கோலக்கெட்டில் இந்தியர்கள் சங்கம் ஏற்பாட்டில் மாவட்ட அளவில் பொங்கல் கொண்டாட்டம்

Pongal Celebration at District Level by Gabongan Kedah at kuala ketil

கோலக்கெட்டில் இந்தியர்கள் சங்கம் ஏற்பாட்டில் மாவட்ட அளவில்   பொங்கல் கொண்டாட்டம்
கோலக்கெட்டில் இந்தியர்கள் சங்கம் ஏற்பாட்டில் மாவட்ட அளவில்   பொங்கல் கொண்டாட்டம்

Date :28 Jan 2025b  News By: Rm Chandran 

கோலக்கெட்டில் இந்தியர்கள் சங்கம் ஏற்பாட்டில் மாவட்ட அளவில்   பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 கடந்த 25-1-2025 ஆம் நாள்  சனிக்கிழமை மாலை 5  மணி அளவில் No 294 (GF) Lorong 9, Bandar Baru Azham Sungai Petani'யில் நடைபெற்ற நிகழ்வுக்கு,
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மஇகாவின் தேசிய தலைமைச்செயலாளர் டத்தோஸ்ரீ எஸ்.ஆனந்தன் குத்து விளக்கேற்றி  நிகழ்வை தொடக்கி வைத்தார். நிகழ்வில் கெடா மகளிர் பிரிவு தலைவி திருமதி ஜெயா, டத்தின் சுகுமார், நிகழ்வின் திருமதி சாந்தினி கலந்து கொண்டனர்.

நமது இந்தியர்களின் பாரம்பரிய நடனம் கோலாட்டம்  போன்றவை இடம் பெற்றது.
நிகழ்வில் கலந்து  கொண்ட மக்கள் தோட்டங்களில்  நடைபெற்ற இளமைக்கால  பொங்கல் திருநாள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வேளையில் டத்தின் சுகுமாறன் பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

 சூரிய பகவானுக்கும் விவசாயிகளுக்கும் நன்றி சொல்லும் விதாமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்கள் அனைவரும் இந்த தை மாதம் தொடங்கிய பின்னரே புதுப்புது தொழில்களை தொடங்குவார்கள். தங்களுடன்  விவசாயத்திற்கு பாடுபடும் மாடுகளை அவர்கள் மறப்பதில்லை அவற்றை சிறப்பிக்கிறார்கள் என்று  டத்தின் சரவணன்,திருமதி ஜெயா,  திருமதி சாந்தினி  ஆகியோர் கூறினர்

.

நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய சுற்று வட்டார   மக்களுக்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான திருமதி சாந்தினி அனைவருக்கும் நன்றி கூறினார்.