பலாக்கோங் இடைத்தேர்தல்: சொந்தச் சின்னத்தில் மசீச போட்டி!

0
203

பலாக்கோங் இடைத்தேர்தல்: சொந்தச் சின்னத்தில் மசீச போட்டி!

கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- அடுத்து வரும் பலாக்கோங் இடைத்தேர்தலில் மசீச தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும் என்று அதன் தேசியத் தலைவர் லியோவ் தியோங் லாய் அறிவித்தார்.

இந்த முடிவு மசீச தன்னிச்சையாக எடுத்த முடிவு. தங்களின் இந்த முடிவு விரைவில் தேசிய முன்னணிக்கு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

இதன்வழி மசீச தேசிய முன்னணியை விட்டு வெளியேற திட்டமிட்டிருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்ட போது, அதற்கு சீனப் பழமொழி ஒன்றை அவர் பதிலாக அளித்தார். அதாவது, தேசிய முன்னணி இப்போது பெயரில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் பார்த்தால் அது செத்து விட்டது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு கட்சியும் தன்னை மறு அமைப்புச் செய்வதில் கவனம் செலுத்தும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நம்முடைய எதிர்காலத்தில் நமக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. பொதுவாகப் பார்த்தால் நாம் புதிய சகாப்தத்தில் காலடி வைக்கிறோம் என்று மசீச தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் லியோவ் தியோங் லாய் சொன்னார்.

Your Comments