ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் கற்பிக்கும் பணி வழங்குவதை வரவேற்பு

Retired teachers are welcome to re-teaching

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் கற்பிக்கும் பணி வழங்குவதை வரவேற்பு

News By :Vetrivelan 01 August 2024

 

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் கற்பிக்கும் பணி வழங்குவதை வரவேற்பதாகக் கூறினார்: ம.வெற்றிவேலன்.

கல்வி அமைச்சர் Fadhlina Sidek  ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஆசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை வரவேற்பாதாகக் கூறிய வெற்றிவேலன்,


'இந்த அறிக்கையின்படி,  (UPSI - 45 பட்டதாரி ஆசிரியர்கள்), 
(UM -15 பட்டதாரி ஆசிரியர்கள்) மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த பல ஆசிரியர்களை ஏற்றுக்கொள்வதைத் தீவிரமாகப் பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சர் Fadhlina Sidek  அவர்களைக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.


 'இந்த ஆசிரியர்கள் தற்போது கல்வியமைச்சின் நேர்காணல் மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்'

'பல SJKT, SK, SMK பள்ளிகள் தொடர்ந்து தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன' இந்த பிரச்சினைக்கு உடனடியத் தீர்வு காண்பது நமது மாணவர்களின் தொடர்ச்சியான தரமான கல்விக்கு மேன்மையளிக்கும்'

அதேவேளை முதுமையான குறைந்த ஆற்றலுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக்காட்டிலும் இளமையான  கணினி  தொழில் நுட்பக் கல்வி கற்ற ஆற்றலும் துடிப்பும் மிக்க சுறுசுறுப்பான வேலைக்குக் காத்திருக்கும் ஆசிரியர்களைப் பணிக்கு சேர்ப்பதே சிறந்த வழியாகும்' என்று 
ம.வெற்றிவேலன் ஆலோசனை வழங்கினார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஏறக்குறைய 8 000  வெள்ளி ஊதியம் வழங்குவதை விட இளமையான புதிய ஆசிரியர்களுக்கு  2 800 வெள்ளி  மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.


இதன் வழி அரசாங்கம்  பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும் மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியரின் 8 000 வெள்ளி  ஊதியத்திற்குப் பதிலாக 3 இளமையான ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி கல்வித் தரத்தையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரலாம் என்று தமது கருத்துக்களை முன் வைத்தார்


தமிழ்க்கல்வி இயக்கங்களின் கூட்டாண்மை செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர், ம.வெற்றிவேலன்.

மேல் விவரங்களை பெற 
012-2427559 கொள்ளலாம்.