Categories
Featured அரசியல் உதவும் கரம் உலகம் கல்வி சட்டமன்றம் சினிமா சுகாதாரம் சுற்றுலா தலையங்கம் நாடாளுமன்றம் நீதிமன்றம் பொக்கிஷம் பொது செய்திகள் மாநிலம் வர்த்தகம் வானொலி விளையாட்டு வேலை வாய்ப்பு

கெளரவமாக விலகிக் கொள்ளும் வாய்ப்பை முகைதினும் ஷாபியும் ஏற்கவில்லை

முகைதின் யாசினையும் ஷாபி அப்டாலையும் அரசாங்கத்திலிருந்து பணிநீக்கம் செய்யுமுன்னர் அவர்கள் தாங்களாகவே அமைச்சரவையிலிருந்து விலகுவதற்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களுக்கு வாய்ப்பளித்ததாக அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார்

“விலக்குவதற்கு முன் அவர்கள் கெளரவமாக அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ள நஜிப் வாய்ப்பு அளித்தார்

“ஆனால், அவர்கள் விலகிக்கொள்ள விரும்பவில்லை”, எனப் பிரதமர்துறை அமைச்சரான ரஹ்மான் டஹ்லான் கூறினார்

அவர்கள் விலக மறுத்ததால், வேறு வழியில்லாது பிரதமர் அவர்களை விலக்க வேண்டியதாயிற்று என்றாரவர்

1எம்டிபி குறித்து குறை கூறியதுதான் அவர்கள் விலக்கப்பட்டதற்குக் காரணம் என்றால் 2014-இலேயே அவ்விருவரும் பதவியிலிருந்து தூக்கப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் சொன்னார்

ஆனால், இவ்வாண்டு ஜூனில்தான் அவர்கள் அம்னோவிலிருந்து விலக்கப்பட்டார்கள்

எதிரணியுடன் அணுக்கமாக இருந்ததுதான் அதற்குக் காரணமாகும்

Categories
Featured அரசியல் உதவும் கரம் உலகம் கல்வி சட்டமன்றம் சினிமா சுகாதாரம் சுற்றுலா தலையங்கம் நாடாளுமன்றம் நீதிமன்றம் பொக்கிஷம் பொது செய்திகள் மாநிலம் வர்த்தகம் வானொலி விளையாட்டு வேலை வாய்ப்பு

மலேசியாவில் இருவரில் ஒருவர் கூடுதல் எடை கொண்டவர்கள் சுகாதார அமைச்சு அறிவிப்பு.

கோலாலம்பூர் – மலேசியாவில் இருவரில் ஒருவர் கூடுதல் எடையோடு இருப்பதாகவும்,அவர்கள் தொந்தியும் தொப்பையுமாய் உடல் பருமன் மிக்கவர்களாய் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் உடல் பருமன் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். நடப்பியல் சூழலில் மலேசியர்களிடையே ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை அதிகரித்து வரும் சூழலில் இம்மாதிரியான சுகாதாரப் பிரச்னைகளை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காண்பித்த சுப்பிரமணியம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் தான் இந்த உடல் பருமன் பிரச்னை மிக வேகமாய் உருவெடுத்து வருவதாகவும் அவர் எச்சரித்தார். இந்த உடல் பருமன் பிரச்னை கடந்த 1996இல் மக்கள் தொகையில் 4.4 விழுகாட்டினர் எண்ணிக்கையை கொண்டிருந்த வேளையில் அஃது 14 விழுகாடு எண்ணிக்கையை கடந்த 2006ஆம் ஆண்டில் உயர்ந்திருந்தது எனவும் கூறிய அவர் தொடர்ந்து உடல் பருமன் பிரச்னை கடந்த 2011ஆம் ஆண்டில் 15.1 விழுகாடாய் அதிகரித்த வேளையில் கடந்தாண்டு உடல் பருமன் பிரச்னை நாட்டில் 17.7 விழுகாடாய் வேகமாய் அதிகரித்திருப்பதாகவும் தேசிய சுகாதாரம் மற்றும் நோய்த்தன்மை மீதான ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில்,உடல் பருமன் பிரச்னை பெரியவர்கள் மத்தியில் 30.3 விழுக்காட்டையும் கடந்து போய்க் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் மலேசியர்களிடையே காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உண்பதை ஊக்குவிக்கும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடக்கும் “மஹா 2016” எனும் விவசாயக் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய சுப்பிரமணியம் இதனை நினைவுறுத்தினார். இதற்கிடையில்,கடந்தாண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 47.7 விழுக்காட்டினர் அதாவது பாதிக்கு பாதிப்பேர் மிகுதிக் கொழுப்பு சத்து மற்றும் இரத்த அழுத்த நோய்க்கு இலக்காகியிருந்ததாய் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நினைவுக்கூர்ந்தார்.

Categories
Featured அரசியல் உதவும் கரம் உலகம் கல்வி சட்டமன்றம் சினிமா சுகாதாரம் சுற்றுலா தலையங்கம் நாடாளுமன்றம் நீதிமன்றம் பொக்கிஷம் பொது செய்திகள் மாநிலம் வர்த்தகம் வானொலி விளையாட்டு வேலை வாய்ப்பு

பினாங்கு எக்ஸ்கோ: பிபிஎஸ் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன

பினாங்கில் தன்னார்வ ரோந்து படை(பிபிஎஸ்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது

மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவெடுக்கப்பட்டதாக அப்படையை மேற்பார்வை செய்யும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ தெரிவித்தார்

அப்படையின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதற்கு போலீசும் ஒரு காரணமாகும்

அப்படையைக் கலைக்கும்படி அது அறிவுறுத்தி இருந்தது

“உள்துறை அமைச்சிடம் முறையிட்டிருக்கிறோம்

அதனுடன் பேச்சு நடத்தி இவ்விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்”, என்றாரவர்

Categories
Featured அரசியல் உதவும் கரம் உலகம் கல்வி சட்டமன்றம் சினிமா சுகாதாரம் சுற்றுலா தலையங்கம் நாடாளுமன்றம் நீதிமன்றம் பொக்கிஷம் பொது செய்திகள் மாநிலம் வர்த்தகம் வானொலி விளையாட்டு வேலை வாய்ப்பு

சைபுலுக்கு எதிரான அன்வாரின் மனு நிராகரிப்பு!

மொகமட் சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் ஷரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை நிராகரிக்கப்பட்டது

சைபுல் பொய்சாட்சியை வைத்ததாகக் கூறும் அன்வாரின் மனுவை (QAZAF) விசாரணை செய்த மொகமட் யூசுப் சே தே தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அம்மனுவை மறுஆய்வு செய்ய ஷரியா நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது

Categories
Featured அரசியல் உதவும் கரம் உலகம் கல்வி சட்டமன்றம் சினிமா சுகாதாரம் சுற்றுலா தலையங்கம் நாடாளுமன்றம் நீதிமன்றம் பொக்கிஷம் பொது செய்திகள் மாநிலம் வர்த்தகம் வானொலி விளையாட்டு வேலை வாய்ப்பு

மாநில முதல்வரின் குற்ற வழக்கு 6 ஜனவரியில் தீர்மானிக்கப்படும்

சுகுணா முனியான்டி பினாங்கு டிச 6 பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் மீதான லஞ்ச ஊழல் குற்ற சாட்டு அடுத்தாண்டு ஜனவரி 6 யில்தீர்மானிக்கப்படும் என பினாங்கு உயர் நிதிமன்ற நீதிபதி டத்தோ ஹட்டாரியா செயிட் இஸ்மயில் இன்று அறிவித்துள்ளார்

இதன் தொடர்பாக இன்று நடைப்பெற்ற வழக்கிற்கு பின்னர் மாநில முதல்வரின் வழக்கறிஞரான கோபின் சிங் டி யோ சந்தித்த போது , குற்ற வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் ஏற்கனவெ சமர்ப்பித்துவிட்ட நிலையில் , அதற்கும் மேலாக சில இடையூறுகள் இருப்பதாகவும் , இன்னும் சில ஆவணங்கள் நிதிமன்றம் உத்தரவின் படி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்

கடந்த ஜூலை 29 யில் கொம்தார் கட்டடத்தில் எம் ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

விவாசாய நிலத்தை வீடமைப்பு நிலமாக மாற்ற வேண்டும் என்ற மெக்னிஃபிசியன்ட் எம்பாம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்து ஒப்புதல் அளித்தது என்பது முதலாவது குற்றசாட்டு

,சந்தை விலை மதிப்பீட்டுக்கு குறைவான விலையில் பங்களாவை வாங்கியது என்பது இரண்டாவது குற்றசாட்டாகும் என்பது குறிப்பிடதக்கது