நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவரம் பிரதமர் துறை அலுவலகம் அறிவிப்பு
Salary of Members of Parliament Prime Minister's Office
Date: 12 March 2025 News By: Ganapathy
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவரம்
பிரதமர் துறை அலுவலகம் அறிவிப்பு
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் மிகக் குறைவாக உள்ளதை குறிப்பிட்டு பேசியதைத் தொடர்ந்து பிரதமர் துறை அலுவலகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மாதம் ஒன்றுக்கு RM 25,700 வெள்ளி சம்பளமாகவும், அலுவல் பணிகளுகளுக்கு ஏற்பவும், கோரிக்கைகளுக்கு ஏற்பவும் கொடுப்பனவுகள் பெறுவதற்கு உரிமையுண்டு என்று பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஒருசில சட்டமன்ற உறுப்பினர்களின் வருமானம் மிக குறைவாக இருப்பதால் அன்றாடச் செலவீனங்களை ஈடுகட்ட முடியாமல் கடனில் தள்ளப்படுவதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை பிரதமர் துறை வெளியிட்டது.
அந்தக் கொடுப்பவனங்களின் விவரம் வருமாறு:
நாளென்றுக்கு நாடாளுமன்ற அமர்வு – RM400 ரிங்கிட்
கூட்டத்திற்கு (PAC) வருகை -RM 300 ரிங்கிட்
நாடாளுமன்றத்திற்கு வெளியே நடக்கம் கூட்டம் – 250 ரிங்கிட்
அதிகாரப்பூர்வ விளக்கக் கூட்டம் - 300 ரிங்கிட்
நாடாளுமன்றத்தில் தினப்படி செலவு – RM100 ரிங்கிட்
உணவுப்படிRM 340 ரிங்கிட்
அன்றாட தினப்படி RM170 ரிங்கிட்
வெளிநாட்டுப் பயண உணவுப்படிRM 340
இதரச் செலவு படி RM170
25 உதவிக் குறிப்புகளுக்கான படி /
அந்நியச் செலவாணி இழப்புக்கு சரியான கோரிக்கை
அது எவ்வாறாக இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினரின் தகுதிக்கேற்ப கொடுப்பனவைகள் வழங்கப்படுகிறது. ஆகமொத்தம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டத்தட்ட RM30009 முதல் RM40000 வரை சம்பளமாகப் பெறுகின்றனர்.
உறுப்பினர்கள் தங்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு செலவு செய்யுமாறு பிரதமர் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தவிர, எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளுக்கும் அத்தொகுதி மக்களுக்கான திட்டங்களுக்கு நிதி நேரடியாக வழங்கடுகின்றன.
முன்பு பிரதமர் அன்வார் எதிர்க்கட்சியில் இருந்தபோது, போதுமான அரசாங்க ஒதுக்கீடு இல்லை என்றும், இருந்திருந்தால் உறுப்பினர்கள்RM 40,000 ரிங்கிட் வரை சம்பாதிக்கலாம் என்று விமர்சனம் செய்து வாதிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.