பிரசவத்திற்கு பின் தாய் சேய் பராமரிப்பு தொழில் முறை பயிற்சி
Post Natal Occupational Training on Maternal and Child Care
Date : 22 Feb 2025 News by :Maniventhan
பிரசவத்திற்கு பின் தாயையும், அவரின் குழந்தையையும் எவ்வாறு பராமரிப்பது குறித்து இந்தியர்களுக்காக தொழில் முறையிலான பயிற்சி ஒன்றை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
மிசி எனப்படும் மலேசிய இந்திய திறன் முன்னெடுப்பு வழி பெண்களுக்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சின் நேரடிப் பார்வையில் நடைபெற்ற இதில் 25 பெண்கள் கலந்து கொண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. ஐந்து நாள்கள் கொண்ட இப்பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
.
பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் சந்திக்கும் உடல் ரீதியான மாற்றங்களை சரி செய்யவும் பிறந்த குழந்தையை சரியான முறையில் குளிப்பாட்டி சுத்தம் செய்தல் போன்ற பயிற்சிகளை இவர்கள் மேற் கொண்டனர்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்தியர்கள் வணிகத்தில் மேலும் வளர்ச்சிகான வேண்டும் என்கின்ற வகையில் இத்தகைய பல பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் நாடு தழுவிய நிலையில் இந்தியர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் அவர் உறுதியுடன் ஈடுப்பட்டு இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.
இத்தகைய பயிற்சியின் மூலம் ஒருவர் குழந்தை மற்றும் தாயாரை சரியான முறையில் குளியல், மற்றும் சுத்தம் செய்வது மூலமாக சுயமாக ஒரு நபரிடம் இருந்து சராசரியாக 1000 ரிங்கிட் முதல் 2000 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டமுடியும்
.
இப்பயிற்சி வெற்றிகரமாக நடைபெற கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தவு,உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
இதே போன்ற பயிற்சிகள் நாடு முழுவதும் நடைபெறும் என்றும் இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி அல்லது இது குறித்த மேல் விவரங்கள் அறிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் MisiKesuma அகப்பக்கத்தை வலம் வருமாறு மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.