சமய போதகர் ஜம்ரி வினோத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Religious preacher Jamri Vinod has been arrested by the police.

28 March 2025 News By :RM Chandran
இணைய (Net work) வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்திய குற்றத்திற்காக ஜம்ரி வினோத் காளிமுத்து மீது தேசத்துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பொது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் (Face book ) பதிவிட்டதற்காக சர்சைக்குரிய சுதந்திரமான சமய போதகர் ஜம்ரி வினோத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை இடமாற்றம் செய்வது தொடர்பான பதிவு இது என்று காவல்துறை தலைவர் ரசாருதீன் ஹுசைன் (Tansri Razarudin Husain ) தெரிவித்தார்.
ஜம்ரி பாடாங் பெசார் காவல் தலைமையகத்தின் லாக்கப்பில்
( Lokap) தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மார்ச் 28, 2025 ஆம் நாள் கங்கார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
இந்தப் பதிவு தொடர்பாக டாங் வாங்கி ( Dang Wangi )காவல் துறை தலைமையகத்தில் புகார் அளிக்கப்
பட்டதாகவும், புகார்தாரர் ஜம்ரி மீது தேசத்துரோகம் மற்றும் இந்து நம்பிக்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டியதாகவும் டான்ஸ்ரீ ரசாருதீன்
கூறினார்.
“மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ( multimedia) ஆணையம் ஜம்ரியின் பேஸ்புக் கணக்கில் உள்ள தரவைப் பாதுகாத்து வைத்துள்ளது. ஒரு மொபைல் போன் (Mobile Phone) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
தேசத்துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் ( Masjid Madani) பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமாற்றம் செய்யும் திட்டம் பொதுமக்களிடையே பரவலான எதிர்ப்பைத் ஏற்படுத்தியது.
ஜேகல் டிரேடிங் சென்டர் பெர்ஹாட்
(Jekal Trading Center Sdn Bhd) கடந்த 2012 இல் நிலத்தை வாங்கியதாகவும், அங்கு ஒரு மசூதியைக் கட்ட 2021 இல் அனுமதி பெற்றதாகவும் கூறியது.
புதிய இடத்தை தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் நிர்வாகம் ஒப்புக் கொள்ளும் வரை கோயிலை இடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதை ஜேகல் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இடமாற்றத்திற்கான பணத்தையும் அது வழங்க முன்வந்தது.
கோயில் நிர்வாகம் தற்போதுள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள ஒரு புதிய
பகுதிக்கு 4,000 சதுர அடி இடத்திற்கு மாற ஒப்புக்கொண்டதாகவும் இவை தற்போதுள்ள இடத்தின் அளவிற்கு இருப்பதாகவும் குறிப்பிட்டது.
இந்த மாத தொடக்கத்தில், காவடி சடங்கைச் செய்யும் இந்துக்களை பேய் பிடித்தது அல்லது குடிபோதையில் இருப்பது போல் தோன்றும்போது "வேல் வேல்" என்று கூறியதாக ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு ஜம்ரி வினோத்
சர்ச்சையில் சிக்கினார்.
காவடி சடங்கை கேலி செய்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட மூன்று எரா எஃப்எம் ( Era Fm ) வானொலி தொகுப்பாளர்களைச் சுற்றியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து ஜம்ரி கருத்துக்கள் எழுந்தன.
ஜம்ரி வினோத் காளிமுத்து மீது 900 போலீஸ் புகார்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் காவல் துறை அமைதியாக இருப்பதாக நினைத்த ஜம்ரி, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எல்லை மீறி சில பதிவுகளை பதிவேற்றி சமய ஒற்றுமைக்கு குழப்பத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தினார்.
காத்திருந்து காவல்துறையினர் ஜம்ரி வினோத்தை கைது செய்தது பொது மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
www.myvelicham.com