பத்து மலைக்கு வந்தார் பிரதமர் அன்வார் இப்றாஹிம் பதிவுகள் மனதில் பதியவில்லை.
Prime Minister Anwar Ibrahim arrives at Mount 10 The records don't come to mind.
Date : 07 Feb 2025 RM Chandran
பத்துமலைக்கு வருவதாக கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களது திடீர் அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை.
பத்துமலை நுழைவாயிலில் இருந்து ஒரு ஐம்பது மீட்டர் உள்ளே வந்து பத்துமலை திருத்தலத்தில் கால் பதித்த பிரதமரை, இந்தியர்களின் பாரபம்ரிய நாதஸ்வரம் முழங்க டான்ஸ்ரீ ஆர். நடராஜா,டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ ரமணன்,கோபின் சிங் டியோ,ஆலய நிர்வாகத்தினரும் ஊடகத்தாரும் பொது மக்களும் புடை சூழ வரவேற்றனர்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் போக வேண்டும் நடக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு கட்டுப்பட்டது போல் இருந்தது பிரதமர் அவர்களின் ஒவ்வொரு அசைவும்.
இருபது நிமிடம் மட்டுமே அங்கு செலவிட அனுமதிகளை பெற்றது மாதிரி இருந்தது. அனைத்து இனங்களுக்குமான
நாட்டின் பிரதமர் இவ்வாறு நடந்து கொண்டது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாக உள்ளது என்று சிலர் முணு முணுத்ததை கேட்கவும் முடிந்தது.
தைப்பூசத் திருவிழாவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும்போது இந்த அவசர நிலையை தவிர்த்திருக்கலாம்.
இந்திய சமுதாயம் பிரதமரின் வருகையை பெரிய அளவுக்கு எதிர் பார்க்க வில்லை என்றும் கூறப்படுகிறது.
அவசரத்தில் அள்ளித்தெளித்த கோலம் போல் மக்களின் ஆர்ப்பாட்டக் குரல் ஏதுமின்றி பாதுகாப்பு காவலர்களின் வாகனங்களின் அலறல் சத்தத்திற்கு மத்தியில் கானல் நீராக பிரதமர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது மனதிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
செய்தி ஆக்கம்: ஆர்.எம்.சந்திரன்.