சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டப் போட்டி

Selangor State Tamil Schools Inter Cross Run Competition

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டப் போட்டி

Date :21 March 2025 News By: Maniventhan 

கோலசிலாங்கூர் மார்ச் 21,

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் கோலசிலாங்கூர் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டி சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் & சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம்,  ஓய்வு பெற்ற
இராணுவ வீரர் சிலாங்கூர் சங்கத்தினர் & லேஜண்டரி ரைடஸ் கிளப் மலேசிய ஆகிய அமைப்புகளின் ஆதரவில் நடைபெற்றது

.

இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநில 94 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலாங்கூர் மாநில பாலர்பள்ளி & தமிழ்ப்பள்ளி உதவி இயக்கு சீ.மணிசேகர், மன்றத்தின் உயர்மட்டத் தலைவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

பெண்கள் குழுப் பிரிவில்  கோலா சிலாங்கூர் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இக்குறுக்கோட்டப் போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக இரண்டாம் இடத்தை கோல சிலாங்கூர், ரிவர் சைட் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடியது. வெற்றியாளர் அனைவருக்கும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி பழனியாண்டி வாழ்த்துகள் கூறினார். 

மேலும் பயிற்சி அளித்த ஆசிரியர் மணிமாறன் மற்றும் ஆதரவு வழங்கிய மற்ற ஆசிரியர் களுக்கும் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்து க் கொண்டார். அடுத்து,
போட்டியின் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்த யாவருக்கும் நன்றியினை சமர்ப்பித்தார்.

www.myvelicham.com face book tik tok /you tube