செந்தோசா சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் குணராஜ்க்கு மீண்டும் வாய்ப்பு
Sentosa Assembly candidate Dr Gunaraj George gets another chance
25 July 2023
சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை பெற இதுவே நல்ல தருணம். நம்மிடையே ஒன்றுப்பட்ட நல்ல ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் இந்தியர்களின் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஒற்றுமை அரசாங்கத்துக்கு உதவும் செந்தோசா சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் என்று கூறினார்
அரசியல் ஒற்றுமை வழி மஇகா தலைவர்கள் உட்பட அனைவரின் ஒப்புதலுடன், ஒரு வருடத்திற்குள் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகப் பிரதமர் அளித்து வரும் உறுதிமொழி நமக்கு நம்பிக்கை அளிக்கிறது
நாம் ஒன்று படுவதன் மூலம் இந்த தருணத்தை பயன்படுத்தி நமது எண்ணத்திற்கு செயல்வடிவம் அளிப்போம்.
இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறுவது உறுதி செய்வதற்கான அரசியல் விருப்பமும், உறுதியும் நமக்குத் தேவை.
இது மாற்றத்திற்கான நேரம் ! பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மஇகாவைச் சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து இந்தியத் தலைவர்கள், தன்னார்வ நிறுவனம் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றுபட்டு, நமது சமூகத்தை உயர்த்த உறுதியுடன் செயல் படுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இன்று நாம் இடும் அடித்தளம், வருங்காலத் தலைமுறையினரின் சிறந்த எதிர் காலத்திற்கு வழி வகுக்கும் என்று டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கூறினார் .