போலி வாகன பராமரிப்பு எண்ணெய் விற்பனை 2,074 எண்ணெய் புட்டிகள் பறிமுதல்

Sale of counterfeit vehicle maintenance oil 2,074 Oil bottles seized

போலி வாகன பராமரிப்பு எண்ணெய் விற்பனை 2,074 எண்ணெய் புட்டிகள் பறிமுதல்

Date : 21 March 2025 News By: Rajen  

போலி வாகன பராமரிப்பு எண்ணெய் விற்பனை
2,074 எண்ணெய் புட்டிகள் பறிமுதல்

பத்துகாஜா மற்றும் பண்டார் ஸ்ரீ பொட்டாணி ஆகிய இரு இடங்களில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், 37,035.20 ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 2,074 போலி வாகன பாராமரிப்பு எண்ணெய் புட்டிகளை பறிமுதல் செய்துள்ளது. 

புதன் கிழமை இரு வெவ்வேறு கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டதாகவும், அதனால் இந்த எண்ணெய் முடக்கம் செய்ய நேரிட்டதாகவும் அதன் பேராக் இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். .