ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் உதவி

Re Union Students Association Helps Riverside Estate Tamil School Students

ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் உதவி
ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் சங்கம் உதவி

Date : 18 Feb 2025 News By: Maniventhan 

கோலசிலாங்கூர் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் பயிற்சி புத்தகங்களை வழங்கி உதவி செய்தது.

  நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட 2025/2026 புதிய கல்வியாண்டின் போது முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி புத்தகங்களை வழங்கினர்

.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்போது 55 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். முன்பு பள்ளியின் அருகில் இருந்த ரிவர்சைட் தோட்டம், புக்கிட் பிளிம்பிங் தோட்டம், இராஜா மூசா தோட்டம் ஆகிய தோட்டங்களிலிருந்து சுமார் நானூறு மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.

இப்போது மேற்கண்ட தோட்டங்கள் யாவும் தோட்டங்கள் இணைப்பு, மேம்பாடு காரணமாக இல்லாமல் போயிருந்தாலும் அருகில் இருக்கும் சில குடியிருப்பு பகுதிகளிலிருந்து இப்பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.

பல்வேறு பிரச்சினைகளின் மத்தியிலும் இந்தக் காலக் கட்டத்தில் இப்பள்ளிக்கு 55 மாணவர்கள் கல்வி கற்க வருவது பெருமைக்குரிய ஒரு அம்சமாகும் என்றும் இருப்பினும் மாணவர்கள் கல்வியிலும், புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குவதாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி : விஜயலட்சுமி தெரிவித்தார்.

குறிப்பாக போட்டி விளையாட்டுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பாக ஓட்டப் பந்தயத்தில் இப்பள்ளி மாவட்ட, மாநில, தேசிய அளவில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளதாகவும் ஒரு ஒதுக்குப்புறமான பள்ளியில் இருக்கும் வசதிகளை கொண்டு ஓட்டப் பந்தயத்தில் தேசிய அளவில் சென்றிருப்பது பள்ளியை பொறுத்தவரை ஒரு சாதனையாக கருதுவதாக அவர் கூதினார்.

இதனிடையே பள்ளியின் முதல் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு நேரடியாக உதவிகள் புரிந்த முன்னாள் மாணவர் சங்கத்திற்கு தலைமையாசிரியர் விஜயலட்சுமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

www.myvelicham.com Face Book / Tik Tok