விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு  மனித நேய உதவிகளை வழங்கப்பட்டனர்.

School children affected by accidents Humanitarian aid was provided.

விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு  மனித நேய உதவிகளை வழங்கப்பட்டனர்.

Date :12 April 2025 News By :RM Chandran 

விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு 
மனித நேய உதவிகளை வழங்கப்பட்டனர்.

பள்ளித் தவணை தொடங்கிய இரண்டாவது நாள் 18-2-2025 அன்று காலையில் பள்ளிக்குப் போகும் வழியில் ஒன்றாம் வகுப்பு மாணவன், பாலர் பள்ளி மாணவி அவரது தங்கை ஆகிய இருவரும் விபத்தில் சிக்கியச் சம்பவம் பலரையும் கலங்க வைத்தது

. 

சிறுவனின் கை எலும்பு பாதிக்கப்பட்ட வேளையில், அவரது தங்கைக்கு முழங்கால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது உடல்நலம் தேதி வருகின்றனர். 

அணமையில் அவர்களது குடும்ப சூழ்நிலை அறிந்த, மலேசிய இந்து தர்ம மன்றம்,  ஸ்ரீ ஐயப்பன் சேவை சமாஜம், பினாங்கு வட்டார சேவை மையத்தினர் ஆகியோர் அக்குழந்தைகளின் இல்லத்திற்கு நலம் விசாரிக்கச் சென்றதோடு சிறுமிக்கு 600 வெள்ளி பெருமானமுள்ள சக்கர நாற்காலியும், 400 வெள்ளி ரொக்கமும் வழங்கினர்.

இதனிடையே, தேசிய வகை சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், இந்த இரு மாணவர்ககளின் கல்வி நிதியாக 750 வெள்ளி வங்கிக் கணக்கில் சேரத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பினாங்கு வட்டார மலேசிய இந்து சங்கம்,  ஸ்ரீ ஐயப்பன் சேவை மையம், சமூக நல இலாகா ஆர்வலர் துவான் ஹாஜி முகமட் ஹாபிஸ்  ஆகியோர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

www.myvelicham.com / Face Book / You Tube / Tik Tok / Intg / Linkedin / Google