சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டியில்  ரிவர்சைட் தோட்டப்பள்ளி சாதனை

Selangor State Tamil Schools Crossover competition Riverside Plantation School Achievement

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான குறுக்கோட்டப் போட்டியில்  ரிவர்சைட் தோட்டப்பள்ளி சாதனை

Date  18 March 2025 News By : 

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான
குறுக்கோட்டப் போட்டியில்  ரிவர்சைட் தோட்டப்பள்ளி சாதனை

கோலசிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 94 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். 

பெண்கள் குழுப் பிரிவில் கோல சிலாங்கூர் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவிகள் வெற்றிப் பெற்றனர். சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்தக் குறுக்கோட்டப் போட்டியின், ஒட்டுமொத்த வெற்றியாளராக இரண்டாம் இடத்தை கோல சிலாங்கூர், ரிவர் சைட் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடியது. 

இப்போட்டிக்கான பயிற்சியை அளித்த ஆசிரியர் மணிமாறன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிறப்பான முறையில் பயிற்சி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப் பெற்றவர்களுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி பழனியாண்டி வாழ்த்துகள் கூறினார். 

இப்போட்டி சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியம், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றும், ஒய்வுப் பெற்ற இராணுவ சங்கம், லெஜண்டரி ரைடஸ் கிளப் மலேசியா ஆகிய அமைப்புகளின் ஆதரவில் நடைபெற்றது.