டி பெர்சத்து ஆக்ஷ்பத்திரியில் பாக்காத்தான் அரப்பான் என்ற குழந்தையும் பிறந்து.

அவசரக் குழந்தை என்பதால் ஒரு வயதிலே 14 வது பொதுத்தேர்தலில் நாட்டின் ஆட்சியை நம்பிக்கை நாமம் பிடித்தது.

மகாதீர் என்ற பழைய தகப்பனார் மீண்டும் பிரதமராக்கப்பட்டார்.

o துன் மகாதீர் அவர் வேலையை பார்த்துக் கொண்டடு இருந்திருக்கலாம்.

ஒரே கட்சியிலிருந்த அமினா என்ற ஆடும் ரோமினா என்ற பூனையுடன் சேர..பிரதானவர் அன்வாரை வீழ்த்த அமினாவை இழுத்துக் கொண்டார்.

பிகேயாரில் கோக்ஷ்தான் கேர் விழ 10 நாடாளுமன்ற உறவுகள் பின்னால் வழி அமைச்சருக்கு கை தூக்க முகைடின் கொடி பறக்க நாட்டின் 8 வது பிரதமரானார்.

ஆக இந்த ஒட்டு மொத்த ஒப்பெக் Plot-ம் அன்வார் என்கிற ஒருத்தரை அடக்க நடந்த Plot-ஆ?

இன்று பிகேயார் , டி ஏ பி தவிர அதே பழைய மாற்று கூட்டணிதான் பாசுடன் அம்னோவுடன் இணைந்து பிரியிக்காதான் நேசனல கட்சியாக இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அரசியல் மோகம் ஓட்டுப்போட்ட மக்களை திணரடித்து வாயில் கட்டையன் விரல் வைத்து மாற்றம் உபா என்று ஆட்டி விட்டது.

ஆனால் நஜிப் மட்டும் இல்லை. கெரக்கானுக்கு பதிலாக, புதிதாக பாஸ் ஆளும் கூட்டணியில் இணைந்த துணிச்சலில் இங்கும் ஒரு மாற்று நிக்கா நடந்துள்ளதுதான் நாட்டின் அவசர வாந்தி பேதி.

டவுட் இரண்டு.

இன்றைய திகதியில் நாட்டை ஆட்சி செய்துக் கொண்டிருப்பது துன் மகாதீர் ஆரம்பித்த பெர்சத்து கட்சி. UMNO, PAS, MCA, MIC, GPS(Sarawak) இந்த கட்சிகள் எல்லாம் பெர்சத்து கீழ் இயங்கும் உறுப்பு கட்சிகள். பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமை பெர்சத்து கட்சி. இன்றைய காபினெட்டில் மக்களாட்சியில் அதிகமான நாடாளுமன்ற தகுதியில்லாமல் அமைச்சர்கள் இடம் பிடித்திருப்பது பெர்சத்து கட்சியை சார்ந்தவர்கள்.

  1. பெர்சத்து கட்சி துன் மகாதீருடையது. பெர்சத்து கட்சியின் பேராளார் மாநாடும், கட்சியின் தேர்தலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் வேட்புமனு தாக்கலின்போது, துன் மகாதீர் போட்டியில்லாமல் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவராக(Pengerusi) தேந்தெடுக்கப்பட்டுள்ளார். துன் மகாதீரின் பொறுப்பில் செயல்படும் பெர்சத்து கட்சி நாட்டை ஆட்சி செய்கிறது. அப்படி என்றால் நாடு துன் மகாதீர் கையில்தான் இருக்கா? இல்லையா ?
  2. தலைவர்(Presiden) பதவிக்கு முகைதீனை எதிர்த்து முக்ரிஸ் போட்டியிடுகிறார். வரும் ஜூன் மாதத்தில் நடக்கும் கட்சி தேர்தலில், ஒருவேளை முகைதீனை முக்ரிஸ் தோற்கடித்து, பெர்சத்து கட்சியின் தலைவரக வந்துவிட்டால், முகைதீன் பிரதமர் பதவியை முக்ரிஸிடம் ஒப்படைப்பாரா? அல்லது அக்ஷ்மின் அம்னோ வழி புகுந்து பிரதமராகி பாக்காத்தான் அரப்பான் ஹரப்பில்லாமல் ஓடமாகுமா?

நிலைமை இப்படி நிற்க …பழைய வீட்டுப்பாடத்தை புறட்டினேன்.

பெர்சத்து யாருடைய அதிகாரத்தில் இருக்கிறது?

பெர்சத்து கட்சி அம்னோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது.

அம்னோவிலும் வெளியிலும் துன் மகாதீருக்கு சப்போர்ட்டாக இருந்தவர்கள்தான் பெர்சத்து கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.

முகைதீனுக்காக பெர்சத்து கட்சியில் யாரும் வந்து இணையவில்லை. துன் மகாதீருக்காகவே பெர்சத்து கட்சியில் வந்து இணைந்தார்கள்.

அங்கே இருப்பவர்கள் துன் மகாதீர்ன் விசுவாசிகள். துன் மகாதீரா? முகைதீனா? என்று வரும்போது துன் மகாதீர் பக்கம் சாய்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.

தற்போது முகைதீன் பிரதமராக இருப்பதால், கட்சியில் அவர் தன் கரங்களை வலுப்படுத்த முனைவார். ஆனால் முகைதீன் நீண்ட நாட்களுக்கு பிரதமராக நீடிக்க மாட்டார். அதற்கு அவர் உடல் நலமும் இடம் கொடுக்காமல் இப்போ கோரோனோவும் நாட்டில் பண வீங்கியை உப்புசமாக்கி விடும் என்று உலக நாணய ஐ எம் எப் சந்தேககத்தை வாந்தி எடுத்துள்ளது.

நாட்டின் ஆட்சி அதிகாரம் பெர்சத்து கட்சியிடம் இருப்பதால், பெர்சத்து தலைமையில் அமைத்த கூட்டணியில் UMNO, PAS, GPS, MCA, MIC ஆகிய கட்சிகள் வெறும் உறுப்பு கட்சிகளாக மட்டுமே இருக்கிறது. பிரதமர் பெர்சத்து கட்சியை சேர்தவராக இருப்பதால், பெர்சத்து கட்சியின் தலைவராக வெற்றி பெறுகிறவர் அடுத்த பிரதமரா? இது எண் இரண்டாவது ரவுண்ட் ரக்ஷ்.

சுத்தி சுத்தி நாடு துன் மகாதீரிடமே வந்து நிற்கிறது. முகைதீன் பிரதமராக நீடிப்பதும், முக்ரிஸ் அடுத்த பிரதமராக வராமல் போவதும், அன்வார் பிரதமர் ஆவதும் துன் மகாதீரை பொறுத்ததே என்றால் என் பார்வைக்கு மகாதீரும் முகிரிசும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றே என் மூளை பதிவு செய்கிறது. இதனால் அக்ஷ்மின் அணியும் இடையே அழியும். இடைத்தேர்தலுக்கு மாமன்னர் ஜே போடுவார் என்றே என் சிறிய சிக்கல் தலை தூக்குகிறது. நாட்டு மக்கள் நலம் பேண எதுவும் மாறலாம். மாற்றம் பொய்யானது என்று நம்புங்கள்.

Your Comments