அரிசியின் விலை அடுத்த மாதம் உயரும்: டத்தோ அமீர் அலி மைடின் எச்சரிக்கை
Rice prices will rise next month: Datuk Amir Ali Maitin warns
09 July 2023
10 கிலோ அரிசியின் சில்லறை விலை அடுத்த மாதம் குறைந்த பட்சம் 1 வெள்ளி அதிகரிக்கும் என்று மைடின் பேரங்காடி குழுமத்தின் தலைவர் டத்தோ அமீர் அலி மைடின் எச்சரித்துள்ளார்.
கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி உட்பட பல வகையான அரிசி வகைகள் 1 முதல் 2 வெள்ளி வரை உயர்த்தப்பட்டது.
இதே போன்று 10 கிலோ அரிசி 1 முதல் 2 வெள்ளி வரை மற்றொரு விலை அதிகரிப்பு ஏற்படும் என விநியோகிப்பாளர்கள் எங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இது வெளிப்படையாக 10 கிலோ அரிசியின் சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்படும்.
இந்த விலை உயர்வுக்கு ரிங்கிட்டின் பலவீனம், மின்சாரம், உழைப்பு உட்பட இதர செலவுகள் அதிகரிப்பதே காரணம் என்று டத்தோ அமீர் அலி கூறினார்.
5% விற்பனை வரி, சேவை வரி எஸ்எஸ்டிக்கு உட்பட்ட உள்ளூர் வெள்ளை அரிசியை சப்ளையர்கள் 12.80 வெள்ளிக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
இது 5 கிலோ பை ஒன்றுக்கு 12.50 வெள்ளியில் இருந்து சில்லறை விற்பனையாளர்களின் லாபத்தைக் குறைக்கிறது.
5 கிலோ அரிசிக்கு 12.50 வெள்ளியில் இருந்து 12.80 வெள்ளியாக உயர்ந்துள்ளது.
ஆனால், நாங்கள் 13 வெள்ளி விலையில் விற்க வேண்டும்.
புத்ராஜெயாவின் விலைக் கட்டுப்பாடு விதிகளின் அடிப்படையில் இந்த விலையை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர் கூறினார்.