தாமான் கெம் பிளாட் தீ விபத்தால் 350 பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 7,000/- ரிட்கிட் நிதியுதவி கே.அரவிந்த்
Ridkit financial assistance of 7,000/- to 350 residents affected by Taman Kem Flat fire
Date : 04 March 2025 News by: Ganapathy
தாமான் கெம் பிளாட் தீ விபத்தால் 350 பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 7,000/- ரிட்கிட் நிதியுதவி தேசிய இளைஞர் பகுதித் தலைவர் கே.அரவிந்த்
இச்சம்பவம் கடந்த 24.2.25 அன்று கிள்ளான், தாமான் கெம் அடுக்குமாடியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 86 வீடுகளும், 350 குடியிருப்பாளர்களும் பாதிக்கப்பட்டனர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாகச் சென்ற மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர், நிலைமையினை சரி செய்வதற்கு உடனடி நடடிவடிக்கை எடுத்தார். அதன்படி, தீவிபத்தால் அடுக்குமாடியின் பிரதான தொட்டியின் நீர் வரத்து துண்டிக்கப்பட்டதால், மஇகா சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதி, ஆயர் சிலாங்கூர் வாரியத்திடம் தொடர்பு கொண்டு, இரண்டு பெரிய நிலையான நீர் தொட்டிகளை பொருத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டது.
மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இளைஞர் 7,000/- ரிட்கிட் நிதியுதவி அளித்தது. இந்த உதவியை வழங்கிய மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ டத்தோ எஸ் விக்னேஸ்வரனுக்கு மஇகா இளைஞர் பகுதி உறுப்பினர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், இந்த பரபரப்பான சூழ்நிலையில் உதவிகள் வழங்கிய உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் இளைஞர் பகுதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொட்டது.
www.myvelicham.com Face book Myvelicham.com Tik tok myvelichamnews advt call ; 014-3933002