நாம் இன்னும் கையேந்தும் சமூகமாக இருக்க வேண்டுமா? T.Subramaniam
Should we still be a hands-on community? T.Subramaniam
Date 18 Dec 2024 News By: Subramaniam Tangavelu
வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்கள் ஆதரவு பாக்காத்தான்
ஹாரப்பான் கட்சிக்கு கிடையாது என்று சுப்ரமணியம் தங்கவேலு கூறினார்.
தீபாவளி போன்ற பெரு நாள் காலங்களில் உணவு கூடைக்கும் அன்பளிப்புக்கும் கையேந்தும் சமுதாயமாக இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் இருக்கப்
போகிறோம் என்று கேள்வி எழுப்பினார் சுப்ரமணியம் தங்கவேலு.
மேலும் அவர் பேசும் போது, எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன.இவர்களால் இந்திய சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மையும் இல்லை. வேத மூர்த்தி என்ன சாதாரண ஆளா அவர் ஒரு கட்சி, தற்போது ராமாசாமி ஒரு கட்சி, ஏற்கனவே மஇகா,ஐபிஎப், மக்கள் நீதி கட்சி,தனனேந்திரன் கட்சி என்று ஏகப்பட்ட கட்சிகள் உள்ளன, இருக்கிற இந்தியர்களை இவர்களாக கூறு போட்டுக்கொண்டார்கள். அத்தகைய இந்தியர்களுக்கு இவர்கள் ஆற்றிய சேவைகள் என்ன என்பதை யாராலும் பட்டியலிட முடியாது.
இந்தியர்களின் பெயரை வைத்தே இவர்கள் சம்பாதித்தது அதிகம். ஆளாளுக்கு ஒரு கட்சிகளை திறந்து இவர்கள் எதைச்சாதிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை என்றார் சுப்ரமணியம் தங்கவேலு.
எல்லாமே அவர்களின் சுய நலத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்தை பணயம் வைத்து இவர்கள் தான் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். யாருமே இந்திய சமுதாயத்திற்காக போராட வில்லை என்று குற்றம் சாட்டிய சுப்ரமணியம் தங்கவேலு
,
இத்தனை கட்சித்தலைவர்களும் ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்து இந்தியர்களின் நிறை குறைகளை பேசி முடிவெடுக்கலாம் ஆனால் எல்லோருக்கும் ஒரு ஈகோ.நான் தலைவன் என்கிற இறுமாப்பு இந்த நிலையில் சமுதாயம் எங்கிருந்து ஒன்று படுவது ஆனால் கட்சித்தலைவர்கள் மட்டும் இந்திய சமுதாயத்தின் பெயரைச்சொல்லி சொகுசாக வாழ்கிறார்கள். என்பதை எந்த கட்சி தலைவர்களாலும் மறுக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்பினார் சுப்ரமணியம் தங்கவேலு
.
மலாய்க்காரர்கள் ஒன்று சேரமாட்டார்கள் என்று கூறும் தலைவர்கள், அந்த சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினைகள் எழந்தால் அனைவரும் குரல் கொடுக்கிறார்கள் நாம் அப்படியா இருக்கிறோம்?
பாக்காத்தான் ஹாரப்பான் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று எதிர் பார்த்த இந்திய சமுதாயத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதுமட்டுமல்ல, தந்திரம் அடைந்த நாள் முதல் மலேசிய அரசியலமைப்பில் அரசாங்க அமைச்சரவையில் இந்தியர்களின் பிரதிநிதியாக ஒரு முழு அமைச்சர் இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இந்தியர்களின் முழு அமைச்சர் பதவி பரிபோனது இது மடானி அரசாங்கத்தின் சாதனை என்று கூறவேண்டும்.
'அனைத்து மக்களும் என் பிள்ளைகள் என்று பேசியவர், அனைத்து பிள்ளைகளையும் அனாதையாக்கி விட்டதை மக்கள் புரிந்து உணர்ந்து கொண்டனர்.
'
2026 ஆம் ஆண்டில் நடை பெறும் பொதுத்தேர்தலில் 80 விழுக்காடு இந்தியர்கள் பாக்காத்தான் ஹாரப்பான் கட்சியை ஆதரிக்கப் போவதில்லை. இருக்கும் 20 விழுக்காட்டினர் ஓட்டுப் போட வேண்டாம் இவர்களால் எந்தவொரு நன்மையும் இல்லை என்ற மன நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்பத்தில் உள்ளதாகவும் சுப்ரமணியம் தங்கவேலு தெளிவுபட குறிப்பிட்டார்.
News Translate By : RM Chandran
www.myvelicham.com Face book / Tik Tok / You Tube /