வெளிப்படையும் சுழியம் ஊழல் மித் ராவின் இலக்கு.

Psychometric test assesses a candidate's cognitive ability and personality. One of the most common uses of human capital.

வெளிப்படையும் சுழியம் ஊழல் மித் ராவின் இலக்கு.
வெளிப்படையும் சுழியம் ஊழல் மித் ராவின் இலக்கு.

Date - 21 Dec 22024  News By - Pon Rangan

மலேசிய தமிழ் அறவாரியம் நடத்திய 3 வது  தமிழ்க்கல்வி மாநாட்டில் பத்து நாடாளமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான பிரபாகரன் அவர்கள் மா நாட்டை திறந்து வைத்து பேசினார். 2025 ம் ஆண்டு மித்ரா   நிதி இயக்கங்களுக்கு தராமல் சமுதாயத்தின் பி 40 தேவைக்கேற்ப தனித்தனி நிதி தேவைகளுக்கு வழங்கப்படு என உறுதிப்பட கூறினார். அடுத்த ஆண்டு 2025 ல்  பிரதமரிடம் 300 மில்லியனை மித்ரா  கேட்டிருந்தது. முதலில் 100 மில்லியனை முறையாக முடியுங்கள், பிறகு பார்ப்போம் என்று பிரதமர் சொன்னார். நாட்டில் தமிழ்ப்பள்ளிகளில் மாணர்வர்கள் பற்றாக்குறைக்கு காரணம் பல பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லாத குறைதான் முக்கிய காரணம் என கண்டுள்ளோம்.

மித்ராவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல ஊழலற்ற முக்கிய  இலக்கோடு தேசிய பொருளாதார 13 வது திட்டத்தோடு இணைத்து நடத்த உள்ளோம். சமுதாய பொருளாதார தேவைக்கு ஏற்ப NEP வழி  இன்னும் 5 ஆண்டுகளில் தேவையான சட்டமும்  கொள்கையும் வகுத்து  5 குறியீடு முன்னோட்டத்திட்டங்களை தலைமைத்துவ திட்டமாக மித் ரா கொண்டிருக்கும். இதில் வணிகம், சமூகத்திட்டம், தமிழ் பாலர் பள்ளி, சமூக தலைமைத்துவ சந்திப்புகள் மற்றும் தனியார் நிறுவன  "கோப்ரட்" CSR  சமூக பொறுப்பு திட்டத்தில்  பங்கெடுத்து சமூக தேவைகளுக்கு  உதவி கோருவதாகும்.

மித்ரா சமீபத்தில் மருத்துவர் திட்டத்திற்கு மித்ரா  ஒரு வெள்ளிக்கூட செலவு செய்யாது. மாறாக அரசு கல்வி நிதி இதர தனியார் நிறுவன உதவிகளின் உபகாரா சம்பளங்கள்வழி உதவிட மித் ரா திட்டமிட்டு செயல்படுகிறது என பிரபாகரன் தமதுரையில் கூறினார். இது தொட்டு நாடாளமன்றத்தில் வட்ட மேசை கூட்டம் நடத்தி அங்கு அடையாளம் காணப்படும் தேவைகளை சேகரித்து  Plan Tindakan Economy  திட்டத்தை பொருளாதார அமைச்சர் வழி அமைச்சரவையில் பேச வேண்டிய அவசியத்தை மேற்கொள்ள உள்ளதாக சொன்னார். இந்த  தமிழ்க்கல்வி மாநாட்டுக்கு ஆசிய பசிபிக் பல்கலைகழக இலவசமாக இடம் கொடுத்துள்ளது. அப்பல்கலை கழல துணை வேந்தர் முனைவர் டாக்டர் முரளி ராமன் அவர்களுக்கு நன்றி பாராட்டி வாழ்த்தினார்.
இதர ஆய்வு கட்டுரைகளுடன் திரு. முத்து நெடுமாறன் "மாணவர் மொழித்திறன் நுட்பமும் மேம்பாடும்" எனும் தலைப்பில் இன்றைய தலைமுறை செயலாக்கம்   உள்ளீடு, செயலாக்கம், வெளியிடு என  ஆர்வம், களிப்பு, ஊக்கம், ஆதரவு ,நம்பிக்கை, வளர்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற சூழமைவு - context பற்றி தன் உரையில் சிறப்பாக தெளிவு  படுத்தினார். 

செய்தி பொன் ரங்கன்