சீபீல்டு ஆலயம் நிலப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு- அமிருடின்
Seafield Temple to be an amicable solution to land dispute- Amiruddin
05 August 2023
சிலாங்கூர் மாநிலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் நிலப் பிரச்சனைக்கு மாநில அரசு சுமூகமான முறையில் தீர்வு கண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசின் சீரிய முயற்சியின் வாயிலாக சுபாங் ஜெயா, சீபீல்டு தோட்ட ஆலயம் உள்பட பல வழிபாட்டுத் தலங்கள் எதிர் நோக்கி வந்த நிலப் பிரச்சனை தீர்க்கப்பட்டு அவை முறையாக செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நேற்று, இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்திய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் இதனைக் கூறினார்