வழிபாட்டுத் தலங்களுக்கு 2014 முதல் 1.7 கோடி வெள்ளி மானியம்...
RM 1.7 crore silver subsidy for places of worship since 2014
24 June 2023
சிலாங்கூரிலுள்ள இந்து ஆலயங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு மாநில அரசு கடந்த பத்தாண்டுகளில் சுமார் 1 கோடியே 73 லட்சத்து 69 ஆயிரம் வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டு தோறும் 82 முதல் 217 வரையிலான ஆலயங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் பத்து லட்சம் வெள்ளியாக இருந்த வழிபாட்டுத் தலங்களுக்கான மானியம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 23 லட்சம் வெள்ளியாக உயர்வு கண்டுள்ளது.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 80 லட்சம் வெள்ளி மானியத்தில் சுமார் 23 லட்சம் வெள்ளியை இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் பெற்றுள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.
ஆலயங்களைப் புதுப்பிப்பது, விரிவாக்கம் செய்வது மற்றும் சமய நடவடிக்கைளை மேற்கொள்வது ஆகிய நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.