செமினி சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 'தீபா கிறிஸ்துமஸ்'.
Semenyih Assembly Constituency 'Deepa Christmas' in the arrangement.
Date :27 Dec 2024 News By - RM Chandran
செமினி சட்டமன்றத் தொகுதி இந்தியர் பிரதிநிதி பொறுப்பாளர் திரு.ப.பூபாலன் ஏற்பாட்டில் அண்மையில் செமினி தாமான் சீரே பகுதியில் 'தீபா கிறிஸ்துமஸ்'
விருந்து நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த செமினி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு Ustaz Nushi Mafodoz அவர்கள் அதிகாரப்பூர்வ நிகழ்வை தொடக்க வைத்து உரையாற்றினார்
.
"பாஸ் கட்சியானது அனைத்து இனங்களையும் அரவணைக்கும் மதச்சார்பற்ற காட்சியாகும். ஆனால் ஆளும் அரசாங்கம் மக்களிடையே
இனத் துவேசக் கருத்துக்களை கூறி நாட்டு மக்களை திசை திருப்பும் போக்கை கையாண்டு வருகின்றது.
அவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசாங்கத்தின் மானியம் அதிகமாகும். ஆனால் அவற்றில் பாதி கூட எதிர் காட்சிகளுக்கு வழங்குவதில்லை.
எதிர் கட்சிகளுக்கு வாக்களித்த ஒரே காரணத்தினால் மக்களை ஆளும் அரசாங்கம் பலி வாங்கி வருகிறது.
இந்த நிகழ்வு கூட எனது இந்திய மக்களின் பிரதிநிதி இளைய தளபதி விஜி பூபாலன் எப்போது ஏற்பாடு செய்வார் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன் என்று கூறிய உஸ்தாட் நூஷி,
நானும் உங்களை போன்ற பி 40 தரப்பு மக்களை சேர்ந்தவன். எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் ஒதுக்கப்படும் சிறிய மானியத்தையும் வைத்து மக்களின் சேவைகளை ஆற்றி வருவதாக கூறினார்
.
எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் டத்தோஸ்ரீ குமார்,
Persatuan Kebajikan Insan Istimewa Selangor Dr.Nisah, Dato Sashi, Dato Pannirselvam, ஆகியோருக்கு செமினி சட்டமன்ற உறுப்பினரான Ustad Nushi Mafodoz நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சிலாங்கூர் மானில பாஸ் கட்சி இந்தியர்கள் பிரதிநிதியின் துணைத்தலைவர் டத்தோ. பன்னீர் செல்வம் " பாஸ் கட்சி யாரையும் மதம் மாறச்சொல்லவில்லை.
நமது வழிபாட்டு தளங்களுக்கும் எந்த விதமான ஆட்சேபம் தெரிவிக்கவில்லை ஆனால் அவர்களை ஆதரித்தல் நமக்கு ஆபத்து நேரும் என்று சிலர் பரப்புரை செய்து வருவதாக சிலாங்கூர் மாநில பாஸ் கட்சியின் இந்தியர் பிரதிநிதி துணைத் தலைவரான பன்னீர் செல்வம்
தெரிவித்தார்.